Posts

Showing posts from December, 2012

தேடிக் காதல் நிதம் தின்று...

Image
‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே... அண்டப் பெருவெளியில் ஆகாசக் கொப்புளங்களின் மூர்க்கச் சீற்றங்களாய் மொய்த்திருக்கும் சர்ப்பச்  சிறகுகளுக்குள்  சாத்திரச் சங்கிலிகள் சதிராடிப் போட்டுடைத்த  வெப்பக் காற்றுப் பந்தாய் வெடித்துக்கிளம்பும் சூனியத்தின் நாற்றங்காலில் பார்வை எரிக்குழம்பால் மகரந்த இதயத்தில் சூலுண்டாக்கி,  ஒற்றை நீர்த்துளியை  வார்த்துச் சென்றாய் நீ! படித்துப் பார்த்துவிட்டு வாவ்! நீ கவிஞன் டா என்று  சொல்லிக்கொண்டே கொடுக்கும், உன் முன் நவீன முத்தத்துக்காக பின் நவீனம் பிதற்றுகிறேன் நான்!                 aaaaaaaa உன்னைப் பெற்ற கர்வத்தில் உன் அப்பாவும் கொஞ்சம் அதிகமாய்த்தான் ஆடுகிறார் . நீயெல்லாம் என்னத்த படைச்ச ..? என்று   பிரம்மனைப் பார்த்து நக்கலடிக்கிறாராம் .! aaaaaaaa வருடம்   பிறக்கும் வினாடியில் 12  முத்தம் தரவேண்டும் என்றாய் ! இது   என்ன கள்ள ஆட்டம் ? அது 2012 தானே ?