மரம் தங்கசாமி
அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்!
அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார்.
'அய்யா காசு குடுங்கய்யா!'
ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை செய்யலாமில்ல?
'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!'
அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா?
நல்லா பாக்குறேன் அய்யா
'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்.
கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...?
ம். 18 ரூவா இருக்குங்க!
சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல?
சரிங்கய்யா..!
என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று!
உடனே ஒரு உள்ளூர் நண்பருக்கு செல்பேசியில் பேசி , பத்து ரூபாய் வாங்கிக்கொள்கிறார். இப்போது அவர் கையில் இருப்பது 15 ரூபாய்.!
ஒரு போன் வருகிறது. அய்யா..! நான் கீரமங்கலத்திலேருந்து சீனிவாசன்
பேசுறேன்.
சொல்லுங்க!
உங்ககிட்டதான் நம்ம வீடு கட்டும்போது தேக்கு மரம் வாங்கினேன்..இப்ப நம்ம சகலை வீட்டுக்கும் அதேமாதிரி.2 தேக்கு மரம் வேணுங்கய்யா!
சரி! தந்துட்டா போச்சு! ஒரு மரம் 25000 ரூவா ஆகும்! கிளையெல்லாம் கிடைக்காது.! நடுமரம் மட்டும்தான் தருவேன் பரவாயில்லயா?
தெரியுங்கய்யா.! எப்ப வாங்கிக்கலாம்?
உங்களுக்கு எப்ப வேணும்?
இன்னைக்கு கிடைச்சாக்கூட பரவாயில்லங்கய்யா?
அப்படியா? அப்ப ஒரு லாரியை எடுத்துக்கிட்டு கீரமங்கலத்துலயே காத்திருங்க..! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க வரேன். ! தோட்டத்துக்குப்போய் வெட்டிக்கலாம்.!
என்று கூறிவிட்டு...
கண்டக்டர்...கீரமங்கலம் ஒண்ணு குடுங்க! என்று 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறார்.
இப்போது அவர் கையில் இருப்பது 2 ரூபாய்.!
கீரமங்கலம் சென்று சீனிவாசனை சந்தித்து மரம் வெட்டும் ஆட்களுடன் லாரியில் சென்று தேக்குமரங்களை வெட்டிக்கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மீண்டும் இரண்டு மரக்கன்றுகளை , வெட்டியவர்களை விட்டே நடச்சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த தொகையான ரூபாய் 50000த்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள்
நுழைகிறார்.!
அப்போது சொல்கிறார்..
நான் வளத்த மரங்கள்தான் எனக்கு ஆதாரம்...2 ரூபாயோட பஸ்ஸில் வந்தவனுக்கு....50000ரூபாயோட காத்திருக்குதுங்க என் புள்ளைங்க! இந்த மரங்க! இதுங்களை இத்தனை ஆண்டுகளா வளக்குறதுனாலதான். அதுங்க என்னை வளக்குதுங்க! -இப்படி சிலாகித்துப்பேசுகிறார்.!
அவர்...தங்கசாமி!
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடியைச்சேர்ந்த இவர்...கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே ஒரு தவமாகச் செய்துவருகிறார். தன் பெயரான தங்கசாமி என்பதையே மரம் தங்கசாமி என்று எல்லோரும்அழைக்கும்படி, ஊருக்கு மரங்களால் புகழ்சேர்த்தவர்!
தன் சொந்த நிலத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு அவற்றை, குழந்தைகளை விட அற்புதமாய் பராமரித்து.. அவைகளே உலகம் என்று வாழ்ந்து வருபவர்.!
மரத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால், ' இத்தனை தகவல்களா?' என்று வியக்க வைப்பவர்!
அவரைப்பார்க்க வருபவர்களுக்கு அவர் தரும் முதல் மரியாதை.. ஒரு மரக்கன்றும் .,.அதை நடும் இடமும் காட்டி...நம் கைகளாலேயே நட வைத்து ஒரு நோட்டில் எழுதி அதனைப் பதிவு செய்வது.!
இங்கு 100க்கும் மேற்பட்ட வகை மரங்களை வளர்ப்பதாகச்சொன்னார்.
செஞ்சந்தனம் மரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.!
சந்தன மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன...!
தேக்கு மரங்கள் சிலிர்த்து நிற்கின்றன! ( எல்லா மரங்களையும் நேர்க்கோட்டில் வளர்ப்பது எப்படி என்றுசொல்லித்தந்தார்)
..அய்யா! இதுங்களோட மதிப்பு யாருக்குமே தெரியல.! சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்ல!சாதாரணமா பாத்து வளத்ததுக்கு..ஒரேநாளில்ஐம்பதாயிரம் ரூவா யாரு குடுப்பா? இந்த மரங்கள் குடுக்கும்ங்க!
நான் கிராமத்தான்...என்று ஆரம்பித்து.,பல்கலைக்கழகமாணவர்களுக்கு, 3 மணி நேரம்
வகுப்பெடுக்கும் அளவுக்கு யதார்த்தமான பேச்சு நடை!எளிமை! இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதுன்னு...
இவரைப் பார்த்து தாராளமாகச் சொல்லலாம்..!
இவரைப்பார்க்கச்சென்றபோது....இன்னொரு அதிர்ச்சிகாத்திருந்தது..!
ஆம்...இவர்...கடவுளை கண்முன்னேகாட்டினார்..அது...........
(தொடரும்)

இதுக்கு ரெண்டாவது பகுதியா... :)).
ReplyDeleteமரம் கோல்ட்சாமியை நன்றாக பார்த்துக்கொள்... இப்படி மக்களையெல்லாம் பக்கத்தில வைச்சிக்கிட்டு எங்கொங்கோ திரிய வேண்டி இருக்கு. பொழப்பு கத்துக்க.
ஆமா, எத்தனை வருஷம் எடுத்துக்குது ஒரு மரம் 25,000 ரூயாய் ஈட்டிக் கொடுக்க. தேக்கு மரங்கள் ரொம்ப வருஷம் எடுத்துக்குமோ வளர்வதற்கு...?
சிறப்பானவரப் பத்தி சொல்லியிருக்கிங்க, சுரேகா!
ReplyDeleteசீக்கிரம் கடவுளக் காட்டுங்க :)
நானும் கீரமங்கலத்துக்குப் போகும்போது அவரச் சந்திக்க முயற்சி செய்றேன்.
Thekkikattan|தெகா said...
ReplyDelete//இதுக்கு ரெண்டாவது பகுதியா... :)).//
பதிவு ரொம்ப பெரிசா ஆகிடக்கூடாததேன்னுதான்!
//மரம் கோல்ட்சாமியை நன்றாக பார்த்துக்கொள்... இப்படி மக்களையெல்லாம் பக்கத்தில வைச்சிக்கிட்டு எங்கொங்கோ திரிய வேண்டி இருக்கு. பொழப்பு கத்துக்க.//
கண்டிப்பா நல்லா பாத்துக்குவோம்!
//ஆமா, எத்தனை வருஷம் எடுத்துக்குது ஒரு மரம் 25,000 ரூயாய் ஈட்டிக் கொடுக்க. தேக்கு மரங்கள் ரொம்ப வருஷம் எடுத்துக்குமோ வளர்வதற்கு...?//
15 லிருந்து 20 ன்னாரு!
தஞ்சாவூரான் said...
ReplyDelete//சிறப்பானவரப் பத்தி சொல்லியிருக்கிங்க, சுரேகா!
சீக்கிரம் கடவுளக் காட்டுங்க :) //
காட்டிருவோம்...! :)
//நானும் கீரமங்கலத்துக்குப் போகும்போது அவரச் சந்திக்க முயற்சி செய்றேன்.//
அங்கிருந்து கொத்தமங்கலம் செல்லும் வழி.! சேந்தங்குடி என்ற ஊர்!
Thekkikattan|தெகாThekkikattan|தெகா,தஞ்சாவூரான் தஞ்சாவூரான்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
அக்கரவாரத்துத் தம்பீ, நீ யாருப்பா...ஆளத் தெரியலயே... வயசாகிப் போச்சப்பா...
ReplyDeleteதெ.காவைப் பத்திச் சொல்லணும்னு நெனச்சேன். ஏற்கெனவே தெரிஞ்சிருச்சா! நடத்துங்க.
sundara அட் ஜிமெயிலுக்கு ஒருவரி தட்டிவிடுங்க.
நல்லவங்களை அறிமுகம் செய்யறீங்க
ReplyDeleteமிக்க நன்றி.
எனது பலநாள் கோறிக்கை ஒன்னு உங்ககிட்ட இருக்கு. அவரையும் ஒரு அறிமுகப் படுத்திடுங்களேன்.
(பிரபல ஓவியர் ஆர்டிஸ்ட் ராஜா அவ்ர்களைப் பத்திதான் சொல்றேன்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தங்க சாமி,
ReplyDeleteநல்ல அறிமுகம்.
எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு!
ReplyDeleteஅன்புடன் அருணா
<==
ReplyDeleteசுரேகா.. said...
//ஆமா, எத்தனை வருஷம் எடுத்துக்குது ஒரு மரம் 25,000 ரூயாய் ஈட்டிக் கொடுக்க. தேக்கு மரங்கள் ரொம்ப வருஷம் எடுத்துக்குமோ வளர்வதற்கு...?//
15 லிருந்து 20 ன்னாரு!
==>
அப்படிச் சேர்த்துச்சொல்லுங்கோ.அப்பத்தான புரியும். பங்குச்சந்தையில(நம்ம புத்தி நம்மள விட்டு எப்படி போகும்) கொஞ்சம் பணம் லச்டத்தில வேணும்னு நினைக்கிரவங்களுக்கு .
சுந்தரவடிவேல் said...
ReplyDelete//அக்கரவாரத்துத் தம்பீ, நீ யாருப்பா...ஆளத் தெரியலயே... வயசாகிப் போச்சப்பா...
தெ.காவைப் பத்திச் சொல்லணும்னு நெனச்சேன். ஏற்கெனவே தெரிஞ்சிருச்சா! நடத்துங்க.
sundara அட் ஜிமெயிலுக்கு ஒருவரி தட்டிவிடுங்க.//
மெயிலிட்டேன் அண்ணா!
புதுகைத் தென்றல் said...
ReplyDelete//எனது பலநாள் கோறிக்கை ஒன்னு உங்ககிட்ட இருக்கு. அவரையும் ஒரு அறிமுகப் படுத்திடுங்களேன்.
(பிரபல ஓவியர் ஆர்டிஸ்ட் ராஜா அவ்ர்களைப் பத்திதான் சொல்றேன்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
கண்டிப்பாங்க!
அவருக்கு ஒரு வலைப்பூவே போடணும்.
இருந்தாலும்..
விரைவில் அவரைப்பற்றி பதிவு வரும்..
மங்களூர் சிவா said...
ReplyDelete//தங்க சாமி,
நல்ல அறிமுகம்.//
வாங்க..வாங்க!
நன்றிங்க!
aruna said...
ReplyDelete//எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு!
அன்புடன் அருணா//
நன்றிங்க! வருகைக்கும் வாழ்த்துக்கும்!
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said
ReplyDelete//அப்படிச் சேர்த்துச்சொல்லுங்கோ.அப்பத்தான புரியும். பங்குச்சந்தையில(நம்ம புத்தி நம்மள விட்டு எப்படி போகும்) கொஞ்சம் பணம் லச்டத்தில வேணும்னு நினைக்கிரவங்களுக்கு .//
வாங்க சாமான்யன்!
:)
ஆமாங்க! வளர்த்ததுக்கும் மேல பலன் கொடுக்குதுங்கிறதுதான் மேட்டர்!
இரண்டாம் பகுதியை படித்துவிட்டு சிறிது குழம்பி திரும்ப முதல் பதிவு படித்தேன்! கிராமத்தில் இதுபோல் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்
ReplyDeleteplease post the contact details of மரம் தங்கசாமி
ReplyDeletedrbalap@yahoo.com