Veள்ளி Black Colour ஜுவல்லரி
அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு… இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார். விபரம் கேட்டேன். சொன்னார். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில், அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 நாட்களில் மீண்டும் அனைத்து வெள்ளிப்பொருட்களும் வேகமாகக் கறுக்கத் துவங்கி, ஒரு வாரத்தில் மீண்டும் முழுக்கருமையை அடைந்திரு