தங்கம் வாங்குவதை நிறுத்துங்க!

மக்கள் எல்லோரும், குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும். ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..! அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப் புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும். இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள். குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும் முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள். ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை இருக்கும். ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது....