இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு…
மறுபடியும்
கேட்டால் கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது இந்த உலகம்.!
இந்த
ஏப்ரல் 14 அன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். அங்கு ஒரு லயன் டேட்ஸ் பேரீச்சை அரைக்கிலோ
பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தாயிற்று.!
பெட்டியை
பிரிக்காமலேயே வைத்திருந்து, 19ம் தேதி அதைப் பிரித்து ஒரு பழம் எடுத்து தின்னலாம்
என்று பார்த்தால், முதல் பழத்திலேயே வாலைக்குழைத்துக்கொண்டு, மூக்கை நீட்டியது ஒரு
குட்டி வெண் புழு ஒன்று!
திடுக்கிட்டுப்
போனேன். சரி.. ஒரு பேரிச்சையில் தான் இருக்கும்போல என்று அடுத்ததை எடுத்தால் அதில்
ஒரு கருப்பு நிற குட்டீஸான வண்டு.. புழுவின் பெரியக்கா போலிருக்கிறது. அப்புறம் சில
பழங்கள் சுத்தமாக இருந்தது. மீண்டும் புழு..!
ஆஹா..
பழைய சரக்கை வாங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்து டப்பாவைப் பார்த்தேன். தெளிவாக
மார்ச் 2012 என்று போட்டிருந்தது. ஆக இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதில் நான்கு
மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று போட்டிருந்தது.
இதை
இப்போது எப்படி மாற்றுவது என்று யோசிக்கும்போதே, தங்கமணி,
‘அவ்வளவுதான்!
குப்பைல போடவேண்டியதுதான்..! இதுக்காக எடுத்துக்கிட்டு புதுக்கோட்டைக்கா போவீங்க? ம்….நீங்க
போனாலும் போவீங்களே? என்று கறுவினார்.
இது
என்னடா சோதனை என்று எண்ணிக்கொண்டே, அந்த டப்பாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். கஸ்டமர்
கேர் எண் கிடைக்கும்..அதில் கேட்கலாம் என்று! ஆனால் அப்படி ஒரு எண் இருப்பதற்கான அறிகுறியே
இல்லை. மீண்டும் மிகவும் கூர்ந்து தேடியதில் ஒரு எண் அச்சிடப்பட்டிருந்தது. அதில்
, யாரும் அவ்வளவு சீக்கிரம் படித்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கிருந்த கவனம் தெளிவாகத்
தெரிந்தது.
பரவாயில்லை
என்று அதையும் லென்ஸ் வைத்து எண்ணைக் குறித்துக்கொண்டு அவர்களுக்கு போன் அடித்தேன்.
ஒரு பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன்.
உடனே,
உங்களுக்கான தீர்வு இன்னும் இரண்டு நாளில் கிடைக்கும் சார்! என்று சொல்லி, என் பெயர்
முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்..
இரண்டு
நாட்களுக்குப்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் மூன்றாவது நாள் அழைத்தேன். அந்தப்
பெண் விடுப்பில் போய்விட்டார். (அனேகமாய் நான் அழைப்பேன் என்று நினைத்திருப்பாரோ? J ) வேறொரு பெண் எடுத்தார். அவரும் விபரம்
கேட்டார். எனக்கு மூக்கு வாசலில் நின்றிருந்த கோபம் வாயில் படி ஏறியது.
‘டெய்லி
உங்களுக்கு பிரச்னையை சொல்ல நான் இல்லை..! உங்களுக்கு மேலதிகாரி யாரேனும் இருந்தால்
போனைக்கொடுங்க இல்லையென்றால், நான் என்ன செய்யணுமோ செஞ்சுக்குறேன் என்றேன்.
அடுத்தவினாடி
போனில் ஒரு ஆண்குரல் கேட்டது. அவர் மிகவும் தன்மையாகப் பேசினார்.
நான்
பெயர் மட்டும்தான் சொல்லுவேன். என் பிரச்னையை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. இதற்குமேல்
நான் சொல்லமாட்டேன் என்றேன்.
ஓக்கே
சார்..! என்று சிலவினாடிகளில்.. நீங்கள் வாங்கிய டேட்ஸ் டேமேஜ் என்று போட்டிருக்கு
சார்.. ! என்னவிதமான டேமேஜ் என்று தெரிந்துகொள்ளலாமா? என்றார். நானும் சொன்னேன்.
உங்கள்
நியாயம் புரியுது சார். ! கட்டாயம் உங்களுக்கு உதவுறோம். இன்னும் ரெண்டு நாளில் தீர்வு
வந்துடும் என்றார்.
மீண்டும்
இரண்டு நாள் ஆனது. அப்போதுதான் எனக்கும் இணையதளத்தில் லயன் டேட்ஸின் தலைமை அலுவலகத்தைத்
தேடினால் என்ன என்று நினைத்தேன். அதேபோல் திருச்சி லயன் டேட்ஸின் முகவரியும், எண்ணும்
கிடைத்தது. அதற்கு உடனே அழைத்தேன். அப்போது மாலை 4 மணி..!!
ஒரு
பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன். கொஞ்சம்
அதிக டோஸும் விட்டேன்.
நீங்க
என்ன நடவடிக்கை எடுக்கப்போறீங்கன்னாவது சொல்லுங்க! இல்லைன்னா நான் என்னிடம் உள்ள பேரீச்சையை
ஒரு லேபில் கொடுத்து நச்சுப்பொருள்னு சான்றிதழ் வாங்கி உங்களை கவனிச்சுக்குறேன் என்றேன்.
உங்களை
இன்னும் பத்துநிமிடத்தில் கூப்பிடுறேன் சார்! என்று அந்தப்பெண் சொன்னார்.
சரியாக
8வது நிமிடம் அழைத்தார்.
சிரமத்துக்கு
மன்னிக்கணும் சார்.! உங்களுக்கு நாங்கள் மாற்று பேரீச்சம்பழ டப்பா அனுப்புகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் கொரியர் எண்ணை மாலையில் அழைத்து சொல்கிறேன் என்றார். அதேபோல் மாலை அழைத்து சொன்னார்.
அடுத்த
நாள் காலை 11 மணிக்கு ஒரு முழுமையாக பேக் செய்யப்பட்ட, அரைக்கிலோ லயன் டேட்ஸ் பேரீச்சை
என் வீடுதேடி வந்தது.
அதில்
ஒரு அற்புதமான கடிதமும் இருந்தது.
அதன்
சாராம்சம் இதுதான்.
எங்கள்
தயாரிப்பை வாங்கியதற்கு நன்றி!
அதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு மிகவும் வருந்துகிறோம். அப்படி எப்போதும் நடப்பதில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. மன்னிக்கவும். உங்களுக்கு அரைக்கிலோ பேரீச்சை அன்பளிப்பாக அனுப்பிவைத்துள்ளோம். பெற்றுக்கொள்ளவும்.
அதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு மிகவும் வருந்துகிறோம். அப்படி எப்போதும் நடப்பதில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. மன்னிக்கவும். உங்களுக்கு அரைக்கிலோ பேரீச்சை அன்பளிப்பாக அனுப்பிவைத்துள்ளோம். பெற்றுக்கொள்ளவும்.
தங்கமணி
அப்போதுதான்…கேட்டால் கிடைக்கும் என்று நம்பினார்.
இந்த விஷயத்தில் லயன் டேட்ஸ் சிறந்த சேவைதான் செய்திருக்கிறார்கள். நான் உண்மையில்
இங்கு ஏதாவது ஷோரூமில் கொண்டு கொடுத்துவிட்டு மாற்று பெட்டி வாங்கிக்கொள்ள சொல்வார்கள்
என்றுதான் நினைத்தேன். ஆனால், புதிதாக ஒரு பொருளே அனுப்பிவிட்டார்கள்.
ஒரு
வாடிக்கையாளர் பொய் சொல்லமாட்டார் என்று அவர்கள் நம்பியதற்கு இதுவே சாட்சி! அவர்களை
நான் கூப்பிட்டு முதலில் அன்பாகக் கேட்டு, பின்னர் கொஞ்சம் அதட்டி என்று அனைத்தும்
நடந்தது கஸ்டமர் கேர் கால் செண்டரில்தான். அவர்கள் அனேகமாக லயன் டேட்ஸின் அவுட் சோர்ஸிங்
கால் செண்ட்டராக இருக்கலாம். அதனால் அவர்களது பதிலில் கொஞ்சம் கவனமின்மை இருந்தது.
தலைமை
அலுவலகத்துக்குப் போன் போட்டபின் உடனே மாற்றுப்பொருள் வந்தது மிகவும் திருப்தியை ஏற்படுத்தியது.
இது…கேட்டதால்தான்
கிடைத்தது. இல்லையேல் , புழு வந்த பேரீச்சையை தூக்கிப்போட்டுவிட்டு மற்ற வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளரின்
உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நினைத்ததால், கேட்டேன். கிடைத்தது.
ஆதலால்தான்..மீண்டும்
மீண்டும் வலியுறுத்துகிறோம்… கேட்டால்..கிடைக்கும்!
அடுத்து
மிக்ஸிக்கு வருவோம்.
ராஜமாணிக்கம்
என்ற திருப்பூர் நண்பர்..
இரண்டு
ப்ரீத்தி மிக்ஸிகள் வாங்கியிருக்கிறார். அதில் ஐ எஸ் ஐ முத்திரை இல்லை. அப்போதே கேட்டிருக்கிறார்.
அதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க! ப்ரீத்திக்கு நாங்க கேரண்ட்டி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அரைகுறையாக
ஏற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்று போட்டுப்பார்த்தால், புஸ்ஸென்று புகைவந்து மிக்ஸி
மண்டையைப் போட்டுவிட்டது.
உடனே
அவர்களிடம் கொண்டு சென்றால்…
அது
கம்பெனி வாரண்ட்டிதான். அங்கு கொண்டு சென்று கொடுங்கள் என்றார்களாம்.
அங்கு
கொண்டு சென்றால் அந்த மிக்ஸியை வாங்கி வைத்துக்கொண்டு ரிப்பேர் செய்து தருவதாக 15 நாட்கள்
அலைய விட்டிருக்கிறார்கள்.
பின்னர்தான் எங்கள் கேட்டால் கிடைக்கும் முகப்புத்தக பக்கத்தில்…அதைப்பற்றி
புலம்பியிருந்தார்.
நான்
உடனே ப்ரீத்தியின் இணையதளத்துக்குப் போய், திருப்பூர் கிளையின் மின்னஞ்சலை எடுத்து..
கீழ்க்கண்ட மெயில் அனுப்பினேன்.
// வணக்கம்..
எங்களுக்கு
உங்கள் நிறுவனம் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறது.
அதனை
சரி செய்யவும்
அப்படி
சரி செய்தபிறகு பதில் மின்னஞ்சலும் செய்து விடவும்.
வாடிக்கையாளர்
பெயர் : வீரா ராஜமாணிக்கம்
ஊர் : திருப்பூர்
வாங்கிய
இடம் : பிக் பஜார்.
அவரது
முதல் புகார். . உங்கள் மிக்ஸியில் ISI முத்திரை இல்லை என்பது.. அது உண்மையெனில்.. உங்கள் நிறுவனத்தையே சட்டத்தின் முன்னால்
இழுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
இரண்டாவது
புகார் , வாங்கிய உடனேயே மிக்ஸி
புகைந்தது என்பது... அதற்கு நீங்கள் கேள்வியே
கேட்காமல், புதிய மிக்ஸி
மாற்றித்தந்திருக்கவேண்டும்.
இன்னும்
அந்த வாடிக்கையாளரை அலைய விடுகிறீர்கள் என்று தெரிகிறது.
இதற்கு
மேலும் உங்கள் கவனமின்மை தொடர்ந்தால், கட்டாயம் மிக்ஸி விலையை விட அதிகமாக நீங்கள் நஷ்ட ஈடு
தரவேண்டியிருக்கும்.
உடனடியாக
இதை கருத்தில் கொள்ளவும்
நன்றி
சுரேகா
கேட்டால் கிடைக்கும் //
மேலும்
நமது கேட்டால் கிடைக்கும் நண்பர்களையும், இது சம்பந்தமாக அந்த எண்ணுக்கு அழைத்து விசாரிக்குமாறு
கேட்டுக்கொண்டேன்.
அன்று
நம் நண்பர்கள் போன் போட்டு அவர்களைப் பின்னி எடுத்துவிட்டார்கள்.
அடுத்த
நாள் காலை, புதிய மிக்ஸி ஒன்று அவரது வீட்டுக்கே சென்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது
மிக்ஸியும் அதற்கடுத்த நாளே கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள்.
அது
தவிர.. அந்த நிறுவனத்தின் AGM எனக்கு கீழ்க்கண்டவாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
//Dear Sir
We are in receipt of
your e mail dt.25th April 2012 about Mr
Raja manikkam Preethi Mixie issue and regret to note the contents. We are
committed to quality, customer service and satisfaction and it is our constant
endeavor to meet the changing needs of our customers.
Regarding
your specific query, (a) We have already replaced the motor on the same day,
(b) We have replaced the Mixie unit by this day, to satisfy the consumer
requirement, even though, at present there is no fault in the Mixer and (c)
attached customer satisfied report for your reference.
This
is for your information.
Thanking
you,
Yours
faithfully
For
Preethi Kitchen Appliances (P) ltd.//
மேலும்
அவர் வீட்டில் டெலிவரி செய்த சலானும் எனக்கு ஒரு பிரதி வந்திருக்கிறது.
ஊர்கூடித்
தேரிழுத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
இந்த
சம்பவத்தில் தொலைபேசிய நண்பர்கள் அனைவருக்கும் கேட்டால் கிடைக்கும் சார்பாக,
கேபிள்சங்கர், சுரேகா சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த
மாசத்துக்கு ஒரு பிரச்னை ஒய்ந்தது என்று நினைத்தால்..
கார்
ஆடியோ பிரச்னை ஒன்று வரிசையில் நிற்கிறது..!! அதை முடிச்சுட்டு சொல்றேனே..!!