Posts

Showing posts with the label கவிக்கதை

ஊடலே யுத்த காரணி

Image
அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில் இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்! அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள் அனகோண்டாவாக மாற... ஆனந்துக்கும் , அகிலாவுக்கும் ஆரம்பமானது சண்டை..! அடிப்படைக்காரணம்.? நேரமாகிவிட்டது இன்னும் காலுறையைக்காணவில்லையாம்! யாருக்கு பொறுப்பு என்று பாப்பையா இல்லா பட்டிமன்றம்! தடித்த வார்த்தைகளை தவ்விப் பிடித்துக் கொண்டு தகராறை முற்றவிட்டு கணவனும் மனைவியும் கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் ! நிறுவனத்தில் நுழைந்து தன் இருக்கைவந்து ' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு அழைப்புக்காய் காத்திருக்கிறான்.! 'என்னமாய் பேசிவிட்டாள் !' துடிக்கிறது உதடுகள்.. முதல் அழைப்பு வந்ததுமே பதில்சொல்ல விழையும் முன்' கேட்பவனின் கேள்வியில் கடுகளவு கோபம்! 'உன் நிறுவன மடிக்கணிணியில் இப்படி ஒரு பிரச்சனை!' என்னவென்று விளக்கவேண்டிய இவன் பதிலும் இனிமையில்லை.! இவன் பொறுமையெல்லாம் எப்போதோ போய்விட்டது! அதை எடுத்து மடித்துக்கொண்டு அவள் காலை சென்றுவிட்டாள் இது தெரியா எதிராளி எதிர்க்கேள்வி கேட்டுவைக்க எரிந்து விழுந்து முழங்குகிறான்.. "என்னய்யா ஆட்கள் நீங்கள்? இது கூடத்தெரியாமல்? என் உயிரை...

இப்படியும் நடக்கலாம் ...!

Image
அது ஒரு தொடர்வண்டி நிலையம்! அவன் எங்கோ போகவேண்டும் அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப! திருமணம் ஆன புதிது! விட்டுச்செல்ல மனமில்லை! விலகி இருக்கவும் திறனில்லை! கண்கள் கலங்கவும், கைகள் நடுங்கவும், ஒருவரை ஒருவர்  உயிராய் உருகி ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள். அந்தச்சிறு அணைப்பிலேயே அழுத்தம் கொடுத்து சொல்லுகிறான். கவலைப்படாதே! நிறைய நாட்களில்லை! சீக்கிரம் வந்துவிடுவேன்.! நீங்கள் செல்வதே எனக்கு நரகம்தான்! அப்புறம் என்ன  கொஞ்சம் ,நிறைய ? கண்ணீர் உகுத்து கரைகிறாள் அவள்! வண்டி புறப்படும் நேரம் வர மனமின்றி அவனும் ஏறி விட புறப்பட்ட வண்டியையே நீர் படரப் பார்க்கிறாள்! அவ்விடத்திலேயே நின்று ஆசுவாசப்படுத்த, வண்டியும் சென்றுவிட.. அதிசயமாய் எதிரில் பெட்டியுடன் அவன்! ஓடிப்போய் முத்துகிறாள்! என்னவனே! இவ்வளவு காதலா? என்னைவிட மனமிலையா? நான் என்ன தவம் செய்தேன்? இப்படி நீ இருப்பதால்தான் இதயம் முழுதும் நிறைகின்றாய் ! இறுக்கமான முகத்துடன் அவன் சொன்னான்..! அதெல்லாம் சரி! வண்டியின் டிக்கெட்டை உன் பைக்குள் வைத்திருக்கிறாய் ! இனியெப்படி போவது?

அவனைக் கடந்த சவீதாக்கள்

சவீதா  - 1 அவன்... மிகச்சரியான வயதில் அந்த இணைய நிலையத்தை நடத்தும் நண்பருக்கு உதவ தினசரி செல்ல , அங்கு வந்த அவளுக்கு மின்னஞ்சல் பார்ப்பதற்கு இவனும் அன்பாய்  உதவப்போக மின்னஞ்சலுடன் சேர்த்து அவனையும் பார்க்க ஆரம்பித்தாள் அவள்! ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்! தன் தந்தையின் மறுமணமும் தாயாரின் சிரமங்களும் தனக்குள் ஒரு வெறியை தாமாக ஊட்டியதை கவலையுடன் சொன்னாள் அவள்! அவளது லட்சியமே மாவட்ட ஆட்சித்தலைவியாய் மதிப்பாக வலம்வருவதுதான்! அதற்கான முயற்சிகள்தான் இணையம் தேடும் காரணமும்.! அவனுக்கு அவளைவிட அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது. வாழ்வில் அனைத்து சுகமிருந்தும் சோம்பித்திரிபவர் மத்தியிலே காப்பாற்ற மனிதரின்றி கவலைகொண்ட குடும்பத்திலே கலெக்டராகவேண்டுமென்ற கனவுகாணும் இவளை காதலித்தால் என்னவென்று மனதுக்குள் நினைத்துவைத்தான். அவளுக்கும் இவன்மேல் ஒருவித அபிமானம்  இயல்பாக வந்ததால் அவனைவிட்டு தனக்கு பாடங்கள் சொல்லித்தர பணிவாகக்கேட்டுக்கொண்டாள் இவளது லட்சியத்தை இமயமாய் ரசித்தவனுக்கு அதற்கான உதவி செய்ய வாய்ப்பொன்று கிடைத்ததானால் பூரித்துப் பொங்கிப்போனான். இவனது பாடத்தையும் இவனையும் சேர்த்து கவனித்த அவளுக்கு இவன...