சாமி காட்டிய தங்கசாமி!

மரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது...
அது ஒரு சாதாரண ஓட்டு வீடு.!
சுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்!
நான் சென்ற நாள் தீபாவளி!      பலகாரம் எல்லாம் கொடுத்து நன்கு கவனித்தார்.
அவர் மனைவிக்கு காது கேட்பதில் கொஞ்சம் சவால், ஆகவே சத்தமாகவும், சைகையுடனும் பேசி..அவரையும் அன்பாக நடத்தி உணவு வழங்கினார்.
(எவ்வளவு பெரிய முறுக்கு..சீயம்..அடேயப்பா!)

தேக்கு..செஞ்சந்தனம், சந்தனம், வேம்பு என்று பல மரங்களைப்பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.
சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.பயமாக இருந்தது...வாக்கின் வலிமை பற்றி யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது...
இப்போது தாரே சமீன் பர் படத்திலும் அதே தகவலை ஆமீர்கான் சொன்னதும் அடேயப்பா நம்ம ஆள் சாதாரணமானவரில்லை என்றிருந்தது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நல்ல நண்பர் என்றார்.!

இப்படி பேசிக்கொண்டே,
வாங்க சாமி ரூமுக்கு போலாம் என்றார்..!

அது ஒரு சின்ன தடுப்பு இடப்பட்ட அறை! இந்தப்பக்கம் நாம்! அந்தப்பக்கம் கடவுள்! இடையில் திரை.!
நான் தங்கமணியுடன் போயிருந்ததால், அவர் தங்கமணியைப்பார்த்து நீங்க இதுவரைக்கும் பாக்காத கடவுளை பாக்கப்போறீங்க! நல்லா கண்ணை மூடி தியானம் பண்ணுங்க! என்றார். தங்கமணியும், 'எப்பயும் லொள்ளு பேசிக்கிட்டே இருப்பீங்களே..! இங்கயாவது ஒழுங்கா என் கிட்ட வந்து நில்லுங்க.. நான் வேண்டிக்கிறேன்' என்றார்..சரி ..! விதி வலியதுன்னு நானும் தங்கமணி பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.

நல்லா கண்ணை மூடி தியானியுங்க! - தங்கசாமி அய்யா!

சரிங்கய்யா ! - தங்கமணி

என்னமோ வித்யாசமா மரம் தான் கடவுள்னு சொல்லப்போறார்ன்னு நினைத்துக்கொண்டே நான் நின்றுகொண்டிருந்தேன்.சில வினாடிகளுக்குப்பிறகு, திரையை அகற்றினார். (தங்கமணி இன்னும் ஆழ்ந்த வேண்டுதல்களோடு..கண்கள் மூடியபடி...)

எனக்கு உண்மையிலேயே ஒரு வினாடி அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனாலும் மகிழ்ச்சியாய் இருந்தது.

பக்கத்தில் தங்கமணியை 'பாரு' என்று நான் சொல்ல,
அவர் விழித்துப்பார்த்தபோது.....

அங்கே திரைக்குப்பின்னால் இருந்தது..

ஆளுயர நிலைக்கண்ணாடி.!
கைகளைக்கூப்பியபடி...தன்னைத்தானே பார்த்தபடி..தங்கமணி!

'உங்களைவிட கடவுள் யார் இருக்கா?'
என்று மென்மேலும் அதிர்ச்சியூட்டினார் (தங்கமணிக்கு)

'அய்யா..நீர் மரம் மட்டும் வளர்ப்பதில்லை! மனிதமும் வளர்க்கிறீர்கள்' என்று வாழ்த்துக்களை பதிந்துவிட்டு வந்தோம்.

வரும்போது தங்கமணி கேட்டார்..' முழுசா மனசார வேண்டிட்டு..திடீர்னு நம்ம உருவத்தையே பாத்தவுடனே நாம நினைச்சதெல்லாம் நடந்துரும்னு ஒரு நம்பிக்கை திடீர்ன்னு வந்ததுங்க..! என்னை நான் இதுவரைக்கும் வணங்கிருக்கேனான்னே தெரியலைங்க! ஒருவேளை நாமதான் கடவுளோ?'

Comments

  1. சுரேகா,

    வித்தியாசமான மரம் மனிதர் தான் தங்கசாமி,நல்ல விவரம் உள்ளவராகவும் இருக்கார்.

    நீங்களும் விவரமானவர் தான் :-))

    ReplyDelete
  2. அருமையா சொல்லியிருக்கீங்க சுரேகா,

    நம்ம ஊர்ப் பக்கம் இது நடப்புல இருக்கு. சமீபத்தில் பிரிவோம், சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி
    இதுமாதிரி வரும்.

    தன்னை உணர்வது,தன்னைமதிப்பது
    மிக முக்கியம்.

    அதனாலதான் எங்க அம்மம்மா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வாங்க.
    எடுத்து சொருகிய புட்வை, ஏறக்கட்டிய கொண்டைன்னு இல்லாம.
    நல்லதா டிரெஸ் செஞ்சுக்கிட்டு எப்பவும் புத்துணர்ச்சியோட இருக்கிணும்.

    பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் நம்மை சரியாக அலங்கரித்துக்கொண்டு இருந்தால்
    ஐஸ்வர்யம் தானே வரும்னு.

    பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.

    ReplyDelete
  3. வவ்வால் said...

    //வித்தியாசமான மரம் மனிதர் தான் தங்கசாமி,நல்ல விவரம் உள்ளவராகவும் இருக்கார்.//

    வாங்க சார்..! ரொம்ப மகிழ்ச்சி!

    கண்டிப்பா வித்தியாசமானவர்தான்.! நம்மளை மாதிரி விவரமானவரும் கூட! :)

    ReplyDelete
  4. புதுகைத் தென்றல் said...

    //அருமையா சொல்லியிருக்கீங்க சுரேகா,

    நம்ம ஊர்ப் பக்கம் இது நடப்புல இருக்கு. சமீபத்தில் பிரிவோம், சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி
    இதுமாதிரி வரும்.//

    நன்றிங்க!

    நானும் பாத்தேன்..ஆச்சர்யப்பட்டேன்.

    ReplyDelete
  5. நீக்கமற நிறைந்திருக்கும் சாமி நம்முள்ளிலும் இருக்கார்னு சொல்லிட்டார். சத்தியமான உண்மை.

    நாம் விக்கிரகம் வச்சுக் கும்பிடுறதெல்லாம் மனம் அலைபாயாம ஒரு புள்ளியில் நிலைக்கணும் என்றுதான்.

    சாதாரண மக்கள் மனம் எப்படி ஓடுமுன்னு நமக்குத் தெரியும்தானே?:-)))

    ReplyDelete
  6. உண்மையிலேயே வித்தியாசனமானவர்தான், மரம் தங்கசாமி! கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது..

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, சுரேகா..

    ReplyDelete
  7. தன்னை உணர்வது,தன்னைமதிப்பது
    மிக முக்கியம்.

    manithanukku self-respect miga mukkiyam

    secondly, manithan thannai muthalil unaravendum..
    Ramana Maharishi kooda stress pannee irukirar
    Vallalarum kooda Mirror mun nintu thannai paarpathai patti koori irukiraaro - then.. vilakku mun amarnthu thiyanam pannavum solli irrukirar ...
    bas

    ReplyDelete
  8. Vijaya baskar said...

    Particularly the first one written abt. seeing our own image on mirror, I suppose already read abt. it. I think, SWAMY VALLALAR also encouraged this…


    Another one abt. மரம் தங்கசாமி Kannukku Azhagu Greenery / vegetation parpathu… more over Maram valarthal migavum mukkiyamana ontu… we should appreciate him..


    Secondly as he is telling, its feeding him….

    ReplyDelete
  9. //ஒருவேளை நாமதான் கடவுளோ?'//

    என்னங்க இப்புடி பயங்காட்டுறீங்க.


    //சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.//

    ஜப்பான்ல நாய் கறி கறிபண்ணுறதக்கு முன்னாடி, நாய அடிஅடின்னு அடிச்சு பயங்காட்டின பின்னாடிதான் கொல்லுவாங்களாம்.
    பயங்காட்டினாதான்
    "அட்டரீன்னலீன்" சுரக்குமாம். அப்போதான் கறி மெதுமயா, சுவையா இருக்குமாம்.

    அதேபோலதா இங்க மரங்கள வெட்டுறதுக்கும் ஏதாச்சும் இருக்கும்.

    ReplyDelete
  10. சுரேகா,

    தங்கசாமி உண்மையிலேயே தங்கமான சாமீதான்னு மேன்மேலும் நமக்கு விளங்க வைச்சிட்டார்.

    சரி, இது போன்ற மக்களை எல்லாம் எப்படியப்பா தேடி கண்டுபிடிக்கிறே... நான் அங்கே வரும் பொழுது கண்டிப்பா அவரை சந்திக்கிறோம், என்னயும் ஒரு சாமீதான்னு இன்னொருத்தர் முன்னாடி கண்ணாடியில பார்த்து அவரும் "நீயும் கடவுள்"தான் அப்படின்னு சொல்றதை கேக்கணும்.

    ஏன்னா, என்னய நானே அப்படிச் சொல்லிச் சொல்லி அந்த எபெஃக்ட்டே போச்சு :).

    ReplyDelete
  11. துளசி கோபால் said...

    //நீக்கமற நிறைந்திருக்கும் சாமி நம்முள்ளிலும் இருக்கார்னு சொல்லிட்டார். சத்தியமான உண்மை.//

    வாங்க...ஆமாங்க!

    //நாம் விக்கிரகம் வச்சுக் கும்பிடுறதெல்லாம் மனம் அலைபாயாம ஒரு புள்ளியில் நிலைக்கணும் என்றுதான்.//

    ஆமா..அதுகூட இருக்கலாம் !

    ReplyDelete
  12. மங்களூர் சிவா said...

    //Interesting Post.

    Vaazthukkal.//


    நன்றி சிவா!

    ReplyDelete
  13. தஞ்சாவூரான் said...

    //உண்மையிலேயே வித்தியாசனமானவர்தான், மரம் தங்கசாமி! கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது..//

    வாங்க! சந்திக்கலாம்..நான் கூட்டிட்டு போறேன்.


    //அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, சுரேகா..//

    நன்றிக்கு வணங்குகிறேன். (நம்ம கடமைதானுங்களே)

    ReplyDelete
  14. Anonymous said...

    //தன்னை உணர்வது,தன்னைமதிப்பது
    மிக முக்கியம்.

    manithanukku self-respect miga mukkiyam//

    வாங்க...பாஸ்கர்?

    ஆமா நீங்க சொல்றது சரிதான்

    ReplyDelete
  15. சுரேகா.. said...

    Vijaya baskar said...

    //Particularly the first one written abt. seeing our own image on mirror, I suppose already read abt. it. I think, SWAMY VALLALAR also encouraged this…//

    ஆமாங்க...படிச்சிருக்கோம்.ஆனா அதை நேரில் உணரும்போது ஏற்படும் அதிர்வு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு!

    //Another one abt. மரம் தங்கசாமி Kannukku Azhagu Greenery / vegetation parpathu… more over Maram valarthal migavum mukkiyamana ontu… we should appreciate him..//

    நன்றிங்க! அவருக்கும் சொல்லிடறேன்.

    ReplyDelete
  16. Anonymous said...

    //ஜப்பான்ல நாய் கறி கறிபண்ணுறதக்கு முன்னாடி, நாய அடிஅடின்னு அடிச்சு பயங்காட்டின பின்னாடிதான் கொல்லுவாங்களாம்.
    பயங்காட்டினாதான்
    "அட்டரீன்னலீன்" சுரக்குமாம். அப்போதான் கறி மெதுமயா, சுவையா இருக்குமாம். //

    வாங்க! நன்றிங்க! என்னங்க எனக்கும் மேல பயம் காட்டுறீங்க! ? :)

    ReplyDelete
  17. Thekkikattan|தெகா said...

    சுரேகா,

    //தங்கசாமி உண்மையிலேயே தங்கமான சாமீதான்னு மேன்மேலும் நமக்கு விளங்க வைச்சிட்டார்.//

    ஆமாண்ணா! வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்!

    //சரி, இது போன்ற மக்களை எல்லாம் எப்படியப்பா தேடி கண்டுபிடிக்கிறே... நான் அங்கே வரும் பொழுது கண்டிப்பா அவரை சந்திக்கிறோம், என்னயும் ஒரு சாமீதான்னு இன்னொருத்தர் முன்னாடி கண்ணாடியில பார்த்து அவரும் "நீயும் கடவுள்"தான் அப்படின்னு சொல்றதை கேக்கணும்.//

    எல்லாம் ஒரு வெறிதான்..! :)
    கண்டிப்பா சந்திக்கலாம்.!
    அடடா!

    //ஏன்னா, என்னய நானே அப்படிச் சொல்லிச் சொல்லி அந்த எபெஃக்ட்டே போச்சு :).//

    இப்ப நான் சொல்றேன்.. நீங்க கடவுள்! :))

    ReplyDelete
  18. நேத்து உங்களை நினைச்சுக்கிட்டேன்.

    பிரிவோம் சந்திப்போம் படம் பார்த்தப்ப, சாமியறையில் கண்ணாடி இருந்தது.

    ReplyDelete
  19. துளசி கோபால் said...

    //நேத்து உங்களை நினைச்சுக்கிட்டேன்.

    பிரிவோம் சந்திப்போம் படம் பார்த்தப்ப, சாமியறையில் கண்ணாடி இருந்தது.//

    வாங்க..! ஆமாம் நானும் பாத்தேன்.
    காரைக்குடிப்பக்கம் சில இடங்களில் இந்த வழக்கம் இருக்கும்போல!

    ReplyDelete
  20. சுரேகா திருவாளர் மரம் தங்கசாமி பற்றிய திணமணியில் வந்த தகவலை எனது வலைபூவில் மீள்பதிவு செய்துள்ளேன். பெயரிலி ஒருவர் திருவாளர் தங்கசாமி அவர்களை நேரில் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளார். எனக்கு திருவாளர் தங்கசாமி அவர்களின் முகவரி அளிக்க இயலுமா?

    நன்றி,
    இவன்.

    ReplyDelete
  21. நற்சிந்தை வளர்க்கும் படைப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!