ஒதுங்கிய காவல்!





அய்யனாரே! என்று
சொல்லி படையல்
படைக்கும்போதும்,
வாகனங்களை நிறுத்தி
பாதுகாப்பு
கேட்கும்போதும்,
என்றாவது ஒருநாள்
ஊருக்குள்
அழைப்பார்கள்
என்றுதான் நானும்
நம்பிப்போய்
நின்றுவந்தேன்.

காவல் தெய்வம்
என்று
கவனமாய்த்
தள்ளிவைத்து,
ஊர்வலத்தில்
வர இயலா
உருவத்தைக்
கொடுத்துவிட்டு,
குதிரையொன்றை
நிற்கவைத்து,
கூரைகூடக் கட்டாமல்
கொண்டாடி நடிக்கிறார்கள்.

ஒதுக்க வேண்டுமென்று
முடிவெடுத்தால்
சாமியென்ன? மனிதனென்ன?

Comments

  1. அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!
    கவிதை காவலாய் நிற்கிறது.

    ReplyDelete
  2. ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அண்ணே .. ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. கவிதை அருமை

    ReplyDelete
  4. வாங்க சி.கருணாகரசு!

    ReplyDelete
  5. வாங்க ரோமியோ!

    ஆஹா..இது கவிதை இல்லையா!

    வரிகளை மாத்திப்போட்டா சரி பண்ணிடலாமா? :)

    ReplyDelete
  6. அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் கவிதையா எழுதுனா,


    படையல்
    வாசம்
    நாசிவரை.

    வண்டி
    முன்னே போக
    என்னை அழை.

    காத்திருந்தேன்
    அழைப்பு வரும்
    ஊருக்கு உள்ளே
    உலவ ஒரு நாள்.

    காவலனாம்,
    கண்ணியமாக
    கட்டிய குதிரைமேல்
    கண்ணிமைக்காமல்
    காத்திரு என்றனர்.

    எங்கள் ஊரில்
    எல்லாருக்கும்
    எல்லைகள் உண்டு.

    !!!!!!!!!!!!!!!!!

    எப்பூடி......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !