Posts

Showing posts with the label வாழ்த்து

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1

Image
சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்   (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..)  என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.      பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது. ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார். ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார் ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார். சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார். ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார். ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார். ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு ஒளிப்பதிவாளர...

பெண்களே.. பெண்மையே! வாழ்க நீங்கள்!

Image
  எங்கள் வாழ்வில் அர்த்தம் சேர்த்து, எண்ணங்களில் ஏற்றம் சேர்க்கும் பெண்மையே , பெண்களே வாழ்க நீங்கள்…!! ஒவ்வொரு ஆண்டும் ( 2008 , 2009 , 2010 , 2011 ) பட்டியலில் உள்ளவர்களுக்கும்.... இந்த ஆண்டு நட்புகளாய் வந்த, லஷ்மி ராமகிருஷ்ணன் ஷாரதா ஷ்ருதி ஷ்ரயா கவிஞர் பத்மாவதி ஸ்ரீ புவனா ரேவதி மணிமேகலை ப்ரியா சௌம்யா கீர்த்தனா சத்யா சங்கீதா கல்பனா உமா பத்மநாபன் ராஜி ஆகியோருக்கும்.. இணைய நட்பாய்ப் பூத்த கயல்விழி ப்ரியா முரளி ஆகியோர் எந்நாளும் இன்பமாய், ஆரோக்கியமாய், இனிமையாய் வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !!  ( பதிவை… முன்னரே பதிவேற்றி தேதி மாற்றி schedule செய்ததின் விளைவு!! ஒரு நாள் தாமதமாக வெளியாகிறது…)

சித்தப்பா

சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா , மூத்த அண்ணன் , சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும். அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.       எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது , அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல...

பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!

Image
    நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்.. என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்.. 2008   2009   2010   இவர்கள் போக, மேலும், இந்த ஆண்டில் நட்பு காட்டும் ரேவதி வர்மா தேஜாஸ்ரீ நமீதா ஆருஷி கவிதா ரம்யா மற்றும் அன்புநிறை பதிவர்கள் அகிலா ஸ்ரீராம் மதார் உமா மற்றும் வேலையிட நண்பர்கள் ரமணி சித்ரா ஜானகி சுதா சௌம்யா ஆகிய … என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில்  எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!

எல்லாரும் வாங்க!

Image
நமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எழுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இதோ! (எப்பவும் போல க்ளிக்கி பெரிசா பாருங்க!) சென்னைல இருக்குறவுங்க, அன்னிக்கு சென்னைக்கு வர்றவுங்க,இதுக்காகவே டிக்கெட் போட்டு வர்றவுங்க எல்லாரும் வாங்க! வாழ்த்தி மகிழ்வோம்! 

2010ஏ வருக!

இந்த ஆண்டும் வாழ்வை வளமையாக்கும் இன்னொரு ஆண்டாக அமையட்டும். நல்ல நண்பர்கள் நல்ல குடும்பம் நல்ல வாசிப்பு நல்ல படைப்பு என எல்லாமே நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்.. “The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.” - Robert Frost. 2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!

வாழ்த்துக்கள் மேடி

Image
நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடி க்கு இன்று திருமணம்...! அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று அன்பே அரசாய் அறிவே அமைச்சாய் அறமே அரணாய் இல்வாழ்க்கை அமைய எல்லோரும் வாழ்த்துவோம்....!

பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !

Image
காடுகளுக்குள் கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த எங்களினத்திற்கு கனிவுகாட்டி முரட்டுத்தனம் நீக்கி மென்மையாக்கி இன்றும் வாழ்விற்கு அர்த்தம் காணவைக்கும் பாட்டிகளாய் தாயாய் சகோதரிகளாய் நண்பர்களாய் உறவினர்களாய் மகள்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக. . இந்த ஆண்டில் வந்த நண்பர்கள் பூமா கஸ்தூரி ரத்னா விமலா குணசேகரன் காயத்ரி ஜெனிபர் லிண்டா சாந்தா ஸ்ரீனிவாசன் விஜயலட்சுமி ராம்குமார் நாகசத்யா டோரதி கிருஷ்ணமூர்த்தி தீபா ரெபி புதிய பதிவர்கள் சந்தனமுல்லை ஸ்ரீமதி மருமகள் மஹதி மகளாகப்பிறந்த தேவதை சைந்தவி... என வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்.. பெண்களே... பெண்மையே..! வாழ்க நீங்கள்!