Posts

Showing posts with the label கேட்டால் கிடைக்கும்

வாயுள்ள பிள்ளை Ver. 2.0

Image
இந்த மாத பில் மழை ! ஏர்டெல் பிராண்ட்பேண்ட் பில் வந்தது...  சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல், முழு வாடகையும் போட்டு சத்தமில்லாமல் 100 ரூபாய் அதிக பில்லும் ஆக்கி அனுப்பியிருந்தார்கள். உடனே.. 1ம் தேதி முதல் 10 தேதி வரை உங்கள் சேவையே இல்லாதபோது எப்படி முழு பில்லும் அனுப்பியிருக்கிறீர்கள்? என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன். சில மணி நேரங்களில் ஒருவர் பேசினார். ஓக்கே சார் ! உங்களுக்கான 10 நாட்களுக்கான பில் தொகையை கழித்துவிடுகிறோம் என்றார். அதேபோல் கழித்து SMS வந்தது. மகிழ்ச்சி.. !! அதே நேரத்தில் மொத்தத் தொகைக்கு போட்டிருக்கும் சர்வீஸ் டேக்ஸையும் சரியாகக் கழித்து பில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஏனெனில்..உங்களுக்கு 1299 ரூபாய் வாடகை எனில் 14.5% சேவை வரி சேர்த்துப் போடுவார்கள் . அதாவது 188.35. ஆக நீங்கள் கட்டவேண்டிய தொகை 1487.35. ஆனால், நீங்கள் கழிக்கச் சொல்லி கேட்டதும். திறமையாக 1299/30 = 43.3... அதை 10 நாட்களுக்கு சேர்த்து 433 கழித்து உங்களை குஷிப்படுத்துவார்கள்.  ஆனால், 1299- 433 = 866 அதற்கு சேவை வரி 125.57 தான்... அதற்குப் பத...

ஏமாற்டெல்!

Image
இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...! கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்.. பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது. நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன். அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது. அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன். இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் ...

Veள்ளி Black Colour ஜுவல்லரி

Image
     அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…       இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார்.       விபரம் கேட்டேன். சொன்னார்.       அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில்,  அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.      அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 ந...

ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்

Image
குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.      கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி, விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன் என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள். நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன.. 100 ரூபா ஆகும் சார்! டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம். வராது சார்! என் மீட்டர் ரிப்பேர். சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா? இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க! மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது. பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை. மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா? பக்கத்து ...

குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .

Image
           சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.      டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.      நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன், ’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல, ’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! ம...

கேட்டால் கிடைக்கும் - கூட்டம்

Image
           சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டு கூட சீற்றம் கொள்ளாதவர்களால் , இந்த தேசத்தின் நடக்கும் எந்த ஒரு பெரிய அநியாயத்தையும் கண்டு பொங்கவே முடியாது  என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.! இன்றைய காலகட்டத்தில் நம்மைச்சுற்றி அதிக அநியாயங்கள் நடப்பதற்கும் நாம்தான் காரணம்.! பல்வேறு இடங்களில் நடக்கும் சிறு சிறு அநீதிகளைத் தட்டிக்கேட்கத் தொடங்கினாலே போதும்! மாற்றம் நிச்சயம்! கேட்டால் கிடைக்கும் என்ற முகநூல் குழுமத்தை நானும், நண்பர் கேபிள் சங்கரும் தொடங்குவதற்குக் காரணமே அடிப்படையில் எங்களுக்கு இருந்த தட்டிக்கேட்கும் குணம்தான்..! குழுமத்தைத் தொடங்கி, எங்கள் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கவும், ஒத்த குணம் கொண்டவர்களும், இதுபோல் நாமும் தட்டிக்கேட்க வேண்டும் என்று நினைத்தவர்களும் சேரத்துவங்கினார்கள். எங்களது சொந்தப் பிரச்னைகள் தவிர, பல்வேறு நண்பர்களின் பிரச்னைகள் எங்களிடமே வந்து, நாங்களும் அவற்றை முறையாகத் தட்டிக்கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். குழுமத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3000த்தைத்  தாண்டியிருக்கிறது. எனவே, இந்தக் குழு...

நானோ சர்வீஸ்..கேட்டால் கிடைக்கும்

Image
           நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும் கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள் – இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள். நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில் நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே  கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ...

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !

Image
சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:    கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெ...