ஜில்லெட் - கேட்டால் கிடைக்கும்
பொதுவாக ஷேவிங்குக்கு ஜில்லெட் நிறுவனத்தின் மாக் 3 (Mach 3) அல்லது வெக்டர் பிளஸ் (Vector Plus) ஆகிய ரேஸர் மற்றும் பிளேடு ரகங்கள்தான் வாங்குவது வழக்கம்! அன்று கொஞ்சம் ஆர்வமாக வெக்டர் 3 என்ற ரகத்தில் 3 பிளேடு கொண்ட ஒரு ரேஸரைக்கண்டவுடன் , இதை முயன்றால் என்ன? என்ற எண்ணத்தில் வாங்கி வந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்குப்பிறகு அதனைப் பிரித்து பயன்படுத்தினால், முதல் ஷேவே தோலின்மீது எரிச்சலாகப் பரவியது. பொதுவாக புதிய ப்ளேடில் இருக்கும் வழுக்கும் தன்மை இல்லை. இந்த ப்ளேடு மட்டும்தான் இப்படி என்று நினைத்து, அடுத்தடுத்தவற்றைப் பயன்படுத்தினால், அன்று முழுவதும் முகத்தில் யாரோ உண்மையிலேயே வன்மத்தில் ப்ளேடு போட்டமாதிரி எரிச்சல்.! அப்படியே அடுத்தது சரியாக இருக்கும் என்று முயற்சித்தே, அந்தப் பெட்டியில் இருந்த நான்கு ப்ளேடுகளும் காலி! மொத்தத்தில் வெக்டர் 3 ப்ளேடு சரியில்லை என்பதுதான் முடிவாக வந்தது. உடனே சிரமம் பாராமல், ஜில்லட்டின் இணையதளத்தைத் தேடி, அதன் வாடிக்கையாளர் பின்னூட்டப் பக்கத்துக்குள் நுழைந்து, வெக்டர் 3 உடனான எனது அனுபவத்தைப் பகிர்ந்து, இதுக்கு என்ன செய்யப்போறீங்க எ...