Posts

Showing posts from February, 2011

இளைஞர்கள் இரண்டுபேர்!

Image
       ஒரு சில விஷயங்கள்   நடக்கும்போது கேயாஸ் தியரிபோல் , ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது .          ஊழல் நிறைந்துபோய் , எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான் Mohamed Bouazizi   என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர

யுத்தம் செய்!

Image
காட்சியமைப்புகளில் ஜப்பானியத்திரைப்படங்களையும், ஜெர்மானியப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ஒரு உள்ளூர் திரைக்கதையில் மக்களை அமரவைப்பதில் மிஷ்கின் வெற்றி கண்டிருக்கிறார். சேரனொரு  சிறந்த காவலர்! புலனாய்வில்  தேர்ந்த ஆர்வலர்! பொது இடங்களில் வெட்டப்பட்டகைகள் கிடக்க, இவ்வழக்கை எடுத்து ஆய்கிறார்! காணாமல் போன தன் தங்கையையும் தேடி நோகிறார்! கைகள் கிடந்த வழக்கில் கட்டம் கட்டமாய் நகர பொய்கள் கூறும் போலீஸை புலனாய்ந்து இவரே பகர துணிக்கடை அதிபரின் துச்சாதன லீலை விளங்க அதனால் பாதித்த  மருத்துவர் குடும்பமே நொறுங்க, அவர்களின் தற்கொலையே அடிநாதமாய்த் துலங்க, சேரனுக்கு தங்கையின் இருப்பிடம் தெரிய குற்றத்தின் கொடுமையான காரணமும் புரிய நேர்மையான காவலனும், நீதிபெறா கொலையாளியும் நின்றாடும் சதிராட்டத்தில் இரத்தம் பெய்கிறது. தீமை கண்டு கொதித்தெழும் யுத்தம் செய்கிறது!! சேரனுக்கு ஒரு அமர்த்தலான ஆக்‌ஷன் படம்.! அதுவும் அந்த இடைவேளை சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது!    இசையும், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. கே, சத்யா இருவருமே மிஷ்கினின் தேர்வில் தவறில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள