உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது..!
நேற்று ஒரு சம்பவம் தூக்கமிழக்கச்செய்துவிட்டது. தஞ்சாவூரில் , ஒரு பெண்ணின் திருமணம் மீறிய ஒழுக்கத்துக்கு(?) இரு சிறுவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவளுக்கு காதல் திருமணத்தில் பிறந்த அந்த பிஞ்சுகள் விக்னேஷ், தினேஷ் முறையே 6, 4 வயதுக்கார அழகன்கள். கணவனின் நண்பனுடன் ஏற்பட்ட தொடர்பை விடமுடியாததால், கணவனே அவளைவிட்டுப்போக, நண்பனுடன் குடித்தனம்... பின்னர் அவளது சொந்தக்காரன் இன்னொருவனுடன் அடுத்த........, அதன் தீவிரம் அதிகமாகி, குழந்தைகளையும், இரண்டாமவனையும் கொன்றுவிடுவதென்று முடிவெடுத்து, முதல் கட்டமாக, விளையாட்டுப்போக்கில் காரில் குழந்தைகளை கூட்டிச்சென்று தஞ்சை பெரியகோவில் அருகிலுள்ள பாலத்திலிருந்து இருவரையும் தூக்கிப்போட்டு கொன்றிருக்கிறான் சண்டாளன்.. இதில் சின்னவன் தினேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறான். இவள் நல்லவள் போல் போய் போலீஸில் என் பிள்ளைகளைக்காணவில்லை என்று புகார் கொடுத்து புலம்ப, துருவியதில் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸ் தடுமாற, மறுநாள் ஆற்றில் , விக்னேஷ் மிதக்க , அதை இவள் சலனமில்லாமல் பார்ப்பதைப்பார்த்த போலீஸின் சந்தேகப்பார்வை திரும்பியபின் இவ்வளவும் வெளிச்சத்துக்கு வந்தது. என்ன சொ