Friday, December 19, 2008
தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!
Wednesday, December 17, 2008
தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் !
Monday, December 8, 2008
இயற்கை கொடையினைக்காப்போம் -3

இயற்கை கொடையினைக்காப்போம் -2
Sunday, December 7, 2008
இயற்கை கொடையினைக் காப்போம் !
இயற்கையில் இழந்ததையும்
இழந்ததில் இருப்பதையும்
இருப்பதில் காப்பதையும்
காப்பதில் வாழ்வதையும்,
வாழ்வதில் மடிவதையும்
மடிவதில் முடிவதையும்
பயத்துடன் பகிர்கின்றேன்.
அண்டத்தின் பெருவெடிப்பும்
பூகோளப்பிறப்பெடுப்பும்
புவியியல் புத்தகத்தில்
எப்போதோ கண்டதுண்டு!
பிறந்தபின் பூமியும்
தன்னைத்தானே செதுக்கியது.
நெருப்புடனே பிறந்துவந்து
காற்று கண்டு
நிலத்தைக் கண்டு
காலம் கடந்து நீரைக்கண்டு
உயிரினங்கள் ஒன்றிரண்டை
ஓடியாட வைப்பதற்குள்
களைத்துப்போன
இயற்கைக்கு அப்போதே
வயது எழுபது கோடி!
வாழ்வியல் ஓட்டத்தில்
இருப்பியலின் தாக்கத்தில்
தேவைகளின் மாற்றத்தில்
ஒன்றையொன்று சார்ந்துவந்து
உயிரினங்கள் பெருகின!
பெருகிய உயிரினங்களில்
நடந்து வந்து
பேசி நின்று
மூளையெனும் ஆயுதத்தை
முழுமையாகக் கண்டுணர்ந்து
சிந்தித்து செயல்புரிந்து
சிறப்பாக நம்மைக்காப்பான்
என்றெண்ணி இயற்கையும்
மனிதனென்ற உயிரினத்தை
மமதையுடன் படைத்துவிட்டு
மார்தட்டி நின்றது!
வந்திறங்கியவன்
வஞ்சகன் என்றறியா
பித்துமனம் கொண்ட
பேதைத்தாய் இயற்கையும்
பெருஞ்செல்வம் அவனுக்கு
பூமியெங்கும் தந்துவிட்டு
பொறுமை காத்து வந்தது !
Monday, December 1, 2008
இப்படியும் நடக்கலாம் ...!

Wednesday, November 19, 2008
உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது..!
Thursday, October 30, 2008
VANTAGE POINT - பாத்ததும் பத்திக்கிச்சு!
Monday, October 27, 2008
2008ன் தீபாவளியை.....
Saturday, October 4, 2008
ஒரு தாமதமான அறிமுகம்
Wednesday, October 1, 2008
அவனைக் கடந்த சவீதாக்கள்
நினைச்சதும், கிடைச்சதும்....!
Sunday, September 28, 2008
சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!
அப்துல்லா என்ன செய்தார்?
Tuesday, September 23, 2008
மும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு!
Wednesday, September 17, 2008
மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு
Tuesday, September 16, 2008
மும்பை என் உயிர் - ஒரு பார்வை





Sunday, September 7, 2008
சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Tuesday, September 2, 2008
உள்ளக்குழந்தை எங்கே?
இயல்பு காட்டி
எல்லாச் செயலையும்
இனிக்கச் செய்து
எல்லோர் உள்ளமும்
கொள்ளை கொள்ளும்
குழந்தைகள் என்னும்
குதூகலச் சிற்பிகள்!
அவை
பசை எடுத்துத் தின்னும்
இசை கேட்டால் ஆடும்
கை நீட்டி ஓடி வரும்
கைதட்டலில் உலகம் தரும்!
இருப்பதை தர மறுக்கும்!
இல்லாததை பெற நினைக்கும்!
அதிகம் அழுது பார்க்கும்!
அதிலும் தன் அழகு காட்டும்..!
புத்தகம் கிழித்துவிட்டு
புதிதாகச்சிரித்துவைக்கும்
பொக்கைவாயெடுத்து
பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்!
வா வென்று சொல்பவரின்
வயதைப்பார்க்காது
அழைக்கும் மனிதரின்
அழகு பார்க்காது.
உரிமையாய் தூக்கினால்
உறவு நோக்காது..!
எல்லோரும் அதற்கு
எல்லாம்தான்!
யாரையும் பிரித்துப்பார்க்க
குழந்தைகள் அறியாது.
குற்றம் கண்டுபிடித்து
குறைசொல்லி மறுகாது!
சுற்றம் எல்லோரிடத்தும்
சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்!
அத்தகைய குழந்தையாய்
அழகாய்த்தான் இருந்திருந்தோம்...
வளர்ந்து போய்த்தான்
குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..!
உள்ளக்குழந்தை எங்கே என்று
உலகம் முழுதும் தேடுகின்றோம்!
எதற்கெடுத்தாலும் பெரியவராய்
எப்போதும் நினைக்கின்றோம்!
அதில் நம் தன்முனைப்பை
முன்னேற விடுகின்றோம்.
அடுத்தவர் தவறு செய்தால்
தண்டனைக்கு அலைகின்றோம்.
நம் தவறை தப்புவிக்க
உலகையே கெஞ்சுகின்றோம்.
சிரிக்காமல் இருப்பதற்கு
சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்!
இத்தனையும் இருந்தாலும்
இப்போதும் ஒரு தருணம்
நம்மையும் மறக்கச்செய்யும்..!
நண்பனின் வீட்டு விழா,
நயமான இசைமுழக்கம்,
துள்ள வைக்கும் நடனங்கள்
துணிவில் கிடைத்த வெற்றிகள்
குழந்தை பிறந்த தருணங்கள்
போட்டி வென்ற சாதனைகள்
பெரியோரின் சந்திப்புகள்
வித்தைக்குக்கிடைத்த விருதுகள்
என எத்தனையோ நிகழ்வுகள்
உங்கள் உவகை கூட்டியிருக்கும்!
அவ்வாறான நிகழ்வுகளில்
சில நிமிடம் நீங்கள்
வயது மறந்து குதூகலித்து
குழந்தையாகவே மாறியிருப்பீர்கள்!
அத்தகைய தருணங்களை
அசைபோட்டுப்பாருங்கள்
குழந்தையாய் மட்டும் எப்போதும்
அடிக்கடி மாறுங்கள்!
தெரியாதவரைப்பார்த்து
சிரிக்கும் மனோபாவம்
சீக்கிரம் வந்துவிடும்.!
தெரிந்தே தவறு செயினும்
அறிந்தே மன்னிக்கும்
அற்புதம் தானாக அமைந்துவிடும்.
அடுத்தவர் துயர்கண்டு அப்படியே
உருகும் உள்ளம் அவசியமாய்
வந்துவிடும்.
ரசனையின் உச்சத்தை
சிரமமின்றித்தொடமுடியும்.!
உங்கள் உள்ளக்குழந்தையை
உசுப்பேற்றிப்பாருங்கள்
எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்
இதய மகிழ்ச்சி வாங்குங்கள்!
Sunday, August 31, 2008
கொள்(கை)ளைக் கோமான்கள்
ஒரு அறிவிப்பு பரபரப்பாக.....நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
செப்டம்பர் 3 விடுமுறையை முன்னிட்டு....
ப்ளா ப்ளா என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பட்டியலிட்டார்கள்.
அது என்ன..செப்டம்பர் 3 விடுமுறைக்கு என்று ஒரு சிறப்புக்கொண்டாட்டம் என்று பார்த்தால்
அன்று விநாயகர் சதுர்த்தியாம்..! அடேயப்பா என்ன ஒரு கலை(ஞர்) சாமர்த்தியம்!
கடவுள் இல்லை எனும் இவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்களாம்.ஆனால் அதே சமயம், சன் ட்டிவி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று பகிரங்கமாக அறிவித்து நிகழ்ச்சி நடத்தி சம்பாதிப்பதை தாங்கவும் முடியாது. அதனால் அன்று வரும் வருமானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாதாம்.
உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே?
இல்லை..! எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சாமியும்தான் முக்கியம்ன்னு தெளிவாக நம்மை குழப்பி வெளிப்படையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று சொல்லி நிகழ்ச்சிகளைப்போடவேண்டிய்துதானே !
எவ்வளவு அசிங்கத்தனமான வியாபார நோக்கம் !
இப்படித்தான் எல்லாவற்றிலும் சமரசம் செய்துகொண்டு -கொள்கைவாதிபோலும் பீற்றிக்கொண்டு - மனசாட்சியே இல்லாமல் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது பொய், புரட்டுகளுக்கு சர்வசாதாரணமாக நாமும் பலியாவதுதான் கொடுமை!
"சமுதாயத்திற்கு முன் கொள்கைமுழக்கம்போல் கூவிவிட்டு, தன் சுயலாபத்துக்காக ,கொள்கைக்கு முரணாக நடப்பவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்" என்று பெரியார் தெளிவாகக்கூறி இருக்கிறார். ( தன் பெயர் சொல்லி டகால்ட்டி காட்டும் அடுத்த தலைவர்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று நம்ம்ம்ம்ம்பி ! )
இப்படிப்பட்ட கயவர்களை என்ன செய்வது?
அரசியலில் என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப்போகட்டும்...
ஆனால் கொள்கை என்ற வகையில்... மருத்துவர் மாலடிமை மிகவும் உயர்ந்தவர்!
தன் கொள்கையின் அடிப்படையிலேயே ஒரு தொலைக்காட்சியை உருவாக்கி, அதற்கு டாக்டர் டிவி என்றோ, ராம் ட்டிவி என்றோ பெயர் வைக்காமல் மக்கள் ட்டிவி என்று ஒரு பொதுப்பெயரை வைத்து...தமிழர் கலாச்சாரத்துக்கான அத்தனை அடையாளங்களுடனும் , மனிதன்- அதுவும் தமிழன் பார்ப்பதுபோல் நிகழ்ச்சிகள் தருகிறார்கள்! கொண்ட கொள்கையில் மாறாமல், தாக்குப்பிடிக்கிறார்கள்
அவர்களைப்பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் எங்கள் திராவிடர் முன்னேற்றத்துக்காகவே மானாட மயிலாட நடத்தும் மகான்களே!
டிஸ்கி: படிச்சு முடிச்சவுடனே தயாரா வச்சுருக்கிற பெயிண்ட் டப்பாவ எடுத்து சுரேகாவுக்கு இதாம்ப்பா நிறம்ன்னு எனக்கு ஒரு கலர் பூசிடாதீங்கப்பு ! மனசுல தோணினதை எழுதிப்புட்டேன். நியாயம் பேச கலரே தேவையில்லை! நல்லது நினைக்கும் மனசும்....எல்லாம் நல்லா இருக்கணும்னு பாக்குற கண்ணும் போதும்!
Friday, August 29, 2008
கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
திருச்சிராப்பள்ளி
ரெயின்போ பண்பலை 102.1 ல்
தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம்.
ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது.
அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும்.
இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம்.
அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்...
என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?)
கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அதெல்லாம் அந்தக்காலம்’
என்று அங்கலாய்க்கும் மனோபாவம்
அனேகமாய் எல்லோருக்கும்
ஆங்காங்கே வருவதுண்டு!
அடிப்படைக்காரணமாய்
சிறுவயதில் சிறப்பாக
நீங்கள் பார்த்த ஒரு விஷயம்
மாறிப்போய் வந்திருக்கும்!
கால ஓட்டம் அதன் காரணமாய்
கட்டாயம் இருந்திருக்கும்!
எத்தனையோ ஆண்டுகள்
உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு
இப்போது திடீரெனறு
இல்லாமல் போய்விட்ட
அவ்விஷயம் உங்களுக்குள்
தாக்கங்கள் தந்திருக்கும்!
மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
மாறியவை என்னவென்று
மறக்காமல் இருப்போம் !
வேப்பங்குச்சிகள் செய்துவந்த
பல்விளக்கும் வேலைதன்னை
பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல்
நெற்றிப்பொட்டாய்
ஜொலித்திட்ட சாந்தை,
ஸ்டிக்கர் பொட்டு
சாய்த்ததுபோல்
கெந்தி விளையாடும்
கில்லிதாண்டை
கிரிக்கெட் ஆட்டம்
கெடுத்ததுபோல்
கடிதம் எழுதும்
அழகுதன்னை
கையில் செல்போன்
பறித்ததுபோல்....
எத்தனை எத்தனை
மாற்றங்கள்!
கல்கோனா,
கட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !
அது ஒரு பொருளாக இருக்கலாம்
செயலாக இருக்கலாம்!
விழாவாக இருக்கலாம்!
விளையாட்டாக இருக்கலாம்!
விலங்ககாக இருக்கலாம்!
உணவாக இருக்கலாம்!
உடையாக இருக்கலாம்!
வாகனமாய் இருக்கலாம்..!
எதுவாக இருந்தாலும்
இதயத்தில் தோன்றுவதை
இதழ்களுக்குக் கொண்டுவாருங்கள்!
இந்தத்தலைப்பில் நேயர்கள் ரொம்ப நல்லா பேசினாங்க!
இப்ப ஒரு வேண்டுகோள்
உங்கள் வாழ்க்கையின்
கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன்.
அதுக்கு நானே ஐந்து பேரை அழைக்கிறேன்
1. தெக்கிக்காட்டான்
2. புதுகைத்தென்றல்
3. மங்களூர் சிவா
4. புதுகை எம்.எம்.அப்துல்லா
5. துளசிகோபால் அம்மா
Wednesday, August 20, 2008
அதுக்காக இப்புடியா சுருங்கணும்? - பாகம் 2
ம்..சொல்லு...நைன் ...செவன்...எய்ட்....நைன்....போர்......ம்
அட...இந்த நம்பரோட ஆரம்ப நம்பரெல்லாம் நம்ப நம்பர் மாதிரியே இருக்கே...!ன்னு நினைச்சு வியக்க ஆரம்பிச்சேன். அடுத்த நம்பர் என்னவா இருக்கும்ன்னு லேசா .ஆரம்பிச்ச ஆர்வம் தீப்பிடிக்க ஆரம்பிச்சது...
சொல்லு..கேக்குது கேக்குது...! பீப்...பீப்...பீப்...
சார் சார்....ஒரு ரூபா காயின் இருக்குமா?
ட்டொய்ங்க்!
லைன் கட்டாயிடுச்சு!
அடக்கடவுளேன்னு சொல்லிக்கிட்டே...எக்ஸ்க்யூஸ்மீ சார்..ன்னு பக்கத்து ஜூஸ் கடைக்காரரிடம் அஞ்சு ரூபாய்க்கு ஒன் ருப்பீ காயின் குடுங்கன்னு கேட்டு வாங்கி...
மறுபடியும் முயற்சியைத்தொடர்ந்தார்...! ம்..மறுபடியும் சொல்லுப்பா... 97894....அப்புறம்..நைன்...மறுபடியும் நைனா..? சரி..சரி...செவன்..
அட...நம்ப சீரீஸ்லயே உள்ள ஆளா இருப்பார் போல இருக்கே...நமக்கும் இந்த நம்பர்லதானே வருது...கடைசி மூணு நம்பர் வேறவா இருக்கும்! ன்னு நினைச்சுக்கிட்டே கவனிக்க...
ஓ...பைவ்...த்ரீ...ஒன் னா....சரிப்பா..ரொம்ப தேங்ஸ்ப்பா...!
(இந்த இடத்தில் ஒண்ணு நினைச்சேன்...அதான் கடைசி பாரா...)
சார்.. ரொம்ப தேங்ஸ்ன்னாரு! அது கெடக்கட்டும் என்ன விஷயம் ன்னேன். ஒரு நம்பர் வாங்கினேன் சார்..!
அவரைச்சந்திக்கணு்ம்னாரு!
அதான் கேட்டேன் ...என்ன விஷயமா..ன்னேன்!
ஏன் சார் கேக்குறீங்க!
இல்ல...நீங்க பாக்க வந்தது என்னத்தான்...நீங்க வாங்கின நம்பர் என்னுதுதான்..!
_____________________________________________________________________________________
நான் இதைத்தான் நினைச்சேன்..
அடங்கொக்காமக்கா....இவ்வளவு நேரம் இவர் போராடி கேட்டு வாங்கினது என் நம்பரைத்தானா? என்னப் பாக்கத்தான் வந்திருக்காரா...?...உலகம் சுருங்கிருச்சுன்னு நினைச்சோம்...அதுக்காக இப்புடியா சுருங்கணும்?
Tuesday, August 19, 2008
அதுக்காக இப்புடியா சுருங்கணும்?
அன்னிக்கு ஒரு வேலையா அந்த மாநகரத்தின் பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். எல்லாரும் ஆளுக்கொரு செல்போன வச்சுக்கிட்டு அப்புடி என்னத்தத்தான் பேசுவாங்களோ.....பேசிக்கிட்டே இருந்தாங்க!
ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு புக்குல படிச்ச விஷயம் ஞாபகத்துக்கு வந்தது..!
அதாவது நாம பேசுற எல்லா ஒலிகளும் காத்துலதான் அலைஞ்சுக்கிட்டிருக்கு.. அந்த ஒலி அலைகளைத் தேடினா...ஏசுநாதர் பேசின விஷயங்களைக்கூட கண்டுபிடிச்சுடலாம்ன்னு போட்டிருந்தது. ஆனா இப்ப காலம் போற போக்கப்பாத்தா...இந்த செல்போன் வந்தப்புறம் மக்கள் ஓவரா பேசித்தள்ளி...இந்த பிரபஞ்சம் , வான்வெளி...சூரியக்குடும்பம்ன்னு எங்கெல்லாம் ஒலி போகமுடியுமோ அங்கெல்லாமே போய் நம்ம பேசின பேச்செல்லாம் போய் அடைச்சுத்தள்ளியிருக்கும்.
அதிலயும், அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினா... அப்புறம்.... அப்புறம். ங்கிற வார்த்தை மட்டுமே எல்லாத்தையும் விட ஜாஸ்தியா இருக்கும். நம்மகிட்டயும் செல்போன் வச்சிருக்கோமே...! அதுவும் ஒரு நம்பருக்கு ரெண்டு நம்பரா...நாமளும் ஓவராத்தான் பேசித்தள்றோம்.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்குறவன்கிட்ட கூட இந்தப்பக்கத்திலேருந்து பத்து பைசா கால் தைரியத்துல எவ்வளவு பேசுறோம்ன்னெல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன்...(யாருக்காவது காத்துக்கிட்டு நிக்கிம்போதுதான் இந்தமாதிரி கொனட்டலா நெனைக்கத்தோணும்! )
ஒரு ஆள்....40 வயசிருக்கும் வேகமா எப்பவும்போல ஒரு செல்போனை காதுல வச்சிக்கிட்டு பேசிக்கிட்டே வந்துக்கிட்டிருந்தாரு! ‘ஹலோ..ஹலோ...ஸாரிப்பா...பேட்டரி சார்ஜ் தீந்துருச்சு போல இருக்கு! நானே ஒனக்கு கால் பண்றேன் ன்னு சொல்லிக்கிட்டே எனக்குப் பின்னாடி வந்தாரு..!
என்னமா லந்தக்குடுக்குறாங்கப்பா..! லைன்ல அந்தப்பக்கம் எந்தக்கடன்காரனோ..உடனே பேட்டரி வீக்குன்னு ஒரு பிட்டப்போட்டு தப்பிக்கப்பாக்குறானேன்னு ஒரு எளக்காரப்பார்வை பாத்துக்கிட்டிருக்கும்போதே அந்த ஆள்...காயின் பூத்துக்கிட்ட போனார். அது எனக்கு நேர் பின்னாடி 5 அடி தள்ளி இருந்தது. அட... நல்லவரா இருப்பாரு போல இருக்கே...! ன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போதே...அவர் நம்பரை அழுத்திப் பேச ஆரம்பிச்சுட்டாரு..!
“ஆமாம்ப்பா ஸாரி...போன் ஆF ஆகிடுச்சு! அதான் காயின் போன்லேருந்து கூப்புடுறேன். சொல்லுப்பா அவரை இன்னிக்கே போய் பாத்துடவா? “
அந்தப்பக்கம் என்ன பதில் வந்துச்சுன்னு தெரியலை!
“சரிப்பா ! அவர் நம்பரைக்குடு..! இரு இரு எழுதிக்கிறேன்...
இந்த பேச்செல்லாம் ஓரக்கண்ணால நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன்.
( வேற வேலை?)
திடீர்ன்னு என் முதுகைத்தட்டினார்...சார்...பேனா குடுங்களேன்..!
இவ்வளவு நேரம் நமக்கு காலம் கடத்த உதவினாரேன்னு நானும் குடுத்தேன்...அப்புறம் அவரை நல்லா திரும்பிப்பாக்குற உரிமையை நானே எடுத்துக்கிட்டு...அவர் என்ன செய்யுறாருன்னு கையைக்கட்டிக்கிட்டு பாக்க ஆரம்பிச்சேன்.
சட்டைப்பையிலேருந்து ஒரு பேப்பரை எடுத்து ம்...சொல்லுங்க...! நைன்...செவன்...
ச்சை....எழுதமாட்டேங்குது...இருப்பா...! (என்னைப்பாத்து) ....சார்...! ஒரு பேப்பர் இருக்குமா..? என்கிட்ட இருக்குற பேப்பர் அழுக்கா இருக்கு..! அதான் உங்க பேனா எழுத மாட்டேங்குது...ப்ளீஸ்ன்னார்....சரின்னு நானும் ஒரு துண்டுப்பேப்பரை என் சட்டைப்பையிலேருந்து எடுத்துக்கொடுத்தேன்...!
இப்ப சொல்லுப்பா...! என்னவோ தெரியலை...! தடங்கலாவே இருக்குன்னார்!
அய்யோ பாவம்..ஒரு நம்பரை வாங்க இவ்வளவு பிரயத்தனப்படுறாரே...! ன்னு நினைச்சுக்கிட்டே பாத்தேன். மறுபடியும் நம்பரைச்சொல்ல ஆரம்பிச்சார்...
(தொடரும்)
Friday, August 1, 2008
என் இனிய அந்தோணி முத்து..!
இந்தப்பதிவை என்னால்
இவ்வளவு நேரமாகியும்
மறக்கமுடியவில்லை..!
உங்கள் வலிகள் வாங்கவில்லை நான்!
உங்கள் வரிகளை வாங்கி
அமர்ந்திருக்கிறேன்.!
இந்தச்சிந்தனைக்கு எத்தனை மனிதம்
வேண்டுமென்று.. எண்ணி எண்ணி
மாய்ந்திருக்கிறேன்.
இவ்வளவு ஆழமாக வாழ்க்கை பார்த்த
உங்களுக்கு வாழ்வியல்
உதவிகளைச்செய்யவைத்து
மனிதம் வளர்க்கும் பெரியவர்களை
மனதில் வாங்கிக் கசிந்திருக்கிறேன்.
எறும்புகள் இப்படி ஒரு மனிதரை
எப்போதும் சந்திக்கப்போவதில்லை!
இனிமேலும் அவை கடிக்கும் இடம்
அதற்கு கோவிலென்றுதான் வந்துபோகும்!
வலிக்காக வலிகொடுக்கும் வாழ்க்கையை
வலியற்ற வலியாக மாற்றிவிட்டீர்கள் அய்யா!
யார் சொன்னார்கள் நீங்கள்
வாங்கப்பிறந்தவர் என்று...!
நிறைய அள்ளிக்
கொடுக்கப்பிறந்தவர் நீங்கள் !
எறும்புகளுக்கு உணவையும்...
எங்களுக்கு தன்னம்பிக்கையையும்!
நாங்கள்தான் வாங்கப்பிறந்திருக்கிறோம்..!
வாழ்வின் நிதர்சனத்தையும்
வலிகளின் ஏற்றலையும்,
எதிர்காலப்பிரகாசத்தையும்
இதயமெல்லாம் உறுதியையும்
அள்ளி அள்ளிக்கொடுங்கள் !
அசராமல் கொடுங்கள் !
வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று
மார்தட்டிச்சொல்லுகிறோம்
கொடுப்பது அந்தோணிமுத்து என்பதால்!
Tuesday, July 29, 2008
கடைசி விருந்தாளி !
சென்ற வாரம் ஒரு நாள் மிகச்சாதாரணமாய்த்தான் விடிந்தது.
என் அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா...ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். புதுக்கோட்டை போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முயன்று , அதில் வெற்றியும் பெற்று—கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்த்தைத் தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கி , மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக்கி அந்தப்பகுதியில் சுமார் 120 பேருக்கு வேலையும் அளித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
வயது 32தான் ஆகிறது. எல்லாச்செயல்களிலும் ஒரு தெளிவு, பண விஷயத்தில் மிகவும் நேர்மை ஆகியவை நான் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கண்கூடாகக்கண்டது. யாருக்கும் பயப்படாமல் தன் மனதுக்குத்தோன்றியதை அப்படியே கூறும் விஷயத்தில் நாங்கள் இருவருமே ஒத்துப்போனதால் எங்கள் நட்பு நீடித்தது.
குடும்பத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர்..! அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ....மனைவியிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அண்ணன்களிடம் மிகவும் மரியாதையாக , அன்பாக நடந்துகொளவார்... நல்ல வீடு ஒன்று தனக்காகக் கட்டவேண்டுமென்று நினைத்து ஆறு மாதத்துக்கு முன்னால் மிகுந்த பொருட்செலவில் ஒரு மாளிகையைக்கட்டியிருக்கிறார். இவரது நிதி நி்ர்வாகத்திறனைப்பார்த்து அந்த மொத்தக்குடும்பமும் குடும்ப நிதி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறது.
யாரிடம் எப்போது பணம் வாங்கினாலும், சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கொடுத்துவிட்டு கம்பீரமாக நடை போடுவார்.
தொலைபேசியில் மிகவும் தெளிவாக, சுருக்கமாகப்பேச இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன்.
என்னால எல்லாம் எதுக்கும் பொறுத்துக்கிட்டிருக்க முடியாது சார்! எல்லாம் உடனுக்குடனே நடந்தாகணும் என்று அடிக்கடிக்கூறுவார்.
யாரிடம் என்ன பேசினாலும், அவர்களிடமே நேராகச் சொல்லிவிடுவார். ஒருவரைப்பற்றி பின்னால் பேசி நான் கண்டதே இல்லை!
வசீகரமான சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்துவிடுவார்..!
அந்த அளவு என் நண்பர்கள் வரிசையில் நீங்கா இடம்பிடித்த அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா சென்ற வாரத்தில் ஒரு நாள் மிகவும் அசாதாரணமாய் இறந்துபோனார்...!
மனைவியை பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பிவிட்டு, குற்றாலம் செல்லலாம் என நண்பர்களுடன் சென்று, கூட வந்த நண்பர்களில்
ஒருவரே சுமோவை ஓட்ட அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம் அருகே ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அந்த நாள் எனக்கு சாதாரணமாய் முடியவில்லை!
அவருக்கு...நேற்றுத்தான் மூன்றாவதாக அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது...
இன்று வரை மரணத்தை ஒரு கடைசி விருந்தாளியாக நினைத்து, அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத என்னை, மிகவும் காயப்படுத்தி , இன்றுவரை அதிலிருந்து மீளமுடியாமல் செய்த ஷேக் அப்துல்லா ....! ?

யாருக்கு, என்ன கற்றுக்கொடுக்க இந்த மரணம்.!? கடைசி விருந்தாளியையும் உடனுக்குடன் வரவழைத்துவிட்டீர்களே ஏன்?
Thursday, July 24, 2008
எங்க ஸ்டைல் சோதனை!!!
நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க! அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!
இந்த வீடியோவைப்பாருங்களேன்...!
நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்?
நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல் கேக்கறதுதான் ஞாபகத்துக்கு வருது!
Tuesday, July 22, 2008
இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!
புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது !
புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.
இப்படியே படிப்படியாய் நம் சகிப்புத்தன்மையை ஆழம் பார்த்தவர்கள் இப்போது தொகுதியிலும் கைவைத்திருக்கிறார்கள். ஒரு தேசமாக, தனியாக ஆட்சிபுரிந்த ஒரு நகரம் சார்ந்த மாவட்டத்தை துண்டு துண்டாக்கி மற்ற தொகுதிகளோடு இணைத்திருக்கிறார்கள். இதையும் புதுகை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்! இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை! ஏனெனில் அடுத்ததாக நாடாளுமன்றத்தொகுதிகளை அப்படியே மாவட்டமாக அறிவித்தால்...புதுக்கோட்டை தன் கடைசி அடையாளமான மாவட்டம் என்ற பெயரையும் இழந்து நிற்கும்.....
பின்னர் மன்னர் ஆண்ட ஊர் மாவட்டத்தையும் இழந்த கதையாகிவிடும்.
நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் தொகுதியை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்!
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி மக்கள் இனியும் பொறுக்கப்போவதில்லை. இதை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மீண்டும் வெவ்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தப்ப்ட்டு வருகிறது. எது நடந்தாலும் ஒரு பாரம்பரியம் மிக்க பகுதி தன் அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்பதை இங்கிருக்கும் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை!
ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்



இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !? :(
இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்.. தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு!
இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....!
எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன்.
அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :)

இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை!
இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! )
ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்சு..!
இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது..!
கடைசில பால் ஊத்தக்கூட ஆள் இல்லாம
போகப்போவுது!
அதுக்கு முன்னாடி ஏதாவது வைத்தியம் பாத்தாத்தான் உண்டு.!
இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா,
இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க
எல்லா கயவாளிக்கனவாண்களும் !
Wednesday, July 16, 2008
ஒரு பண்ணையின் மரணப்படுக்கை
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே இருக்குன்னா கன்னா பின்னான்னு வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு முன்னாடி தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு பல்வேறு பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி)
அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு!
இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க!
அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.!
விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது !
இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட மகிமை எப்பத்தான் நமக்கு தெரியப்போகுதோ?) அன்னிக்கு அந்த வழியா வேலை இருந்ததால, வண்டிய விட்டேன்.
அண்ணா பண்ணைங்கிற அந்த வரவேற்பு வளைவை பாத்ததுமே பக்குன்னு இருந்துச்சு! போகப்போக பல அதிர்ச்சிகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது.

நீங்களே பாருங்க..! பல கோடி ரூபாய் பொருள் செலவுல, அரசு நல்லது பண்ணலாம்ன்னு யோசிச்சு செய்ய ஆரம்பிச்ச திட்டத்தோட இப்போதைய
நிலமைய! ரொம்ப கொடுமை என்னன்னா..பல கட்டிடங்கள்ல ஆள் நடமாட்டமே கிடையாது. இதுலதான் பயிற்சிக்கூடமும் இருக்கு..! அதுல என்ன பண்றாங்கன்னே தெரியலை!


Wednesday, July 9, 2008
இதோ வந்துட்டேன்...!
இவ்வளவு இடைவெளி விழும்ன்னு நான் நினைக்கவே இல்லை!
(நல்லவேளை தப்பிச்சீங்க)
இந்தமாசம் பதிவு மாசம்தான்..!
வாழ்வின் ஒரு மாத நிகழ்வுகள்
நிறையவே ஆகிவிட்டது.
பல்வேறு சந்திப்புகள்
சில வெற்றிகள்
பல நகைச்சுவைகள்
கொஞ்சம் குமுறல்கள்
நிறைய கருத்துக்களங்கள்
குறைய தட்டிக்கேட்டல்கள்
அதிலும் சில உடனடி வெற்றிகள்
இரு ஜனனங்கள்
பல மகிழ்ச்சிகள்
என
ஜூன்மாதம் உணர்வுகளால் நிறம்பி வழிந்தது.
அது தந்த மயக்கமும், அயர்ச்சியும் எழுத விடவில்லை..!
எல்லாம் முடிச்சு....
இதோ வந்துட்டேன்.
Wednesday, June 11, 2008
தசாவதாரம் - விமர்சனம் !
இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.
படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.
ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.
கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த
ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...!
ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.
Saturday, June 7, 2008
இரு திருமணங்கள்
நேற்று முகூர்த்த நாள்..
ஊருக்குள் பலப்பல விழாக்கள்.. நானும் சில விழாக்களில் கலந்துகொண்டேன்.
அது ஒரு மருத்துவர் குடும்ப திருமணம்.! அவரது மகனுக்கு ஈரோட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர் குடும்பத்துப்பெண்ணை மணம் முடிக்கிறார்கள். நல்ல கூட்டம். சுமார் ஆயிரம்பேர் அமரக்கூடிய மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்தும் இருந்தோம். முகூர்த்த வேளை நெருங்கியது. யாருக்கும் அட்சதை கொண்டு தரப்படவே இல்லை. ஏன் இப்படி செய்கிறார்கள்? மறந்துவிட்டார்களோ? என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். அந்த விஷயம் மணமகனின் தந்தை (மருத்துவர்) காதுக்குப்போனது. அவர் மேடையில் இருந்தே ' நான் இருக்கிறேன்' என்பதுபோல் ஒரு பாவனை செய்தார்.
முகூர்த்த நேரமும் வந்தது. தாலியும் கட்டியாகிவிட்டது. எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் அந்த மருத்துவர் (மணமகனின் தந்தை)
ஒரு அற்புதமான காரியம் செய்தார். மணமக்களை கீழே அழைத்துவந்தார். ஒவ்வொரு வரிசை நாற்காலிகளுக்கு அருகிலும் , அவர்களை நிறுத்தினார்.
அட்சதை தட்டை எடுத்துவரச்செய்து, அந்த வரிசைக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச்செய்தார். அதேபோல் மண்டபத்தில் இருந்த
ஒவ்வொருவரும் வாழ்த்தும்படிச்செய்தார். உண்மையிலேயே மனநிறைவாகவும், 'அட! இது நல்லா இருக்கே!' என்று நினைக்கும்படியும் செய்தார்.
தாலிகட்டும்போது , என் பின் வரிசைக்காரர்களின் அட்சதையும், வாழ்த்தும் என் தலைக்கு வருவது தவிர்க்கப்பட்டது. இதை இனிமேல் நம் குடும்ப திருமணங்களில் பின்பற்றுவது என்று சபதமே எடுத்துக்கொண்டேன்.
**************************************************************************
அடுத்த திருமணம்... என் ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு!
அவர் என் ஆதர்ச கம்யூனிச குரு! எங்கள் குடும்பங்களில் பக்தி முத்திப்போய் இருந்தபோது அவர் சர்வசாதாரணமாக மார்க்ஸையும், லெனினையும்
வீட்டுக்குள் உலவ விட்டவர். கடவுள் ஒரு ஏமாற்றுவேலை என்று எனக்கு போதித்தவர்.எண்பதுகளின் ஆரம்பத்தில் அவருக்கு திருமணமானபோது எந்த
சம்பிரதாயங்களும் செய்யாமல், புரோகிதர் இல்லாமல், சாதாரணமாக நண்பர்கள் வாழ்த்த தாலி கட்டியவர்.
கம்யூனிசத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட பற்றுக்கு அவரும் ஒரு காரணம். ஆனால் அதில் நான் தீவிரமாக இல்லை என்பதில் அவருக்கு என் மேல் இப்போதும் வருத்தம் உண்டு. சிறுவயதிலேயே மூலதனம் என்ற தலையணை அளவு புத்தகத்தை என்னைப்படிக்கவைத்த பெருமை அவருக்கு உண்டு! ( அப்போது பல புரியாத தகவல்களை எளிய நடையில் எனக்குப்புரிய வைத்தவர்) ! மனைவியை தோழர் என்று அழைத்துப்பழகியவர்....மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டங்களில்
தெளிவாக முழங்கியவர். தொழிற்சங்க வாதிகள் அனேகம்பேர் எப்போதும் அவர் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
இடையில் பல வருடங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. நானும் உலகமெல்லாம் சுற்றிவிட்டு ஊருக்குள் வந்தபோது எங்காவது திடீர் சந்திப்புகள் நிகழ்வதுண்டு. நல்லா இருக்கீங்களா? எல்லாரும் நலமா? என்ற சின்ன உரையாடல்களுடன் எங்கள் சந்திப்புகள் முடிந்துவிடும். அவர் மகளுக்குத்தான் திருமணம்.
மண்டபத்துக்குச்சென்றபின் தான் தெரிந்தது. திருமணம் முழுமையான சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது! பெரிய திருப்பதி வெங்கடாஜலபதி படத்துக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து கொண்டி ருந்தார்.மனைவியை அழுத்தமாக பெயர் சொல்லி அழைத்தார்.முழுக்க முழுக்க
ஒரு ஆதர்ச அப்பாவாக மாறி இருந்தார். அனைத்து கம்யூனிஸ்ட் நண்பர்களையும் அழைத்திருந்தார். நம்ப கொள்கையெல்லாம் என்கிட்ட இப்ப எதிர்பார்க்காதீங்க என்று சத்தம்போட்டு சிரித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
அடடா வாழ்க்கை எப்படியெல்லாம் கொள்கை மாற்றம் கொள்ளவைக்கிறது? நல்லவேளை நமக்கெல்லாம் இந்தமாதிரி கொள்கை எதுவும் இல்லை :-)
யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
40 வயது வரை கம்யூனிசம் விரும்பாதவன் மண் !
40 வயதுக்கு மேல் கம்யூனிசம் விரும்புபவன் முட்டாள் !