Posts

Showing posts from May, 2008

தெய்வத் தொழிலாளி !

அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம். இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன். அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை. சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது. வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.! 'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார். 'என்ன இருக்கு?' 'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!' '2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!' சரி சார்.! 'முதலாளி ! தோசைமாவு

வார்த்தைகள் - பாகம் 2

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி சொல்லுவாங்க! நட்பை பாதுகாத்துக்கணும்னா, நீ தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்புக்கேள் ! நண்பன் தவறு செய்தால் தயங்காமல் மறந்துவிடு! ன்னு அதாவது வார்த்தைகளைப்பிடிச்சு தொங்காம நிதானமா இருந்தாலே உறவுகளை அப்படியே வச்சுக்கலாம். ஏன்னா பதில் வார்த்தைகளால்தான் பிரச்னையே பெரிசாகும். நட்பு வேணும்னு நினைச்சா நல்ல சொற்களை மட்டுமே பேசினா போதும். அதேசமயம் வேறு ரெண்டுபேருக்கு இடையில் ஏற்படும் தகராறுக்கும் நாம காரணமா இருந்துடக்கூடாது. ஆனா அதுதான் நம்மிடையே அதிகமா நடக்குது. ரெண்டு பேரை சேத்துவைக்கத்தான் நமது வார்த்தைகள் பயன்படணும். அதில் கவனமா இருந்துட்டா அந்த ரெண்டுபேருக்குமே நாம கடவுளா தெரிவோம். பூவே உனக்காக படத்தில், நாகேஷுக்கும் நம்பியாருக்கும் குடும்பப்பகை இருக்கும். ஒருநாள் நாகேஷ் வண்டில பெட்ரோல் இல்லாம தள்ளிக்கிட்டு வருவார். அதே சமயத்தில் நம்பியாருடைய காரும் ரிப்பேராகி நிக்கும். அங்கிருந்து ஊருக்குள்ள போகணும்னா 5 கிலோமீட்டர் நடக்கணும். அப்ப அங்க வரும் விஜய் ,ரெண்டுபேரின் கௌரவமும் கெட்டுப்போகாம நாகேஷ்கிட்ட , அவர் பெட்ரோலைக்கொடுத்து உங்க வண்டில ஏறிக் கிறேங்கிறார். கூட்டிக்கிட

வார்த்தைகள்

ரெண்டுபேருக்கு இடையிலே வாக்குவாதம் வந்தா... வார்த்தைய அளந்து பேசு ..என்ன பேசுறோம்கிறதை தெரிஞ்சுதான் பேசுறியான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்குவாங்க! அந்த அளவுக்கு நம்மை மீறி வெளிவரும் வார்த்தைகள் என்னிக்குமே மனிதர்களுக்கிடையில் உறவுகளை உடைக்கும் சுத்தியலாத்தான் பயன்படும். அதுனால எந்த பயனும் இருக்காது. சக மனிதர்களோட பேசுறதுங்கிறது ஒரு கலை! அதை சரி வர கையாண்டுட்டாலே நாம வாழ்க்கைல ஈஸியா ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம். மொக்கச்சாமி ஒரு பெரிய தொழிலதிபர்க்கிட்ட பி ஏ வா வேலைபாத்தார். அப்ப வெளியூருக்கு போய் ஹோட்டல்ல தங்குறமாதிரி ஆகிப்போச்சு. முதல்நாள் மதிய சாப்பாட்டில் வெண்டைக்காய் போட்டு சாம்பார் வச்சிருந்தாங்க! அதை ருசிச்சு சாப்பிட்ட தொழிலதிபர், ஹோட்டல் சர்வரைக்கூப்பிட்டு ஆஹா வெண்டைக்காய் பிரமாதம்ன்னார்.உடனே மொக்கச்சாமியும் ஆமாமா பிரமாதம்ன்னார். அதை கவனிச்ச ஹோட்டல் முதலாளியும், இனிமே அந்த தொழிலதிபருக்கு வெண்டைக்காயில் செஞ்ச உணவுகளை அதிகமா பரிமாறும்படி சொல்லிட்டார். அடுத்தடுத்த நாள் வெண்டைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொறியல், பச்சடி ன்னு சர்வம் வெண்டக்காய் மயம் ஆகிப்போச்சு ! ஒரு வாரம் நல்லா பார

கயவாளிக் கனவான்கள்!

Image
ரோடு போட்ட மவராசன் பாதி ரோட்டை போட்டுப்புட்டு மீதி ரோட்டை தனக்கும், லஞ்சம்வாங்கி நாய்களுக்கும் போட்டுக்குடுத்துப்புட்டு மழை பேஞ்ச மறுநாளே பல்லிளிக்க வச்சுப்புட்டான். பல்லிளிச்ச ரோட்டில் போராடிப்போராடி நாத்தெல்லாம் நட்டு நாத்தமடிக்க வச்சபின்னே அவனுக்கு அப்பனான ஒரு ஒப்பந்தக்காரன் பள்ளமடைக்கும் பணி வாங்கி ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கான். அடைக்கும் பள்ளத்திலேயே அரைகுறையா விட்டுப்புட்டு அலட்டிக்காம வேலைபாக்கும் கேடுகெட்டவங்களை வச்சா வல்லரசா ஆகப்போறோம்!? அய்யா அப்துல் கலாம்! ஒருதடவை இந்தப்பக்கம் வந்துத்தான் பாருங்களேன். ஒப்பந்தம் எப்படி வேலை பாக்குதுன்னு தெரியும். இது ரொம்ப நாள் கதையில்ல! நேத்து நான் வந்தப்ப நின்னு எடுத்த போட்டோ! இதை மட்டும் செய்ய நான் ஈனப்பிறவி இல்ல! எல்லா பத்திரிகைக்கும் எழுதியாச்சு நகலோட! எவனுமே போடலைன்னா என்ன பண்ண சின்னவன் நான்! அதுனால இங்கயும் என்வீட்டில் பதிஞ்சு வச்சேன். உச்சகட்ட லச்சணம் என்னன்னு தெரியுங்களா? இதுதான் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை! கண்ணுமண்ணு தெரியாம கொள்ளை அடிக்கறது கயவாளிக்கனவான்களுக்கு கைவந்த கலை போல! அட...நாசமத்துப்போவாய்ங்களா! நாண்டுக்கிட்டு சாவுங்கடா!

அத்தை மகனே !

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்! இவனோடுதான் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போகிறேன் என்று! அதற்கு முன்னரே ஒரு கிராமத்தில் காரணமே இல்லாமல், பதிவேட்டிலும் பெயர்  இல்லாமல் ஆறு மாதங்கள் பள்ளி சென்றிருக்கும் மமதை என்னிடம் கொஞ்சம் இருந்தது. அவனை ஏற இறங்கப்பார்த்துவிட்டு பழக ஆரம்பித்தேன்.          ஒன்றாகப் பள்ளி செல்லத்தொடங்கினோம். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இரண்டு வருடங்கள் அவனும் நானும் சேர்ந்து படித்தோம். பள்ளிக்கு இருவரும் சேர்ந்தே செல்லுவோம். திரும்பவும் சேர்ந்தே வருவோம். ( இப்போதுபோல் அடுத்த தெருவில் உள்ள பள்ளிக்குக்கூட ஆட்டோவோ, பள்ளிப்பேருந்தோ இல்லாத காலகட்டம் அது) பள்ளியும் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.             அடிக்கடி அன்பையும் , அதற்குமுன்னால் அடிகளையும் பரிமாறிக்கொண்டு வளர்ந்த அந்த பால்யத்தில் , அடிப்படையில் எங்களுக்கிடையே ஒரு அதீத பாசம் இழையோடியிருக்

'அட்டு' பாத்தது ஒரு குத்தமா?

Image
ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும்போது 2002வது வருஷம், என்னமா பம்மி பம்மி கவலையே படாதீங்க சார்..எல்லாம் சூப்பரா இருக்கும்னு போஜா காட்டினாய்ங்க! கொஞ்சம் கொஞ்சமா கொள்ளையடிச்சவய்ங்க இப்ப பல்க்காவே கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டய்ங்க! செக் புக்கு ரெக்வெஸ்ட்டுன்னு ஆன்லைன்ல பண்ணின உடனே ரெண்டே நாள்ல வந்துடும்.அட இவ்வளவு சூப்பரா வேலை பாக்குறாங்களேன்னு புளகாங்கிதம் அடைஞ்சுக்கிட்டிருந்தேன். அப்பன்னு பாத்து அதுல 'அட்டு பாரு' (at par) ன்னு போட்டிருக்கும். எந்த ஊருக்கு வேணும்னாலும் குடுத்துக்கலாம்னு சொன்னாய்ங்க! அதை 'நம்பி' நானும் பல ஊருக்கு செக் குடுத்தேன். அவுங்களும் சந்தோசமா என் பணத்தை எடுத்துக்கிட்டிருந்தாங்க! (செக்கை கூரியர்லதான் அனுப்பணும்). அட அட்டு பாரு ...அட்டு பாருன்னு நானும் எல்லார்க்கிட்டயும் பீத்திக்கிட்டு திரிஞ்சேன். எப்ப பேமெண்ட் பத்தி பேச்சு வந்தாலும் ...யூ டோண்ட் ஒர்ரி சார்..! ஐ ஹாவ் அட் பார் செக்..ன்னு பண்ணின லந்து கொஞ்சமா நஞ்சமா? அதுக்கு வச்சாய்ங்க ஆப்பு இந்த ஸ்டேட்மெண்டை அனுப்பி ... அந்த மஞ்ச கலர்ல இருக்குறதுதான் என்கிட்டேருந்து அட் பாருக்காக கொள்ளையடிச்ச ஆதார

இது மாதிரி இருந்தாப் போதும் - 2

பென்சிலோட இன்னோரு தன்மை பாத்தீங்கன்னா, அதை வச்சு எழுதணும்னா, அதை கூர்மைப்படுத்திக்கிட்டே போகணும்.அது தன்னை கரைச்சுக்க அனுமதிக்கும். அப்பதான் தெளிவா எழுதமுடியும். ஒரு தடவை மழுங்கிட்டா, அப்படியே இருக்காம, தன்னை கூர்மைப்படுத்திக்கிட்டு மறுபடியும் பழைய மாதிரி எழுத ஆரம்பிச்சுடும். அதேமாதிரிதான். நாமும் நம்பளை வளத்துக்கணும். ஒரு படிப்பு படிச்சுட்டா, அடேயப்பா நாந்தான் இந்த ஊர்லயே ரொம்ப படிச்சவன்னு நினைப்பு நமக்கு வந்து, தன்னை வியக்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா அது ரொம்ப ஆபத்து. . நாம இந்த உலகத்தில் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு. இன்னிக்கு ஒரு வெற்றியை சந்திக்கிறீங்கன்னா..அதை உடைக்க அடுத்த ஆள் தயாரா இருக்கும். அதுக்குள்ள நாம நம்ம அறிவை வளத்துக்கிட்டு அந்த வெற்றியை தக்க வச்சுக்கணும். எந்தத்துறைல இருந்தாலும், அதில் இன்னும் என்னன்ன புதுமை இருக்குன்னு கத்துக்கிட்டு மாற்றத்தை ஏத்துக்கத்தயாரா இருக்கணும்.             வெற்றிங்கிற விஷயத்தில் பென்சில் எப்பவுமே தன்னை சமரசம் பண்ணிக்கிறது கிடையாது. கொஞ்சம் மழுங்கிப்போனாலும் தன்னை கூர்மைப்படுத்திக்க அனுமதிக்கும். ஆனா நமக்கு , அறிவு விஷயத்துல போதும்ங்கிற

இது மாதிரி இருந்தாப் போதும் !

Image
வாழ்க்கைல வெற்றி பெற்ற ஒரு மனிதரப்பத்தி சொல்லி அவரைப்போல இருக்கணும்னு சொல்றதுதான் சாதாரணமா அறிவுரையோ, அறவுரையோ சொல்ற முறை! இன்னிக்கு அதைக்கொஞ்சம் மாத்தி, இதுமாதிரி இருந்தா ஜெயிக்கலாம்னு நாம பாக்கப்போறது ஒரு பொருள்! அதுவும், இயற்கையா உருவானது இல்ல! நம்மாலயே படைக்கப்பட்ட ஒரு பொருள்..! என்னது அது? ரெண்டு நாடுகள் இருந்துச்சு. முதல் நாடு பேரு அட்டெரிக்கா, ரெண்டாவது நாடு பேரு ரமிலியா..! எப்பவுமே இந்த ரெண்டு நாடுகளுக்குள்ளயும் எதை எடுத்தாலும் போட்டிதான்! அந்த நாடு ஒரு விஷயம் செஞ்சா, இது அதுக்கு மேல வேற எதாவது செஞ்சு வெறுப்பேத்தும். அப்ப, அட்டெரிக்கா விண்வெளிக்கு ஆளுங்களை அனுப்பிக்கிட்டிருந்தது.அதே போல ரமிலியாவும் அனுப்பிக்கிட்டிருந்தது. அட்டெரிக்காவிலேருந்து விண்வெளிக்கு போய்ட்டு வந்தவுங்க யாரும், அதைப்பத்தின ரிப்போர்ட்டை எழுதாமலே வந்தாங்களாம்.இது என்னடாது கொடுமைன்னு விசாரிச்சா, அய்யா! நாங்க எழுதறத்துக்கு தயாராத்தான் இருக்கோம். ஆனா நாங்க எடுத்துட்டுப்போன பேனா எல்லாமே, விண்வெளிக்கு போனதுக்கப்புறம் அங்க காத்தே இல்லாததாலயும், புவியீர்ப்பு விசை இல்லாததாலயும், எழுத மாட்டேங்குது! இதுக்கு ஒரு தீர