Posts

Showing posts from February, 2008

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி !

நமக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனிதத்தன்மையையும் ,கொன்னு குழம்பாக்கி...மதிய சாப்பாட்டுக்கு பரிமாறிடும்போல இருக்கு இந்த பாழாப்போன கோபம்! அப்ப கோபமே கூடாதா?- யாரு சொன்னா? நல்லா கோபப்படணும்! எப்போதும் கோபப்படுபவன் முட்டாள் ! எப்ப்போதுமே கோபப்படாதவன் மண்ணு ! பாரதியார் கூட ரௌத்திரம் பழகு ன்னார். பழகுதல் என்றாலே ஒரு பயிற்சி இருக்கணும். பயிற்சின்னா அது போலியாக்கூட இருக்கலாம். ஒத்திகை மாதிரி.! ஆனா அதை மனிதர்கள் மேல திருப்புவதில்தான் நாம் தோற்றுவிடுகிறோம். நாம் ஒரு விருந்துக்குப்போறோம். நமக்கு கத்திரிக்காயில் செய்த எந்த உணவுப்பொருளும் பிடிக்காது. ஆனா அங்கு அதை போட்டு விடுகிறார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒதுக்கி வைத்துவிட்டு பிடித்தவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவோம். சாப்பிடும் பொருளில் நல்லவை அல்லவை பார்க்கத்தெரிந்த நமக்கு வார்த்தைகளில் மட்டும் அப்படி ஒரு கரிசனம். எல்லா வார்த்தைகளையும் எடுத்துப்போட்டுக்கொண்டு.. பதில் ஆக்ரோஷமாய் சொல்கிறேன் பேர்வழி என்று உணர்விடம் தோற்றுப்போய் நிற்போம். ஒருவர் சாதாரணமாக...'நாயே' என்று திட்டிவிட்டால்...ஐயோ பாவம் எதிரில் இருப்பவர் மனிதர் என்றுகூட என் ந

பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!

எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன். ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும். ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே! அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது) தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்

பொத்தான் வாழ்க்கை!

Image
என் தாத்தா பிறக்கும்போது அனேகமாய் அவருக்கு பொத்தான்கள் பழகியிருக்காது. அதிகபட்சமாய் அரை நூற்றாண்டில் விளக்குக்கும் காற்றுக்கும்தான் அதிகப்பொத்தான்கள் அழுத்தியிருப்பார்! என் அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பொத்தான் வாசம்! அலுவலகம் சென்று அழைப்புமணி அழுத்தவும் கணக்குகள் போட கால்குலேட்டர் அழுத்தவும் பொத்தான்கள் அவருக்கு புதிதாகக் கிடைத்தன! என் வாழ்வின் ஆரம்பம் அப்பாவின் உபயோகம் போக ரிமோட் என்றொரு இன்னொரு பொத்தான் மூட்டை வந்து  வாழ்வில் பொத்தான்களை அதிகமாக்கிப் போனது. போகப்போக பொத்தான்களின் ஆக்கிரமிப்பில் திணறித்தான் போனேன். அதிகாலை எழுந்தவுடன் அலாரம் அணைக்கவும் இட்லிக்கு சட்னியை இதமாக அரைக்கவும் அலுவலக மாடிக்கு அவசரமாய்ச் செல்லவும், உள்ளே அழைப்பதை இங்கிதமாய்ச் சொல்லவும், நாடுதாண்டி வாழும் நண்பனிடம் நடந்து கொண்டே பேசவும் வேலைகள் அனைத்தையும் விரைவாக முடிக்கவும், முன்னிருக்கும் திரையில் என்னை முழுமையாய்த் தொலைக்கவும் கூடி நிற்கும் கூட்டத்துக்கு கொள்கை விளக்கம் சொல்லவும் குடிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து அருந்தவும் மதிய சாப்பாட்டை சூடுபடுத்தி மனம் மகிழ உண்ணவும் மாலை நேர சந்தோஷத்தை மாற்றி மாற்றி ரசிக

குடும்ப அமைப்பும் கோபிநாத்தும்

சமீபத்தில் ஒரு ரோட்டரி சங்க விழாவில், விஜய் டிவியில் நீயா?நானா? நடத்தும் திரு.கோபிநாத் அவர்களை பேசக்கூப்பிட்டிருந்தார்கள். அவர் பேசுவதற்கு முன்..கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் : ' இவர் என்ன பேசப்போறாரு?' 'நம்மை விட்டு கேள்விகேக்கச்சொல்லி அவரை பதில் சொல்லவைக்கலாமே?' 'இந்தவாட்டி நடிகர் யாரையும் கூப்பிடலை இல்லையா? அதனால் பிரபலத்துக்காக கூப்பிட்டிருப்பாங்க!' இவர்களுக்கெல்லாம் கேமிரா முன்னால் நின்னாத்தான் பேசவரும்..இங்க எப்படி? என்ன பேசிடப்போறாங்க!' 'டிவில நிறையதடவை டேக் வாங்கி பேசலாம். இங்க அப்படி இல்லைல்ல..! பாரு ஒரு 15 நிமிஷம் பேசிட்டு இறங்கிடுவாரு' என்றெல்லாம் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அவர் பேசும் நேரம் வந்தது.மேடையேறினார்...ஒப்பனை எதுவுமில்லாத சாதாரண முகம். நம்ம ஊர் வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அன்பான ஊழியரின் பாவனை.! பேச ஆரம்பித்தார்...! 'எனக்கு நகைச்சுவையாகவோ, ஜோடனைகளுடனோ பேச வராது. மேலும் அவ்வாறு பேச நான் வரவில்லை..சில முகத்தில் அடிக்கும் நிஜங்களைக்கூறுகிறேன்.' இப்படி ஆரம்பித்து அவர் எடுத்துக்கொண்ட விஷயம்..

விருந்து @ சலூன் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

நான் சலூனுக்குப்போய் முடி வெட்ட ஆரம்பிச்சதை இங்க சொல்லியிருக்கேன் பாருங்க! அந்த நேரம் பாத்து எனக்கு முடி வெட்டி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. முதலில் சுவாரசியம் இல்லாதது மாதிரி இருந்துட்டு..அப்புறம் நண்பனிடம் ... டேய்..அந்த ஒரு புக்குதான் இருக்கா..இல்லை வேற நிறைய இருக்கா? நான் பாத்தப்ப ஒரு புக்குதாண்டா இருந்துச்சு! இது என்னடா வம்பா இருக்கு..நாம போற நேரத்தில் நிறைய பேர் இருந்து அதுல கொஞ்சம் வலுவானவன் அதை எடுத்து படிச்சிக்கிட்டிருந்தான்னா ஆசையெல்லாம் வீணா போயிருமேன்னு ஒரே கவலை.! அப்புறம் ஒரு நாள் மீண்டும் அவனிடம்..! ஆமா..அங்க முடி வெட்ட எவ்வளவுடா? 3 ரூபா! - இதுவேறு கவலையா போச்சு. நம்ம குடும்ப சலூனில் 2 ரூபாதான். 50% நிதி இழப்பை ஏத்துக்கமாட்டாங்களேன்னு யோசிச்சு.. சலூனுக்குன்னு 2 ரூபாதான் வாங்குறது..ஆனா அதுக்கும் முன்னாடி எப்படியாவது ஒரு ரூபாய் தேத்தி வச்சிக்கிறதுன்னு ஒரு சாணக்கியத்திட்டம் போட்டேன். அப்பதான் வந்து சேந்தது..குழந்தைகள் திரைப்படம்..!அதைக்காட்டி ஒரு ரூபாய் அதிகமா வாங்கி (என்ன பொய் சொன்னேன்னு நினைவில்லை) அதை திக் திக்குன்னு பாதுகாத்து வச்சிருந்தா.......... முடிவேற அந்த முறைன்னு

சலூனில் விருந்து

 நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது எங்க குடும்பத்தில், தாத்தா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா பையன் ஒருத்தன், அத்தை பையன் ஒருத்தன், நான் என ஆண்கள் கூட்டம் அதிகம். மாசத்தில் ஒரு நாள் ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வந்து எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளிட்டு போவார். அது ஒரு திருவிழா மாதிரி நடக்கும். வரிசையா போய் அந்த பலகையில் உட்காருவது... பெரியவுங்களுக்கு மட்டும் பிளேடு போட்டு முகச்சவரம் செய்வதை ஏக்கமா பாத்துக்கிட்டே.. எப்படா எனக்கு இந்தமாதிரி முகமெல்லாம் முடி வரும்னு அண்ணன் கிட்ட கேக்கறதுன்னு..சந்தோஷமும் சண்டையுமா நகரும் முடிவெட்டுற நாள்.. அன்னிக்கு எல்லாருக்கும் மிளகு ரசம் மட்டும் வச்சு, சுட்ட அப்பளம், கருவேப்பிலை துவையலுடன் சாப்பாடு பலமா இருக்கும். அப்புறம் நாட்கள் போச்சு...நானெல்லாம் சுயமா (?) சிந்திக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடம் போற வழியில் அழகான கண்ணாடி கதவு வச்சு சலூன்கள், உள்ளே பாட்டுக்கேட்கும் சலூன்கள் என பல்வேறு சலூன்கள் இருந்தது. அதில் போய் அந்த குஷன் சீட்டில் உட்கார்ந்து முடிதிருத்திக்கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகமானது. மேலும் சில சமயங்களில்..முடி வளரும் வேகம் குறைவ

சாமி காட்டிய தங்கசாமி!

மரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது... அது ஒரு சாதாரண ஓட்டு வீடு.! சுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்! நான் சென்ற நாள் தீபாவளி!      பலகாரம் எல்லாம் கொடுத்து நன்கு கவனித்தார். அவர் மனைவிக்கு காது கேட்பதில் கொஞ்சம் சவால், ஆகவே சத்தமாகவும், சைகையுடனும் பேசி..அவரையும் அன்பாக நடத்தி உணவு வழங்கினார். (எவ்வளவு பெரிய முறுக்கு..சீயம்..அடேயப்பா!) தேக்கு..செஞ்சந்தனம், சந்தனம், வேம்பு என்று பல மரங்களைப்பற்றி நிறைய தகவல்கள் சொன்னார். சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.பயமாக இருந்தது...வாக்கின் வலிமை பற்றி யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது... இப்போது தாரே சமீன் பர் படத்திலும் அதே தகவலை ஆமீர்கான் சொன்னதும் அடேயப்பா நம்ம ஆள் சாதாரணமானவரில்லை என்றிருந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நல்ல நண்பர் என்றார்.! இப்படி பேசிக்கொண்டே, வாங்க சாமி ரூமுக்கு போலாம் என்றார்..! அது ஒரு சின்ன தடுப்பு இடப்பட்ட அறை! இந்தப்பக்கம் நாம்! அந்தப்பக்கம் கடவுள்! இடையில் திரை.! நான் தங்கமணியுடன் போயிருந்ததால், அவர் தங்கமணியைப்பார்த்து நீங்க இதுவ

மரம் தங்கசாமி

அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்! அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார். 'அய்யா காசு குடுங்கய்யா!' ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை  செய்யலாமில்ல? 'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!' அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா? நல்லா பாக்குறேன் அய்யா 'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார். கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...? ம். 18 ரூவா இருக்குங்க! சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல? சரிங்கய்யா..! என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று! உடனே ஒ