Posts

Showing posts from January, 2009

படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன். இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய- சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் -புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது. விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன். முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்! அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார். படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம். புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அ

என்னப்பா இது அநியாயம்?

நாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்த மவராசனுக்கோ பிடிக்காம போச்சுபோல! நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்..! நம்ம அப்துல்லா , அவர்பாட்டுக்கும் சந்தோசமா எழுதிக்கிட்டிருந்தார். அவர் வலைப்பூ காணாம போயிருக்கு! என்னப்பா இது அநியாயம்? வூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது? மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு !  இனி இப்படி நடக்காம இருக்க, எல்லா வல்லுநர்களும் நிறைய வழிமுறைகள் சொல்லிக்குடுங்க! அதன் முதல் படியை நட்புடன் ஜமால் ஆரம்பிச்சு வச்சிருக்கார்! இன்னும் எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும் நம்ம மக்களுக்கு பயனுள்ளதா பின்னூட்டலாம். அல்லது பதிவாவே போடலாம்..!

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச்சு!

தனிமனிதனின் ஒரே ஒரு குணத்தால்தான் எல்லா வித தீவிரவாதங்களையும் முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பது என் கருத்து! அது.... தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் ! ஒன்று யோசித்துப்பாருங்கள் ! இன்றுவரை இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குண்டு வெடித்தி ருக்கிறதா?எல்லாமே பெரிய நகரங்களில்தான்..!ஏனெனில் அங்குதான் மக்கள் கூட்டம் அதிகமாக சேதமாகும் என்று கூறலாம். கிராமங்களிலும், சந்தை, திருவிழா என்று கூட்டம்  கூடும் நிகழ்வுகள் உண்டே..! அங்கு குண்டு வைக்கலாமே?  வைக்கமுடியாது .! ஏன் தெரியுமா? கிராமத்து ஆட்களுக்கு தட்டிக்கேட்கும் மனோபாவம் அதிகமாக இருக்கிறது. கிராமத்துக்குள் புதிதாக ஒரு ஆள் நுழைந்தாலும், தொடர்ந்து வந்து ' நீங்க எங்க போகணும்? யாரைப்பாக்கணும் ? என்று கேட்டு ஆள் தெரியாவிட்டால் துரத்திவிடும் மனோபாவம் இன்னும் இருக்கிறது ! பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம்! ரேஷன் கடையிலோ, அரசு மருத்துவமனையிலோ ஒரு அநீதி நடந்தால் உடனே தட்டிக்கேட்பது கிராமத்து மனிதர்கள்தான்..! நகரம்? சொல்லவே வேண்டியதில்லை. என் நண்பர் ஒர

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4

தீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் ! உலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும், தன்முனைப்பும், சினமும் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது. எங்கோ ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவமானமோ, அநீதியோ அவனைப் பொங்கவைத்து , அவனது தனிக்கோபம் சமூகத்தின்மீது காட்டப்பட்டு ஒரு பாவமும் அறியாத மனிதர்களையும் பலிவாங்கிவிடுகிறது. இது இப்போது மட்டும் நடக்கும் செயல் அல்ல.!  தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் ! அவளைத்தான் நாம் பத்தினித்தெய்வம் என்று கொண்டாடுகிறோம்.  ஆனால் என்ன ஒரு ஆச்சர்யமெனில் , காப்பியத்தில் மன்னனையே தட்டிக்கேட்ட பெண் இருந்த இந்த தேசத்தில்தான் என்னைச்சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் வேலையைப்பார்த்துக்கொண்டு போகிறேன் என்று கொஞ்சம் கூட சொரணை இல்லாத புண்ணியவான்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கிறது. தன் வீட்டுக்குப்பைகளை எந்தப்பொறுப்பும் இல்லாமல் சாலையோரத்தில் வீசிவிட்டுப்போகும் மனிதர்களின் செயலில் இருப்பது எந்தவித மிதவாதம்? என்பெயரை ஏ

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3

சென்ற ஆண்டின் இறுதியில் எழுதி.....நீண்ட இடைவெளிக்குப்பிறகு...இதைத்தொடர்கிறேன். அரசு என்பது அதிகாரிகளால் ஆனது ! இன்று அதிகாரிகளால்தான் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதின் சூட்சுமத்தை உணர்ந்துள்ளார்கள் என்பது சர்வநிச்சயம். அதிகாரிகள் ஒரு விதமான தீவிரவாதத்தை நம்மீது பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அரசாங்கம் (மேல்மட்டம்) வெளியிடும் எந்த ஒரு நலத்திட்டமும் மக்களை வந்து அடையாமல் பார்த்துக்கொள்வதில் அவர்களின் பங்கு மேலோங்கி நிற்கிறது. லஞ்சம். ..- இந்தப்பதத்தை கண்டும் பிடித்து, கட்டவிழ்த்தும் விட்டு இப்போது அது நம்மை விழுங்குமளவுக்குச்செய்திருக்கிறார்கள். முன்னெல்லாம் சட்டத்தை மீறிய செயல்களுக்கு லஞ்சம் வாங்கினார்கள். பின்னர் தங்கள் வேலையைச்செய்வதற்கே லஞ்சம்...! இப்போது கொஞ்சம் முன்னேறி...அரசு அலுவலகங்களில் அடிக்கடி கேட்கும் வசனம்...அவரு ரொம்ப தங்கமான அதிகாரி..கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா கண்டிப்பா செஞ்சு குடுத்துருவாரு! - அப்படியெனில் காசு வாங்கியும் செய்துகொடுக்காத நிலையில்தான் இன்றைய லஞ்சம் இருக்கிறது. இது எந்தவகை மிதவாதம்? எல்லா மட்ட அரசு ஊழியர்களும் தன் நலம் மட்டுமே பெரிதென்று ச