ராமனைக் கொன்றுவிட்டேன்
அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள்.படித்துறைகளின் பக்கம் மட்டும் கொஞ்சம் வேகத்தைக்குறைத்துக்கொண்டேன். என்னுள் இறங்கி விளையாடும் அத்தனை குழந்தைகளும் சிரமமின்றி கரையேறுமாறு பார்த்துக்கொண்டேன். நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன். மன்னன் ராமன் ஆளும் பகுதியில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெருமை! எவ்வளவு நல்லவன்! காதல் ஒருத்தியைக்கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளையும், அதர்மத்தையும் சேர்த்து வீழ்த்தி..நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறான். என்ன ஒரு வருத்தம்! ..சீதையை சந்தேகப்பட்டு, அவளை விலகச்செய்து, இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்திருக்கவேண்டாம். படித்துறைகளில் பேசும் பேச்சை பல ஆண்டுகளாய்க்கேட்டுவருகிறேன். ராமனின் ஆட்சிபற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! இப்போது ராமனுக்கு வயதாகிவிட்டதா