இதையும் விமர்சனம் பண்ணினா என்ன ?
சினிமாவைத்தான் விமர்சிக்க ம்னு இல்ல ! மெகா சீரியலும் நம்ப வீட்டுக்குள்ளயே வந்து டிக்கட் வாங்கிக்காமலே டார்ச்சர் பண்ணுதுல்ல.! அதயும் விமர்சனம் பண்ணினா என்னன்னு..... இறங்கிட்டேன். சினிமாவில்.. சில சீன்கள் நடந்திட்டிருக்கும்போது எழுந்து போய் வந்தால் கதைத்திருப்பத்தை கவனிக்கமுடியாம போயிடும். ஆனா நெடுந்தொடர்களுக்கு அதிலிருந்தும் விலக்கு இருக்கு.! பலமாசம் பாக்காம இருந்தாலும் பளிச்சுன்னு விட்ட இடத்திலிருந்து கதை புரியும். சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம். கோலங்கள் னு ஒரு தொடர் வருது.! முதல்ல வேகமா நடந்தும் ஓடியும்..தேவயானி ஒரு பாட்டு பாடுவாங்க ! (அது விளம்பரதாரர்கள் நிலையப்பொறுத்து சுருக்கமாவும், சில நாள் முழுசாவும் இருக்கும்) அப்புறம் கதை ...எதை? அபின்னு ஒரு பொண்ணு (எப்பவுமே ஒரு பையோடயே அலையும்) வேலைக்கு போகுது..அதுக்கு ஒரு கல்யாணம் ஆகி புருசன் குடும்பத்தோட அநியாயத்தை பொறுத்துக்குது..! அவனும் டைவர்ஸ் பண்ணிடுறான்..! அப்புறம் வேலைபாக்குற இடத்தில் முதலாளி நிறுவனத்தை விற்றுவிட புது முதலாளியோட அராஜகம் பொறுக்காம பொங்கி எழுந்து..அழுதுக்கிட்டே வெளில வந்து, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு புதுமுதலாளி ஆதி...