உன்னைத்தேடும் முயற்சியில்..
எழுத யத்தனிக்கும்
எல்லாக்
கவிதைகளுக்குள்ளும்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நீ !
உன்னைத்தேடும்
முயற்சியில்
வார்த்தை
வசப்படாமல்,
ஏதோவொன்றை
கிறுக்கவும் முடியாமல்
காகிதச்சிறையில்
சிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!
எப்படியாவது
கண்டுபிடித்து
விடலாமென்று
பேனா மையை
அனுப்பினால்
அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்!
உன்னை
வெளியே
கொண்டுவர
அதிக வார்த்தைகளை
வீணாக்க
விரும்பவில்லை!
ஒரு அறிவிப்பு
வெளியிடுகிறேன்.
'முத்தமிடும்
நேரமிது!'
இதழ்களை
மட்டுமாவது
அனுப்பிவை!
நான் எழுதவேண்டும்.!
அளந்தது சுரேகா...
ReplyDeleteநல்லா அளந்திருக்கீங்க
புதுகைத் தென்றல் said...
ReplyDelete//அளந்தது சுரேகா...
நல்லா அளந்திருக்கீங்க//
வாங்க...ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.!
நன்றி!
It is very beautiful.. Udene yenakku ..............
ReplyDeleteAthu sari intha kavithai yarukku arpanippu...?
sayu said...
ReplyDelete//It is very beautiful.. Udene yenakku ..............
Athu sari intha kavithai yarukku arpanippu...?//
நன்றிங்க!
உருவகத்துக்கெல்லாம் உருவம் கொடுக்காதீங்கப்பு!
//காகிதச்சிறையில்
ReplyDeleteசிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!//
நல்ல வரிகள்..
//அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்//
முரண் நன்றாகப் பொருந்தியிருக்கிறது..
பாச மலர் said...
ReplyDelete//நல்ல வரிகள்..//
//முரண் நன்றாகப் பொருந்தியிருக்கிறது..//
நன்றிங்க..!
உங்கள் வருகைக்கும்..வாழ்த்துக்கும்!
surekaa!
ReplyDeleteNalla podayil irukkirergal yendru therikkirathu...
Athuvum kadhal podayil....
Sari ithalgal vanthu sernthatha? .....
Did you seen thamizachi's recent pathivigal..."Vikthor uykoven......." it is very nice.
ReplyDeleteoruvelai athoda effecta irukkumo endru parthen......
//எழுத யத்தனிக்கும்
ReplyDeleteஎல்லாக்
கவிதைகளுக்குள்ளும்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நீ !//
ரொம்ப ரொம்ப சரிங்க..
sayu said...
ReplyDelete/Did you seen thamizachi's recent pathivigal..."Vikthor uykoven......." it is very nice.
oruvelai athoda effecta irukkumo endru parthen......//
பாத்தேங்க..! ஆனா அவர் எவ்வளவு பெரிய ஆள் ...
நான் சும்மா கிறுக்கினதுங்க இது!
ஆமா..
நீங்க ஜூன் 2006லிருந்தே பதிவுலகத்தில் இருக்கீங்க.! ஒரு பதிவு கூட போடலையா?
ரூபஸ் said...
ReplyDelete//ரொம்ப ரொம்ப சரிங்க..//
வருகைக்கு நன்றிங்க.!
உணர்வுக்கு மகிழ்ச்சிங்க!
காகிதச்சிறையில்
ReplyDeleteசிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!//
//அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்//
"நச்" என்று இருக்கிறது... ம்ம்ம் தொடரட்டும் :)
Thekkikattan|தெகா said...
ReplyDelete//"நச்" என்று இருக்கிறது... ம்ம்ம் தொடரட்டும் :)//
நன்றிங்கண்ணா.!
வித்தியாசமான கவிதை சுரேகா!
ReplyDeleteஇந்தக் கவிதையைச் சொன்ன விதம் அலாதியானது.
அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி said...
ReplyDelete//வித்தியாசமான கவிதை சுரேகா!
இந்தக் கவிதையைச் சொன்ன விதம் அலாதியானது.
அன்புடன் புகாரி//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
கவிஞர் புகாரி அவர்களே!
Anbu thambi, Sure, really good, vaazhga Valamudan
ReplyDeleteannaaa
BALU
Dubai
//Pattukkottai-BALU said...
ReplyDeleteAnbu thambi, Sure, really good, vaazhga Valamudan//
Nandringganna!