Posts

Showing posts with the label அரசியல்

மதுரை சம்பவம் !

Image
  ஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்.!! மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி !          ஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை..!! ஏன் என்ன ஆச்சு? என்று கேட்டால், “ஒரு சின்ன பிரச்னை சார்!” என்ன? ஸ்டாலின் மதுரை வந்திருக்காரு.. ! அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்...

அணைக்க வேண்டுமா அணைக்காக?

Image
      ஆற்றுநீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்பதோ, இந்த அளவுக்குமேல் தேக்க விடமாட்டேன் என்பதோ, உன் பராமரிப்பில் உள்ள அணையை உடைத்துவிட்டு, நான் புது அணை கட்டிக்கொள்வேன் என்பதோ  ஏதோ ஒரு விதத்தில் அண்டை மாநிலங்கள் நம்மை ஒரு மாநிலமாகக் கூட மதிக்காமல் அராஜகப்போக்கை காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நாம் இன்னும் ஒற்றுமை..தெருப்புழுதி என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம்.          அணைக்காக உங்களை நாங்கள் அணைத்துப்போவதாக இல்லை என்றால். பின்னர் நாம் மட்டும் ஏன் அணைக்கவேண்டும்? அதுவும் அரவணைக்க வேண்டுமாம். தவறு இரு மாநிலத்தின் மேலுமில்லை. மத்திய அரசு என்ற போர்வையில்..அடித்துக்கொண்டு சாகட்டும். அப்போதுதான் நம் குற்றம் வெளியில் தெரியாது என்று 2ஜி, க்வோத்ரோச்சிகளை கக்கத்தில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அயோக்கிய அரசுதான் காரணம்.! யார் பேச்சையும் கேட்காமல், பொது தேசத்தின் நீதிமன்றத்துக்கும் கட்டுப்படாமல், எப்போது உனக்கு ஒன்றும் தருவதற்கில்லை என்று ஓரங்கட்டிவிட்டார்களோ, அப்புறம் என்ன அண்டை மாநிலம்..?   ஆனாலும்.. ந...

மரணதண்டனைக்கு மரணதண்டனையா?

Image
இப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை  கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது.  வாதங்கள்  1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது.  2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா? இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்?  3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிட...

நம்பிக்கைச் சுதந்திரம்

Image
நம்பிக்கை        வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம். சுதந்திரம் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப க...

ஓட்டுச்சாவடி வாசலில்..!

Image
நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம். ஆனால், அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான்.      நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதனை நிர்வகிக்க, ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம். அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும், தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது. அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான். பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து, வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான். அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும், முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம். அவனும் ஆட ஆரம்பிக்கிறான். இதுதான் தொடர்கதையாக இருந்தால், நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான்.!      இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது. களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யார...

எந்திர அரசியல்

Image
எந்திரன் - மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழின் பிரம்மாண்ட படமாக, ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்பாதியில் கதையும், இரண்டாம் பாதியில் கம்ப்யூட்டரும் ஆட்சி புரிந்திருக்கின்றன.  மிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடப்படும் எல்லா விஷயங்களும் , சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல! சம்பந்தப்படாதவர்களையும் சந்தோஷப்பட வைக்கவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த வகையைச்சேர்ந்ததாகத்தான் இருக்கும். விளையாட்டில்கூட ஒரு அணி தோற்றால்தான் , இன்னொரு அணிக்கு வெற்றி.! தேர்தல் வெற்றியும் அப்படியே! இன்னும் பல்வேறு வெற்றிகள் இந்த வகையைச் சேர்ந்தவை! ஒருவர் தோற்றால்தான், இன்னொருவர் வெற்றி கொண்டாடப்படும். ஆனால் திரைப்படங்களின் வெற்றி என்பது இன்னொரு படத்தை தோற்கடிப்பதற்காக என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால், சங்கர், ரஜினி, ரஹ்மான், கலாநிதிமாறன் என்ற பிரம்மாண்ட சுனாமிகள் சேர்ந்து தங்கள் வெற்றிக்காக எத்தனை சிறு திரைப்படங்களை அழித்துத்தள்ளிவிட்டார்கள். சுமாராக வசூல் செய்து கொண்டிருந்த படங்கள் கூட, இவர்களது திரையரங்க ஆக்கிரமிப்பில் சிதறிப்போய்விட்டன. இன்று வெற்றி..வெற்றி என்று வெறியுடன் கதறிக்கொண...

இலவசங்கள் வசப்படுமா?

Image
உங்களுக்காக இவ்வளவு விஷயங்களை இலவசமாகச் செய்திருக்கிறோம். எங்களையா வீழ்த்தவேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு பக்க விளம்பரம் ஒன்றை நாளிதழ்களில் தந்திருக்கிறது. மிகவும் அபத்தமான கையேந்தலாகத்தான் இதைப் பார்க்கமுடிகிறது. இலவசமாக ஒரு பொருளைத்தருவதற்குமுன் தனி மனிதனின் கணக்கொன்று உண்டு. உண்மையிலேயே பிரதிபலன் பார்க்காமல் அவனுக்குத்தந்துவிடுவது.!  அல்லது   இவனால் கட்டாயம்  காரியம் ஆகும் என்று இலவசமாக அதைத்தருவது! இதில், கலைஞரின் இலவசங்களுக்குப் பிண்ணனி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்றுமே மனிதர்கள் தன் தவறுகளை மறைக்க தானத்தில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது தன் பணத்தில்தான் இருக்கும்.  இவரோ, தன் குடும்பத்தினர் அனைவரது ஆக்கிரமிப்பும் கட்சி, சமூகம், அரசு அலுவலகங்கள் என்று சந்துபொந்தெல்லாம் வியாபித்திருப்பதை மறைக்க, இதோ இலவசம் ! அதோ இலவசம் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கென்ன? சொந்தப்பணமா? அரசுதான் டாஸ்மாக் மூலம் அள்ளிக்கொடுக்கிறதே! இது உன் வீட்டைக் கொளுத்திக்கொள்கிறேன். அதில் கிடைக்கும் காப்பீட்டுத்தொகையில் உனக்கு உணவு வாங்கித்தருகிறேன் ...

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!

Image
உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த  மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி  நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம். வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ? அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும...

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் !

Image
உண்மையில், மனதில் உறுத்திக்கொண்டிருந்தவற்றை கொட்டிவிடும் அவசரத்தை குறைத்து, நிதானமாக எழுத யத்தனித்து இன்று வெளிப்படுகிறது. இதுவுமே அவசரமோ என்றுதான் மனம் நினைக்கிறது. (இந்திய அரசைவிட மெத்தனம் இல்லை!) ஆனாலும் தெகா கொடுத்த கொக்கி இத்துப்போய்விடக்கூடாது என்பதால்.....இதோ..! இந்தியாவில் ஏன் இந்தத்தீவிரவாதம்..? இதை நான் உலக அரசியல், தேச அரசியல், அரசு, தனிமனிதன் என்ற வகையில் அலச விரும்புகிறேன். (இடையில் துளசி டீச்சர் கேட்டிருந்த இயல்பான கேள்விகளையும் உள்ளம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.) உலகளாவிய அளவில், எங்குமே ஒரு உள்ளார்ந்த வெறுப்பு புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு தேசமும் அதனதன் வழியில் வெளிப்படுத்தவே செய்கின்றன. ஆப்கனில் ஒசாமா இருக்கிறார். அவரைப்பிடிக்கவேண்டுமென்று தான் வளர்த்த தாலிபனிடம் கேட்டுப்பிடிக்காமல், தன் நாட்டில் அவன் ஆட்கள் நுழைந்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவும், வீறுகொண்டு எழுந்து இன்றுவரை வேட்டையாடும் அமெரிக்காவின் செயலில் எந்த வகை மிதவாதம் இருந்தது?  உலகத்தை அழிக்கும் ரசாயன ஆயுதத்தை- "ஒளிச்சுவச்சிருக்கான்..நான் பாத்தேன்" என்று கூறும் மூன்றாம் வகுப்பு மாணவனைப்போல், உலக...

என்னய்யா நடக்குது இங்க? - ஒகேனக்கல் எங்க இருக்கு?

உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். ! என்ன குழம்பு? ங்குறான். யாருன்னே தெரியலை! இருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே நான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின! அதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது! அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும்!  நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க! ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான். இப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும் கர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான். அது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..! ஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன் என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா  இருக்கு? (அவன் கூட இவ்வளவு   பண்ணமாட்டான் போல இருக்கே!) அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலு...

'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல! சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது ! (இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி ) மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு.. இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..! பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..? ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க! குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (ந...