Posts

Showing posts with the label ஊர்

சென்னைப் பிழை!

Image
 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !! அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை! சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும். இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம். ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வ...

புதுக்கோட்டை

Image
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள் மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று! இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்! நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டா...

யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.! சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன். அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது. சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்...

அறந்தாங்கி

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :) என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்! காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும். அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும். நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி! வாணி தியேட்டர...

கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம். கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..! என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒர...