Posts

Showing posts with the label நடப்பு

சரவணா ஸ்டோர்ஸ் ! BRANDமாண்டமாய் !!

Image
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்! அதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை! ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..! அதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை. மேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும். உலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும். நிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள்! அதன் முதலாளி படம்தான் இருக்கும். பாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட் ரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட் வசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட் சரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்! அதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.!! நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்க...

சென்னைப் பிழை!

Image
 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !! அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை! சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும். இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம். ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வ...

அருகாமை!

Image
தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது. அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.             அந்த ஆர்வத்தில் , அவரிடம் ...

செம்மரச் சந்தேகங்கள் !

Image
எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !! செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா? தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்? தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...? 20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்? கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா? பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.? அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா?  சுட்டது எத்தனை காவலர்கள்?  அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா? ஒரு குற்றம் நடந்தால், அத...

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா ? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில் .. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை ... மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார் .... நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை ? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள் ? என்று !! என் நினைவு சரி என்றால் ... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி , 7 ஆண்டுகளுக்கு முன்னால் , மருத்துவ மாணவர்கள் போராடினார்கள் . . அதுவே போகட்டும் .. எனக்கு ஒரு சந்தேகம் ..!! எஞ்சினியர்கள்தான் .. எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? வக்கீல்கள்தான் ..   சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை ... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன ? இதைத்தான் நம்ம ஊரில் .. போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !! கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் ..!! சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்… எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்...