சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!
சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்... கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது. கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர். பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார். எடுத்துக்காட்டாக... முத்தண்ணா கூறுகிறார்... ' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..! ஆனந்தன் தொடங்குகிறார். ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப...