ஓமப்பொடி # 9
உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால், நமது இரத்த அழுத்தம், அளக்கும் கருவியின் பாதரசம் வெடித்து வெளிவரும் அளவுக்கு எகிற வைக்கிறது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களின் சிரமத்தை வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு, தனக்கான செலவினங்களில் ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ளாமல், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அலுவலர்களுக்கான சலுகைகளை மட்டும் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறது. இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மத்திய நிதி அமைச்சகத்தில், மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கும்போதும், எண்ணெய் நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலைவாசியை வைத்து, விலையை மாற்றும்படி அரசை நெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அரசு அவர்களது பெட்ரோலிய வரி வசூலில் இருந்து ஒரு பகுதியை மானியமாக அளித்து, சமாளித்திருக்கிறார்கள். இப்போது, தனது வரி வசூலில் ஒரு பைசா கூ...