விருந்து @ சலூன் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
நான் சலூனுக்குப்போய் முடி வெட்ட ஆரம்பிச்சதை இங்க சொல்லியிருக்கேன் பாருங்க!
அந்த நேரம் பாத்து எனக்கு முடி வெட்டி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
முதலில் சுவாரசியம் இல்லாதது மாதிரி இருந்துட்டு..அப்புறம் நண்பனிடம் ...
டேய்..அந்த ஒரு புக்குதான் இருக்கா..இல்லை வேற நிறைய இருக்கா?
நான் பாத்தப்ப ஒரு புக்குதாண்டா இருந்துச்சு!
இது என்னடா வம்பா இருக்கு..நாம போற நேரத்தில் நிறைய பேர் இருந்து அதுல கொஞ்சம் வலுவானவன் அதை எடுத்து படிச்சிக்கிட்டிருந்தான்னா ஆசையெல்லாம் வீணா போயிருமேன்னு ஒரே கவலை.!
அப்புறம் ஒரு நாள் மீண்டும் அவனிடம்..!
ஆமா..அங்க முடி வெட்ட எவ்வளவுடா?
3 ரூபா! -
இதுவேறு கவலையா போச்சு. நம்ம குடும்ப சலூனில் 2 ரூபாதான். 50% நிதி இழப்பை ஏத்துக்கமாட்டாங்களேன்னு யோசிச்சு.. சலூனுக்குன்னு 2 ரூபாதான் வாங்குறது..ஆனா அதுக்கும் முன்னாடி எப்படியாவது ஒரு ரூபாய் தேத்தி வச்சிக்கிறதுன்னு ஒரு சாணக்கியத்திட்டம் போட்டேன்.
அப்பதான் வந்து சேந்தது..குழந்தைகள் திரைப்படம்..!அதைக்காட்டி ஒரு ரூபாய் அதிகமா வாங்கி (என்ன பொய் சொன்னேன்னு நினைவில்லை)
அதை திக் திக்குன்னு பாதுகாத்து வச்சிருந்தா..........
முடிவேற அந்த முறைன்னு பாத்து வேகமாவே வளராத மாதிரி ஒரு உறுத்தல்.. எப்படா அந்த நல்ல நாள் வரும்னு காத்திருக்கும்போது.. நண்பனிடம் சொன்னேன்.
டேய்..! நீ சொன்னது உண்மையான்னு செக் பண்ணப்போறேன்.! நாளைக்கு முடி வெட்டிக்கப்போறேன். அதுவும் குமார் சலூனில்னு சொல்லவும்,
அடடா! அதுக்கு இவ்வளவு நாளா காத்திருந்த..? ஏன் முடி வெட்டிக்கத்தான் அங்க போணுமா? சும்மா தலை சீவுற மாதிரி போய் பாத்துட்டு வரவேண்டியதுதானேடா? நான் பாரு..ஒரு தடவைதான் முடிவெட்டபோனேன். இப்பல்லாம் அடிக்கடி போய்...புது புக் வந்துருச்சான்னு பாத்துட்டு வந்துடுறேன். என்று சொன்னதோடு அல்லாமல்..
அதில் படித்த ஒரு கிளு கிளு கதையையும் எடுத்து விட்டான்.
ச்சை..நம்மல்ளாம் ஒரு ஜென்மமா? வகுப்பில் முதல் மாணவனா இருந்து என்ன பயன்.? ஒரு 'விருந்து' படிக்க இப்படி அல்லாடுறோமேன்னு..வீரம் அதிகமாக..பள்ளிவிட்டவுடன் நேராக குமார் சலூனுக்கு நடையைக்கட்டினேன்.
அங்குதான் எனக்கு அடுத்த ஆப்பு காத்திருந்தது.எங்களுக்கு வீட்டுக்கு முடிதிருத்த வருபவரின் மகன்தான் அந்த குமார்.! சலூனுக்குள் மெல்ல நுழைந்தபின் தான் அந்தக்கொடுமை
தெரிய வந்தது.
என்ன தம்பீ! நல்லா இருக்கியா? நீ அப்பாக்கிட்ட இல்ல வெட்டிக்குவ?
இல்லண்ணே ! சும்மா தலை சீவிக்கிட்டு போகலாம்னு வந்தேன்..
சீவிக்க! சீவிக்க!
என்று சொல்லிவிட்டு..ஒரு சீப்பையும் எடுத்து கையில் திணித்தார். அது மாலை நேரம்.. 3 பேர் அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் நோக்கம் சரியாகத்தெரியவில்லை. ஒருவருக்கு குமார் அண்ணன் ஷேவிங் செய்துகொண்டிருந்தார்.சலூனை ஒரு சுற்று பார்த்தேன். நல்ல பிள்ளை மாதிரி!
அது ஒரு 10க்கு 8 அடி அறை ! நீளமான கண்ணாடி..எதிரில் ஒரு சுழலும் நாற்காலி..அதற்கு
பின்புறம் ஒரு சிறிய பென்ச். அதில் பல புத்தகங்கள், நாளிதழ்கள்! பென்ச்சுக்கு மேலும் ஒரு நீளமான கண்ணாடி..ஆக உட்கார்ந்திருப்பவருக்கு அவரது பின் தலையும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதெல்லாம் அந்த காலகட்டத்தில் மிகவும் அபூர்வம்! மெதுவாக என் பார்வையை அந்த புத்தக, பேப்பர் குவியலில் ஓட்டி 'விருந்தை' தேடினேன்.உட்கார்ந்திருந்த ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது அது!ஒரு மஞ்சள் ஜாக்கெட் போட்ட பெண்ணின் வித்யாசமான புகைப்படம்.! மேலே 'விருந்து' என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தது..!
தலையை அப்படி இப்படி சீவிவிட்டு...மிகவும் யதார்த்தமாக போய் அமர்ந்தேன். கையில் ஒரு பாடாவதி நாளிதழை ( 'விருந்து' க்கு முன்னால் மற்ற எல்லாமே பாடாவதி தானே) எடுத்துக்கொண்டு இப்படி அப்படி நோட்டமிட்டேன். என் அருகில் அமர்ந்திருந்தவர் என்னைவிட மிகவும் உயரம். ஆக என் கண்மட்டத்துக்கு மேல்தான் விருந்து அமர்ந்திருந்தது. மீண்டும் அட்டையை மட்டும் தரிசிக்கும் பாக்கியம்.!
அந்த ஆள் ஒரு வரிவிடாமல் படிப்பான் போலிருந்தது..(நமக்கு புத்தகம் கிடைக்கவிடாமல் பண்ணியவனுக்கு எதுக்கு அவர் இவர் என்று மரியாதை?) 20நிமிடத்துக்கும் மேல ஓடிவிட்டிருந்தது. இதுக்கும் மேல் இங்கு இருந்தால் கண்டிப்பாக அப்பா கையால் டின், தகரடப்பா, எல்லாம் நிச்சயம் என்று பயந்து நான் போய்ட்டு வரேன்ண்ணே என்று கூறிவிட்டு....அப்புறம்..நாளைக்கு இங்க வ்ந்து முடிவெட்டிக்கிறேன் என்று ஒரு வியாபாரக்கொக்கியும் போட்டுவிட்டு கறுவிக்கொண்டே வீட்டுக்கு நடையைக்கட்டினேன்.
அடுத்தநாள் காலைவரை...அந்த மஞ்சள் ஜாக்கெட் அழகியைப்பற்றி படிக்கப்போகிறோம் என்று மிகத்தீவிரமான எண்ணம் வேறு என்னை வாட்டி வதைக்க அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, படிப்பது போல் பாசாங்கு காட்டி, 6மணிக்கெல்லாம் கிளம்பி..முடிவெட்டிக்கொள்ளப்போகிறேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு....கிளம்பினேன்.
6:15க்கெல்லாம் கடைவாசலில் போய் நின்றேன். கடை பூட்டியிருந்தது.ஆகா! இது என்னடா ? இன்று கடை லீவோ? நமக்கு நேரம் சரியில்லையோ? என்றெல்லாம் யோசித்துவிட்டு..கையைப்பிசைந்து கொண்டு இருக்கும்போது குமார் அண்ணனின் சைக்கிள் மணி காதில் தேவகானமாய் ஒலித்தது.
அப்பாடி ஒருவழியாய் வந்து சேர்ந்தாரய்யா மனிதர்ன்னு நினைத்துக்கொண்டே,
நான் சீக்கிரமே வந்துட்டேண்ணே!
அப்படியா? சரி இரு வந்துர்றேன்..
என்று கடையைத்திறந்துவிட்டு.. விளக்குமாறை எடுத்து கூட்டி..பத்தி கொளுத்தி காலைத்தொழிலுக்கான ஆயத்தங்களில் இறங்கிக்கொண்டிருந்த வேளையில்.. மீண்டும் நல்லபிள்ளை மாதிரி..பென்ச்சில் அமர்ந்து..'ஆஹா..போட்டிக்கு ஆளே இல்லை' என்று நினைத்துக்கொண்டே சுவரஸ்யம் இல்லாதமாதிரி நடித்துக்கொண்டே, புத்தகக்குவியலில் தேடினேன். தேவி, ராணி, சாவி, தாய், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு என்று எனக்குத்தேவையில்லாத பத்திரிகைகளாக கண்ணில் பட 'விருந்தை' மட்டும் காணவில்லை! எப்படி இதைப்போய் குமார் அண்ணனிடம் கேட்பது? சீதையை இழந்த இராமன் போல துடிதுடித்துப்போனேன்.
சரி..இந்த புக்குக்காகத்தானே இந்த சலூனுக்கே வந்தோம்.3 ரூபாயை இப்படி அனாவசியமாக இழக்கப்போகிறோமே என்று குமுறிக்கொண்டே இருக்கும்போதே, அவர் கேட்டார்..
தம்பி ! நேத்து நீ வந்துட்டுப்போனில்ல?
ஆமா!
அப்ப இங்க விருந்து ன்னு ஒரு புக்கு கிடந்துச்சே பாத்தியா?
நான் படிக்கலையே அண்ணே..! ஆனா உயரமான ஒருத்தர் வச்சு படிச்சிக்கிட்டிருந்தார்.
அப்படியா? என்று விட்டு.. பல்வேறு அடையாளங்களை விசாரித்தார்.
இதே எழவாப்போச்சு..! ஆசைப்படுறாங்களேன்னு வெளியூர்லேருந்து வாங்கி கொண்டாந்து போட்டா. அதைப்போய் ஆட்டையப்போட்டுர்றாய்ங்க!
இப்போதுதான் எனக்கு விளங்க ஆரம்பித்தது..அய்யய்யோ..! நேற்று பேப்பரும் ,படமுமாகப்பார்த்த 'விருந்து' இன்று இல்லையா? அப்போது நான் தேர்வில் தோற்றுவிட்டேன் என்று கூறியிருந்தால் கூட அது எனக்கு பெரியதாகப்பட்டிருக்காது. அந்த அளவுக்கு சோகம் அப்பிவிட்டது.பூமி கீழே நழுவுவதுபோல் இருந்தது.
ஆக..என் 'விருந்து' கனவு, கனவாகவே போனது. அந்த வயதில் அது ஒரு பெரிய ஏமாற்றமாக ஆனது.
பிறகு ஒரு 8 வருடங்களுக்குப்பிறகு..'விருந்து' ஒருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து. ஆனால் அப்போது அந்த அளவு ஆர்வம் இல்லை..மேலும் அந்த மஞ்சள் ஜாக்கெட் போட்ட அழகியின் அட்டைப்படம் போட்ட 'விருந்தை' படிக்காத ஏக்கம் இன்று வரை இருந்து வருகிறது.

வீட்டுக்கு முடிதிருத்த வருபவரின் மகன்தான் அந்த குமார்.! சலூனுக்குள் மெல்ல நுழைந்தபின் தான் அந்தக்கொடுமை
ReplyDeletevithiyai paarunga...
unmaithanga...anthantha vayathil athai pettuvida vendum.. appathaan atharkku mavusu oru thril..
paavam neengka patta kastamum/yemartamum manathai romba pisainthathu.. better luck next time naa solla mudiyum..
ponathu ponathuthan..
2nd part romba suvarasiyamaga irunthathoda allamal antha vayathin aasaikalai meendum purati paarpathupola irunthathu..
bas
அதானே படிக்கவிடாம பண்ண அவனுக்கென்ன மரியாதை!!
ReplyDeleteகலக்கலா எழுதியிருக்கீங்க அத்தனையும் ஞாபகம் வெச்சிகிட்டு!!
நானும் யோசிச்சி யோசிச்சி பாக்கிறேன் எப்ப மொதல்லன்னு ம்ஹூம் ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலை.
அடடா, கதை அவ்ளோதானா?
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம் - விருந்துக்கு அலைஞ்சது - விருந்து கிடைக்காதது - ம்ம்ம்ம்ம்- பாவம்
ReplyDelete//இதே எழவாப்போச்சு..! ஆசைப்படுறாங்களேன்னு வெளியூர்லேருந்து வாங்கி கொண்டாந்து போட்டா. அதைப்போய் ஆட்டையப்போட்டுர்றாய்ங்க!//
ReplyDelete:-))).
அட நம்ம குமார் கடைதானா? அதுக்குன்னு இப்படி அலைஞ்சிருக்கியேடா, எல்லாம் வயசுக் கோளாறு :)).
சரி, அந்த விருந்தை நான் முதன் முதலில் எங்கே பார்த்தேன்... :D . மசமசன்னு ஒரு மட்டிக் காகிக்ததிலே அச்சடித்திருப்பாய்ங்களே அதானே...
நல்ல கொசுவர்த்திப் போ! பார்த்துக்கோ, அப்பா உனக்குத் தெரியாமா கணினியில ஏறி நீ போட்ட பதிவ படிச்சிட்டு இப்பவும் டின் கட்டப் போறார் :-P.
pazhaya ninaivuhala kannu munnadi niruthi irukeenga.
ReplyDeleteManadhil padhintha padhivuhalai
purattuvadhil - puyalai
Manadhai kavalaihal nirappum kuppaithottiyai vaithiruppavarhalaukku - thendralai
Manadhukku inimaiyumai irukkiradhu ungal padaipuhal ovvondrum.
Thodarattum
Vijaya baskar Said...(anony)
ReplyDelete//
2nd part romba suvarasiyamaga irunthathoda allamal antha vayathin aasaikalai meendum purati paarpathupola irunthathu..//
நன்றி சார்! என் ஞாபகப்பக்கங்களில் இன்னும் கிழிபடாமல் இருந்தது இது!
மங்களூர் சிவா said...
ReplyDelete//அதானே படிக்கவிடாம பண்ண அவனுக்கென்ன மரியாதை!!//
ஆமாங்குறேன்..! :)
//கலக்கலா எழுதியிருக்கீங்க அத்தனையும் ஞாபகம் வெச்சிகிட்டு!!//
நன்றிங்க!
//நானும் யோசிச்சி யோசிச்சி பாக்கிறேன் எப்ப மொதல்லன்னு ம்ஹூம் ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலை.//
ஒருதடவை முயன்றிருந்தா ஞாபகம் இருக்கும்! :)))
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDelete//அடடா, கதை அவ்ளோதானா?//
வாங்க சார்.!
இதுக்கு மேல என்ன எதிர்பார்த்தீங்க?! :)))
cheena (சீனா) said...
ReplyDelete//ம்ம்ம்ம்ம்ம் - விருந்துக்கு அலைஞ்சது - விருந்து கிடைக்காதது - ம்ம்ம்ம்ம்- பாவம்//
ஆமாம் சீனா!
நான் ரொம்ப பாவம்...அவ்வ்வ்வ் :)
Thekkikattan|தெகா said...
ReplyDelete//அட நம்ம குமார் கடைதானா? அதுக்குன்னு இப்படி அலைஞ்சிருக்கியேடா, எல்லாம் வயசுக் கோளாறு :)).//
ஆமாண்ணா...எல்லாம்..ஒரு இதுதான்.! ஹி ஹி
//சரி, அந்த விருந்தை நான் முதன் முதலில் எங்கே பார்த்தேன்... :D . மசமசன்னு ஒரு மட்டிக் காகிக்ததிலே அச்சடித்திருப்பாய்ங்களே அதானே...//
அப்புறம் என்ன? நம்ம எல்லாம் ஒரே குரூப்புதான்...ஆனா நீங்களாவது உள்ள பாத்தீங்க..ஆனா நான் பாவம்!
//நல்ல கொசுவர்த்திப் போ! பார்த்துக்கோ, அப்பா உனக்குத் தெரியாமா கணினியில ஏறி நீ போட்ட பதிவ படிச்சிட்டு இப்பவும் டின் கட்டப் போறார் //
அட..ஆமா..இதை நான் யோசிக்கவே இல்லையே!
Anonymous said...
ReplyDelete//
Manadhukku inimaiyumai irukkiradhu ungal padaipuhal ovvondrum.
Thodarattum//
நன்றி அனானி அவர்களே !!
சுரேகா..
ReplyDeleteபலரும் சொல்லத் தயங்கும் விஷயத்தை முழுங்காமல் சொல்லியிருக்கிறீர்கள்.. உங்களது தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள்.
பை தி பை.. இந்த 'விருந்து' புத்தகத்திற்கு ஆசிரியராக இருந்தவர் யார் என்று தெரியுமா..?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
சரவணன், சென்னை
ReplyDeleteஇதைத்தான் விருந்தும், மருந்தும் மூணு நாள்னு சொன்னாங்க :-))
என் அப்பா பள்ளி ஆசிரியர். அவர் வகுப்பில் ஒரு பையன் விருந்து படித்து மாட்டிக்கொள்ள, அவனது அப்பா வந்து தன் மகன் படித்தது 'வியாசர் விருந்துதான்(!)' என்று பிளேட்டை மாற்றப் பார்த்தது தனிக்கதை :-)
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDelete//பலரும் சொல்லத் தயங்கும் விஷயத்தை முழுங்காமல் சொல்லியிருக்கிறீர்கள்.. உங்களது தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க! முகமூடி போட்டாலும் சுயம் சுயம்தானுங்களே..அதை சொல்வதில் என்ன தப்பு?
//பை தி பை.. இந்த 'விருந்து' புத்தகத்திற்கு ஆசிரியராக இருந்தவர் யார் என்று தெரியுமா..?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..//
அடடே...அதெல்ல்லாம் தெரியலையே!
கேள்வி ரொம்ப ஆசையா இருக்கு?
சரவணன், சென்னை
ReplyDelete//இதைத்தான் விருந்தும், மருந்தும் மூணு நாள்னு சொன்னாங்க :-))//
வாங்க சரவணன் வருகைக்கு நன்றி!
அட..இது நல்லா இருக்கே...ஆனா சொன்னவர் கேட்டா..ஏதாவது பண்ணிக்கப்போறார்.! :)
//என் அப்பா பள்ளி ஆசிரியர். அவர் வகுப்பில் ஒரு பையன் விருந்து படித்து மாட்டிக்கொள்ள, அவனது அப்பா வந்து தன் மகன் படித்தது 'வியாசர் விருந்துதான்(!)' என்று பிளேட்டை மாற்றப் பார்த்தது தனிக்கதை :-)//
பலர் இந்த விருந்தை அனுபவிச்சிருப்பாங்க போல இருக்கே?!
சுவாரஸ்யமான இடுகை!
ReplyDelete"வயது வந்தவர்களுக்கு மட்டும்"-ன்னு போட்டுருக்கீங்களே, அப்படி எதையும் காணோம்? ;-)