Posts

Showing posts from October, 2013

நீயெல்லாம் நண்பனாடா?

Image
என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான் , படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான் . எல்லாரையும் கலாய்ப்பான் . நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான் . எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான் . ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா ... நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான் ! நீதானேடா கூப்புட்டன்னா , நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான் . அவன் நல்லவனா ? கெட்டவனா ? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான் . கட் பண்ணினா ... நாங்கள்லாம் +2 க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம் . அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம் ..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம் . நான் வாரம் ஒருதடவை அ