Posts

Showing posts from September, 2008

சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

http://podian.b logspot.com/200 8/09/blog-post_ 5240.html சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு! அட....அப்படியா? பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது  பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன். அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்! சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்: அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு! இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை!  இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

அப்துல்லா என்ன செய்தார்?

எவ்வளவோ கையில் இருந்தும் செய்ய மனமில்லாதவர்கள் மத்தியில் ஒரு சதுரங்க வீராங்கனைக்கு சகஜமாக உதவிகள் செய்து எங்கள் அத்துனை பேரின் மனத்திலும் அழியா இடம்பிடிக்கும் அப்துல்லாவே! நீங்கள் என்றென்றும் அன்புடன் நட்புடன் அளவில்லா செல்வத்துடன் நீண்ட ஆயுளுடன் நிறைவான மகிழ்ச்சியுடன் ஆரோக்கிய உடல்நிலையுடன் நீடூழி வாழ்க வாழ்க! அத்தனை வாழ்க ! வும் உங்களுக்காகவும் இன்னும் உங்கள் உதவிக்காகக்காத்திருக்கும் இயலாதவர்களுக்காகவும்! இறையருள் என்றும் உங்களிடம் நிலைக்கட்டும்! இயற்கையும் உங்களுக்கு எல்லாமும் அளிக்கட்டும்! நண்பர் புதுகை அப்துல்லா.... திராவிடமும், கம்யூனிசமும் என்ற தலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் வெண்பூவின் பின்னூட்டத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அதன் பிரதிபலிப்புதான் இந்தப்பதிவு!

மும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு!

ரொம்ப லேட்டா வர்றதுக்கு மன்னிக்கணும் ( இப்ப வரலைன்னு யாரு கவலைப்பட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?) மும்பை மேரி ஜான் - இதுதான் படத்தோட பெயர்! முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப்படிச்சுடுங்க! ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுரேஷாக வரும் கேக்கே மேனன். ! ஒவ்வொரு காட்சியிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார். அதுவும், யூசுப்பை தேடும் காட்சிகளில், அவரது வீட்டுக்குப்போய், யூசுப்பின் அம்மாவிடம் பெயரை மாற்றிச்சொல்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்பை வாங்கத்தயங்குவதும், அந்த சந்தின் வழியே செல்லும்போது ஏன் முகம்மது ரபி தான் கேட்பார்களா? கிஷோர்குமார் கேட்கமாட்டார்களா? என்று ஒவ்வொன்றிலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும்போதும், கடைசியாக யூசுப்பின் அன்பை  மதித்து யதார்த்தமாக மனம் மாறும்போதும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாமஸாக வரும் இர்பான் கான்.! மனிதருக்கு அப்படி ஒரு முகபாவத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. அந்த இயலாமை நிறைந்த குடும்பத்தலைவனாக ஜொலிக்கிறார். பெரிய ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டரில் ஏறமுடியாமல் குழந்தையும், மனைவியும் தடுமாறி ஏறும் காட்சி, இன்றும...

மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு

மும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே !  மாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது. ரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள்.  பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது. சுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது.  எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங...

மும்பை என் உயிர் - ஒரு பார்வை

Image
விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?) அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல். இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின் நண்பர். "டோம்ப்வில்லி பாஸ்ட்" என்ற படத்தின் மூலம் புகழடைந்தவர். 'எவனோ ஒருவன்' என்று  அதை தமிழில் பேசவைத்தவர். மும்பை நகரத்தில் வெவ்வேறு தளங்களில் சில மனிதர்களும் ஒரு குண்டுவெடிப்புக்குப்பின் அவர்களது வாழ்வும், மனநிலையும்தான் கதை! ஒரு டீக்கடையில் வந்து கூடும் சில நண்பர்கள்..அவர்களில் சுரேஷும் (கே கே மேனன்) ஒருவர். அவருக்கு எப்போதுமே இஸ்லாமியர்கள்மீது ஒரு  இனம்புரியாத சந்தேகமும், வெறுப்பும். ஆனால நண்பர்களிடம் சகஜமாகப்பழகும் ஒரு கணிப்பொறி விற்பனையாளர்.  "மூணு மாசமா ஒரு கம்ப்யூட்டர்கூட விக்கலை" என்று நண்பர்கள் டீக்காக காசு கேட்கும்போது சொல்கிறார்! ரூபாலி ஒரு டிவி நிருபர்.  ( சோஹா அலிகான் ). - தன் வருங்க...

சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பொடியன் என்று பெயரிட்டுக்கொண்டு பொறுப்பாக பதிவுகள்  இட்டுக்கொண்டு அரிசி விளைவதாகட்டும் அரசை விழைவதாகட்டும் பெண்கள் நலம் பேணும் பெரிய செயல்களாகட்டும் திறம்பட உறவு பேணும் உத்தம்ர் சஞ்சய் காந்தி செப்டம்பர் ஏழாம் நாளில்.. இன்றுதான் பிறந்தாராம்! அத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி சஞ்சய்க்கு வாழ்த்தும் சொல்லி எந்நாளும் எப்போதும் தப்பாமல் மகிழ்வு கொண்டு செல்வங்கள் எல்லாம் கண்டு சிறப்புற வாழ்க என்று அன்புடன் இந்த நண்பனும் வாழ்த்துகின்றேன்.!

உள்ளக்குழந்தை எங்கே?

எல்லா அசைவிலும் இயல்பு காட்டி எல்லாச் செயலையும் இனிக்கச் செய்து எல்லோர் உள்ளமும் கொள்ளை கொள்ளும் குழந்தைகள் என்னும் குதூகலச் சிற்பிகள்! அவை பசை எடுத்துத் தின்னும் இசை கேட்டால் ஆடும் கை நீட்டி ஓடி வரும் கைதட்டலில் உலகம் தரும்! இருப்பதை தர மறுக்கும்! இல்லாததை பெற நினைக்கும்! அதிகம் அழுது பார்க்கும்! அதிலும் தன் அழகு காட்டும்..! புத்தகம் கிழித்துவிட்டு புதிதாகச்சிரித்துவைக்கும் பொக்கைவாயெடுத்து பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்! வா வென்று சொல்பவரின் வயதைப்பார்க்காது அழைக்கும் மனிதரின் அழகு பார்க்காது. உரிமையாய் தூக்கினால் உறவு நோக்காது..! எல்லோரும் அதற்கு எல்லாம்தான்! யாரையும் பிரித்துப்பார்க்க குழந்தைகள் அறியாது. குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லி மறுகாது! சுற்றம் எல்லோரிடத்தும் சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்! அத்தகைய குழந்தையாய் அழகாய்த்தான் இருந்திருந்தோம்... வளர்ந்து போய்த்தான் குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..! உள்ளக்குழந்தை எங்கே என்று உலகம் முழுதும் தேடுகின்றோம்! எதற்கெடுத்தாலும் பெரியவராய் எப்போதும் நினைக்கின்றோம்! அதில் நம் தன்முனைப்பை முன்னேற விடுகின்றோம். அடுத்தவர் தவறு செய்தால் தண்டன...