தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!
உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம். வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ? அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும