Posts

Showing posts from September, 2009

காகங்களல்ல! மேகங்கள்!

Image
நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில் இத்தனை தவறு செய்கிறீர்கள்? மேலதிகாரியின் மெயிலில்  அனலாய்க் காய்கிறது வேலையிடம்! சாதம் ஏன் இனிக்கிறது? பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே குழம்புக்கிண்ணம் பக்கத்தில் கொக்கரித்துச் சிரிக்கிறது. ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட பாழாய்ப்போன சரக்குகூட  சகலத்துக்கும் உதவிசெய்யும் சகோதரனாய்த் தோன்றுகிறது! வாகனம் ஓட்டிக்கொண்டே சிந்தித்ததில் வழியெங்கும் வசவுப்போக்குவரத்தின்  வாய்கொள்ளா இரைச்சல்! இருந்தாலும் மாப்பிளை நீ இப்படி எழுதியிருக்கக்கூடாது! சூப்பர்டா என்றவன் கூட சூத்திரம் சொல்லித்தருகிறான் ! இதுக்கு என்ன பதில் எழுதலாம்? அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்! எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து என்னைக் கொல்லாமல் விடாதுபோல! இத்தனை நாள் காத்திருந்த எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்! தேடித்தேடித் தின்னும் பின்னூட்டங்கள் கசக்கின்றன. மனம் நோகவேண்டாமென்று மட்டுறுத்தினாலும் பின்னூட்டம் பெருகுகிறது. கூரான வார்த்தைகளால் குறையாமல் விழுகிறது குருதி! அந்தப்பதிவை மட்டும் அனேகம்பேர் படிக்கக்கூடாதே.. அல்ப ஆசை ஒன்று ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்! சொன்னது சரிதானென்று சொக்காய் கிழிய வாதிடலாம்! சொன்னது முற்றி

டெக்னாலஜி குலோத்துங்கன் - 5

நாடகத்தின் முந்தைய பாகங்கள் 1 , 2 , 3 , 4. ... இளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே!? மன்னர்        வாம்மா..இளவரசி! உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா? இளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்) மன்னர் மிக்க மகிழ்ச்சி! இளவரசி அது கிடக்கட்டும்.  என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன? மகாராணி : அதுவா! உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். இளவரசி என்ன தும்பு? என்ன வால்? ஒன்றும் புரியவில்லையே! மன்ன ர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம்! அது ஒன்றுமில்லை மகளே! நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..! இளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா! கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்! மன்னர் நீ யாரைச்சொல்கிறாய்? உங்கள் அம்மாவையா? அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது! இளவரசி அய்யோ !

டெக்னாலஜி குலோத்துங்கன் - 4

டெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..! இளவரசி ஏன் நிகழக்கூடாதா? யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்? என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும்.? எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே? என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்! :( புவன் அப்படியில்லை! இளவரசி அப்படியென்றால் பிடித்திருக்கிறது..சரிதானே! புவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்! மன்னருக்குத்தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார். இளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ! இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம். புவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது இளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை! நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன். புவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இளவரச

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3

காட்சி 5 - அரண்மனை அந்தப்புரம் ( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி) புவன் : இளவரசி ! இளவரசி! இளவரசி : யாரது? புவன் : நான் தான் புவன்! தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள். இளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் ! (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம்?. கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே! புவன் இளவரசி..இளவரசி! இளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன? என்ன? புவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன். இளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது. புவன் சரி..கொண்டுவாருங்கள் ! பார்த்துத்தருகிறேன். (இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்) இளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..! என்ன குற்றம் செய்தீர்கள்..! புவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை ! தங்கள் தந்தை செய்த குற்றத்

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2

காட்சி 3 அந்தப்புரம் ( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்) மகாராணி : மகளே விண்டோ மகாலெட்சுமி ! எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..! அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய்! மகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா ! நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்!? இளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே! மகாராணி என்னனென்ன அதிகமாகக்கிடைத்திருக்கின்றன? இளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை! அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் ! நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே! மகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது. இளவரசி ஆம்..அம்ம

டெக்னாலஜி குலோத்துங்கன் - 1

காட்சி 1 - அரண்மனை வளாகம் ( மன்னர் டெக்னாலஜி பெண்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன், மந்திரி மொபைல் மணிவாசகன், சேவகர்கள்) அரச சபைக்கான சப்தங்கள் சேவகன் : ராஜாதி ராஜ...ராஜ பார்வை மிக்க, மைடியர் மார்த்தாண்ட... மன்னாதி மன்னர்... மன்னர் : யேய் ! நிறுத்து எனக்கு பராக் சொல்லச்சொன்னால் என்ன இது படங்களின் பெயர்களாகச்சொல்கிறாய் அதுவும் பராக்குப்பார்த்துக் கொண்டு! சேவகன் : ஸாரி மன்னா! டங் ஸ்லிப்பாகிவிட்டது. அரசர் : ஜாக்கிரதை..என் வாளும் உன் கழுத்தில் ஸ்லிப்பாகி விடப்போகிறது ! ..அமைச்சர் மொபைல் மணிவாசகரே! அமைச்சர் : சொல்லுங்கள் மன்னா! அரசர் : என்னய்யா! இப்படி ஒரு மொக்கையை பராக் சொல்லும் வேலைக்கு நியமித்திருக்கிறீர்கள் !? அமைச்சர் : (மனதுக்குள்) உம்மைப் போல் மொக்கை மன்னருக்கு பின்னர் என்ன பில் கேட்ஸா சேவகனாக வருவார். அரசர் : என்ன அங்கு முனகல்!? அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னா! உங்களைப்போன்ற சிறந்த மன்னருக்கு இப்படி ஒரு சேவகனா என்று வருந்தினேன்.. அரசர் : இருக்கட்டும் இருக்கட்டும் சேவகன் : அமைச்சரே ! இப்போ நான் மிச்சத்தை

அறிந்து கொள்க - அடடே! புத்தகம்!

Image
             காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!              புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது!  முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !         புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்