Posts

Showing posts from August, 2011

மரணதண்டனைக்கு மரணதண்டனையா?

Image
இப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை  கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது.  வாதங்கள்  1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது.  2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா? இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்?  3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிட...

ஓமப்பொடி- 2

Image
          சென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.     அதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                          ++++++++++++++++++++++      நேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா ...

நம்பிக்கைச் சுதந்திரம்

Image
நம்பிக்கை        வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம். சுதந்திரம் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப க...