Posts

Showing posts from August, 2014

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா ? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில் .. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை ... மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார் .... நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை ? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள் ? என்று !! என் நினைவு சரி என்றால் ... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி , 7 ஆண்டுகளுக்கு முன்னால் , மருத்துவ மாணவர்கள் போராடினார்கள் . . அதுவே போகட்டும் .. எனக்கு ஒரு சந்தேகம் ..!! எஞ்சினியர்கள்தான் .. எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? வக்கீல்கள்தான் ..   சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை ... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன ? இதைத்தான் நம்ம ஊரில் .. போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !! கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் ..!! சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்… எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்