பெயருக்கு முன்னால்
பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு. அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும். எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…! வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதா...