ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்




இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !?  :(

இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்..  தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு!

இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....!

அய்யா என்ன நினைச்சு ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறீங்க! அதை ஏன் அப்புறம் அம்போன்னு விட்டுடுறீங்க!  
எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன்.

அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :)

இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை!

இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! )

ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்சு..!

அந்த அழகான அண்ணா பண்ணை
இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது..!
கடைசில பால் ஊத்தக்கூட ஆள் இல்லாம
போகப்போவுது!
அதுக்கு முன்னாடி ஏதாவது வைத்தியம் பாத்தாத்தான் உண்டு.!
இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா, 
இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க 
எல்லா கயவாளிக்கனவாண்களும் !

Comments

  1. /
    இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா,
    இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க
    எல்லா கயவாளிக்கனவாண்களும் !
    /

    உனக்கென்னய்யா தெரியும் மெஜாரிட்டியை நிரூபிக்க எவ்வளவு செலவாகும் என்று!?!?

    சுருட்டியிருக்காங்களாம்!! சுருட்டி!!

    ReplyDelete
  2. // பெரிய நகைச்சோகம் என்னன்னா,
    இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க
    எல்லா கயவாளிக்கனவாண்களும் !//

    அவுங்களுக்கும் பெரிய நகைவாங்க வேண்டிய சோகம் இருந்து இருக்கும்! இப்ப விக்கிற பவுன் விலையில் நகை வாங்குவது என்றால் அவ்வளோவு சுலபமா?:)))

    ReplyDelete
  3. சொன்னாங்க..! சொன்னாங்க..!!

    ReplyDelete
  4. ///இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா,
    இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க
    எல்லா கயவாளிக்கனவாண்களும் !
    /

    உனக்கென்னய்யா தெரியும் மெஜாரிட்டியை நிரூபிக்க எவ்வளவு செலவாகும் என்று!?!?

    சுருட்டியிருக்காங்களாம்!! சுருட்டி!!///

    உண்மையை சொன்னால் தமிழ்நாட்டில எவன்தான் ஏத்துக்கொள்ளுறான்?

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...
    //
    உனக்கென்னய்யா தெரியும் மெஜாரிட்டியை நிரூபிக்க எவ்வளவு செலவாகும் என்று!?!?

    சுருட்டியிருக்காங்களாம்!! சுருட்டி!!//


    அட ஆமா...இத நான் யோசிக்கவே இல்லை!

    :)

    ReplyDelete
  6. குசும்பன் said...

    //
    அவுங்களுக்கும் பெரிய நகைவாங்க வேண்டிய சோகம் இருந்து இருக்கும்! இப்ப விக்கிற பவுன் விலையில் நகை வாங்குவது என்றால் அவ்வளோவு சுலபமா?:)))//

    அய்யா...சாமீ! இது தெரிஞ்ச நக்கலா?
    இல்ல தெரியாத விக்கலா?

    :)

    குசும்பு நல்லாத்தான் இருக்கு! ஆனா நான் சிரிப்புக்குரிய சோகம்ங்கிற அர்த்தத்துல சொன்னேன்.

    ReplyDelete
  7. புதுகைச் சாரல் said...

    //சொன்னாங்க..! சொன்னாங்க..!!//

    வாங்க வாங்க!
    என்ன சொன்னாங்க!?
    யார் சொன்னாங்க?
    :)

    ReplyDelete
  8. இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா,
    இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க //

    இது எந்த குரூப்பாக இருக்குமின்னு யோசிச்சிட்டு இருக்கேன். இன்னும் நம்மூர்ல ஒண்ணு மட்டும்தான் நடக்கலை அது cannibalism அதுவும் சீக்கிரமா இந்த ரேஞ்சில சுருட்டல் போயிட்டுருந்தா அதுவும் நடந்திரும்.

    சரி, இதுக்கு ஒரு ஆன்லைன் பெட்டிஷன் தயார் பண்ணி நம்ம மக்களை எல்லாம் விட்டு மினிஸ்ட்ரிக்கு ஒரே மாதிரி ஃபார்வேர்ட் பண்ணிப் பார்த்தா என்ன?

    ReplyDelete
  9. Kovilgalayee naam ippo ellam paramarikkirathey illey...pannaya yaar parthukkolvaargal...arasu selavu seidhadhu ,namadhu kaasai...oru arasu seidha entha oru vishayamum aduththa arasu thodaraathu...yaen seidhaargal mudhalil endru paarthaal angu yaaro oru arasiyalvaadhikku edhaavadhu oru adhaayam irundhirukkum....indru andha arasiyalvaadhi angu illamal iruppar,allathu aatchiyil illamal iruppar.....pala kodigalai kadalil uppu karaippadhu pol karaippadhu thaan namadhu pazhakkamayitrey....vaazhga nam naadu. valarga nam panpaadu.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !