வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1
சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான் (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..) என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது. பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது. ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார். ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார் ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார். சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார். ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார். ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார். ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு ஒளிப்பதிவாளர...