தண்டனைக்கு தண்டனையா?

கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்பட்ட தண்டனைகள் தேவைதானா? ஆனா இப்படி பண்ணினாத்தானே நம்ம ஆளுக திருந்தும்னு நடுவர் இல்லாத பட்டிமன்றமெல்லாம் ஓடிக்கிட்டிருந்தது.

சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும்.

இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்!

எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ?

ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்தாலும்)
இதை ஒரு நீதிபதியே சொல்லியிருக்காரு!

சவுதி அரேபியாவில் இன்னொரு நடைமுறையும் இருக்கு! தண்டனை வழங்கப்பட்டவங்களை , பாதிக்கப்பட்டவங்க மன்னித்தால் தண்டனை ரத்தாகிவிடும்.

சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் , தண்டனை வழங்கப்பட்ட குடும்பம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதால், பாதிக்கப்பட்ட குடும்பம் அவரை மன்னிக்க, அவருக்கு விடுதலை கிடைத்தது.

ஆனால் இன்னொரு வழக்கு- பாதிக்கப்பட்டவர்களின் பிடிவாதத்தால் -தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனக்கு இது நியாயமாகவே படுது!

ஏன்னா...

நீண்ட நாட்களாக இழுத்து நடந்த தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு, அந்த அப்பாவி
மாணவிகளின் மரணத்துக்கு பதிலா...மரணதண்டனை வழங்குவதோட முடிஞ்சிருக்கு!
அதுக்கு மேல்முறையீடு கேட்டவுங்க...இது முன்விரோதம் காரணமாகவோ, திட்டமிட்டோ செய்யப்படலை! அதனால் தண்டனையை குறைக்கணும்னு கேட்டாங்களாம்.!(நல்லவேளை...தீர்ப்பு மேல்கோர்ட்டில் மாற்றப்படலை)

சாதாரண குடிமகனே கேட்கிறான்.! "முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?

மரணதண்டனை தேவையா இல்லையா எனும் வாதத்தைவிட, பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பமே ஒத்துக்கொண்டால்தான் அதை அப்பீலுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மிரட்டி ஒத்துக்க வைக்க வேற ஆரம்பிச்சுருவாங்களோ? அதையும் சமாளிச்சாகனும்)

இந்த தருமபுரி வழக்கு விஷயத்தில், இழந்த குடும்பத்தார் எப்போது அந்த (தண்டனை) நன்னாள் வரும்னு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே பரிதாபம் ஏற்படும்வகையில் வழக்குகள் தள்ளிப்போவதுதான் சிரமம்.! தப்பு செய்தவர்களது குடும்பமும் தவித்துதான் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பண்ணித்தொலைங்கப்பான்னுட்டுதான்.!

தண்டனை நிறைவேறுமா , நிறைவேறாதா என்று இரு தரப்பும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
இந்த தண்டனைகளுக்கும் இப்ப சோதனை ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு!

தண்டனைகளை நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்படி ஆரம்பித்தால் இந்தச் சமூகமே தண்டனைகளை கையில் எடுக்கும் காலம் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன்.......

Comments

  1. நல்ல பதிவுடன் புத்தாண்டை துவக்கியிருக்கிறீர்கள்.

    சரியான சாட்டையடி கேள்விகள்.

    ReplyDelete
  2. இதுக்கு ஒரு வரியில எல்லாம் பதில் சொல்லி முடிச்சிக்க முடியாது, சுரேகா!

    நான் திரும்ப வாரேன், முக்கியமான இரண்டு பதிவுகளோட லிங்கோட...

    நம்மூருக்கு இது அவசியமானதொரு கேள்விதான்... தண்டணைக்கே ஒரு தண்டனையா?

    ReplyDelete
  3. //"முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?
    //

    செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு, பொதுமக்கள் எல்லோரும் இதை அவனுங்களுக்கு எதிராக கேட்டால், தூக்குதண்டனைக் கூட தேவை இல்லை. செய்த கொலைக்கு உண்மையில் வருந்தி இருந்தால் அவனுங்க கூனிகுறுகியே செத்துப் போவானுங்க

    ReplyDelete
  4. மங்களூர் சிவா said...

    //நல்ல பதிவுடன் புத்தாண்டை துவக்கியிருக்கிறீர்கள்.//

    நன்றிங்க.! ஆனால் இது தானா அமைஞ்சது. திட்டமிட்டு எல்லாம் எழுதலை.!

    ReplyDelete
  5. Thekkikattan|தெகா said...

    //இதுக்கு ஒரு வரியில எல்லாம் பதில் சொல்லி முடிச்சிக்க முடியாது, சுரேகா!

    நான் திரும்ப வாரேன், முக்கியமான இரண்டு பதிவுகளோட லிங்கோட...//


    வருகைக்கு நன்றிங்க!

    கண்டிப்பா... பதிவே போடுங்க ! அதுதானே ஆரோக்கியம்.!

    ReplyDelete
  6. கோவி.கண்ணன் said...

    //பொதுமக்கள் எல்லோரும் இதை அவனுங்களுக்கு எதிராக கேட்டால், தூக்குதண்டனைக் கூட தேவை இல்லை. செய்த கொலைக்கு உண்மையில் வருந்தி இருந்தால் அவனுங்க கூனிகுறுகியே செத்துப் போவானுங்க//


    வருகைக்கு நன்றிங்க கோவி..!

    ஆமா. ஆனா நம்ம மக்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.! இதில் நேற்று உச்சநீதிமன்றத்துக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் -தீர்ப்பு மாற்றப்படக்க்கூடாது ன்னு- தந்தி அனுப்பியிருக்கிறேன். பொதுமக்கள் இதைச் செய்தால், நம் கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்த மாதிரி இருக்குமே..!

    ReplyDelete
  7. >>>>>.
    //"முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?
    //

    செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு, பொதுமக்கள் எல்லோரும் இதை அவனுங்களுக்கு எதிராக கேட்டால், தூக்குதண்டனைக் கூட தேவை இல்லை. செய்த கொலைக்கு உண்மையில் வருந்தி இருந்தால் அவனுங்க கூனிகுறுகியே செத்துப் போவானுங்க
    >>>>>>>>>

    கோவி கண்ணன்,
    மரணதண்டனை கூடாதுன்னு பதிவு போட்றீங்க,இங்ஙண இப்படி ஒரு கருத்து சொல்றீங்க..
    எது உங்க இறுதியான கருத்து??????

    ReplyDelete
  8. எதுக்கு மரண தண்டனைக்கு எதிரா எல்லாரும் ஒப்பாரி வைக்கிறாங்கன்னு தெரியவில்லை. தப்பு செஞ்டவனுக்குதான் தூக்கே தவிர செய்யாதவனுக்கு என்ன?. மனித உயிருக்கு மதிப்பில்லாத சமூகத்துல வாழ்கிறோம். குண்டு வெடிக்கிது, அருவா வெட்டு குத்து உயிரோட எரிக்கிறது இதெல்லாமும் தினம் தினம் நடந்துகிட்டுதான் இருக்கு அந்த தப்ப செய்யக்கூடாதுன்னு சொல்லி தண்டனை தர்றதுல என்ன தவறு இருக்கு? சட்டம் வகுத்தது முதல் தண்டனை இருக்கு அதனால தவறுகள் குறைஞ்சு போச்சான்னு கேக்கறாங்க? இந்த கேள்விய அவங்கவங்க மனசாட்சியவே கேட்டுக்க வேண்டிய கேள்வி. சட்டத்துக்கு புறம்பாதான் நாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம் நீதிபதியால கூட சட்டத்தின் வழியில் வாழமுடியாது. என்னை கேட்டிங்கன்னா தவறு நிரூபிக்கப்பட்டால் அதே இடத்துல தண்டனைய நிறைவேற்றனும். அதை பாக்கற மக்கள் திருந்தறாங்களா இல்லையான்றது வேற விஷயம். ஆனா சட்டமும் தண்டனையும் எல்லாருக்கும் உண்டுன்னு புரியணும்.

    மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் நல்லா சிந்திச்சு பார்க்கணும். தேர்தல்ல நிக்கறவன் கொலைகாரனா இருக்கற சமூகம் நம் சமூகம் இதுல எல்லாத்துக்கும் எதிர்ப்புன்றது நேரவிரயம்.

    ReplyDelete
  9. தம்பி said...

    //எதுக்கு மரண தண்டனைக்கு எதிரா எல்லாரும் ஒப்பாரி வைக்கிறாங்கன்னு தெரியவில்லை. தப்பு செஞ்டவனுக்குதான் தூக்கே தவிர செய்யாதவனுக்கு என்ன?. மனித உயிருக்கு மதிப்பில்லாத சமூகத்துல வாழ்கிறோம். குண்டு வெடிக்கிது, அருவா வெட்டு குத்து உயிரோட எரிக்கிறது இதெல்லாமும் தினம் தினம் நடந்துகிட்டுதான் இருக்கு அந்த தப்ப செய்யக்கூடாதுன்னு சொல்லி தண்டனை தர்றதுல என்ன தவறு இருக்கு? //

    மிக மிகச் சரியா சொன்னீங்க!

    சர்வசாதாரணமா காரணமே இல்லாம முன்னபின்ன பாக்காதவங்களை கொன்னுட்டு, தூக்குதண்டனைன்னு வரும்போது பயந்து சாவுற இந்த லுச்சா பசங்களையெல்லாம் மனசார சவுதி மாதிரி தலையை துண்டாக்கினாத்தான் நம்ம சமூகத்துக்கு நல்லது!
    அதை விட்டுட்டு அவனை அப்பீலுக்கு போக வைக்கிறதே மக்களாட்சியோட சாபக்கேடுன்னுதான் சொல்லணும்.!

    அதுக்குத்தான் சொன்னேன்.
    தன் கடமையாற்றக்காத்திருக்கும் தண்டனைகளையே நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமான்னு..!

    ReplyDelete
  10. நல்ல கேள்விகள்...காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்க வேண்டியதுதான்...

    ReplyDelete
  11. தண்டனை வேண்டாமென்று கூறுபவர்கள் வீட்டில் (மன்னிக்கவும்) இதே போன்று நடந்தால் , எதிரியை தண்டிக்கவேண்டாமென்று விட்டுவிடுவார்களா?

    இதெல்லாம் சும்மா பெரிய லந்து !

    மன்னிப்பெல்லாம் இந்த யுகத்துக்கு சுத்த வேஸ்ட்!

    மன்னிப்பின் சமாதி மேல் அத்தனை அக்கிரமங்களும் நடக்கும்போது நாம் மட்டும் ஏன் மன்னிக்கவேண்டும்.!?

    ReplyDelete
  12. //கோவி கண்ணன்,
    மரணதண்டனை கூடாதுன்னு பதிவு போட்றீங்க,இங்ஙண இப்படி ஒரு கருத்து சொல்றீங்க..
    எது உங்க இறுதியான கருத்து??????//

    கொலைக்கு கொலை சரியான தீர்ப்பு இல்லை என்று சொல்வது மனிதாபிமான அடிப்படையில் எழும் ஒரு கருத்து. ஆனால் கொலையாளிகள், நீலி கண்ணீர் வடித்து தங்களுக்கு மன்னிப்பு வேண்டும் என்று கேட்க எந்த தகுதியும் இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !