இது மாதிரி இருந்தாப் போதும் !

வாழ்க்கைல வெற்றி பெற்ற ஒரு மனிதரப்பத்தி சொல்லி அவரைப்போல இருக்கணும்னு சொல்றதுதான் சாதாரணமா அறிவுரையோ, அறவுரையோ சொல்ற முறை!
இன்னிக்கு அதைக்கொஞ்சம் மாத்தி, இதுமாதிரி இருந்தா ஜெயிக்கலாம்னு நாம பாக்கப்போறது ஒரு பொருள்! அதுவும், இயற்கையா உருவானது இல்ல! நம்மாலயே படைக்கப்பட்ட ஒரு பொருள்..!

என்னது அது?

ரெண்டு நாடுகள் இருந்துச்சு. முதல் நாடு பேரு அட்டெரிக்கா, ரெண்டாவது நாடு பேரு ரமிலியா..! எப்பவுமே இந்த ரெண்டு நாடுகளுக்குள்ளயும் எதை எடுத்தாலும் போட்டிதான்! அந்த நாடு ஒரு விஷயம் செஞ்சா, இது அதுக்கு மேல வேற எதாவது செஞ்சு வெறுப்பேத்தும்.
அப்ப, அட்டெரிக்கா விண்வெளிக்கு ஆளுங்களை அனுப்பிக்கிட்டிருந்தது.அதே போல ரமிலியாவும் அனுப்பிக்கிட்டிருந்தது.
அட்டெரிக்காவிலேருந்து விண்வெளிக்கு போய்ட்டு வந்தவுங்க யாரும், அதைப்பத்தின ரிப்போர்ட்டை எழுதாமலே வந்தாங்களாம்.இது என்னடாது கொடுமைன்னு விசாரிச்சா,
அய்யா! நாங்க எழுதறத்துக்கு தயாராத்தான் இருக்கோம். ஆனா நாங்க எடுத்துட்டுப்போன பேனா எல்லாமே, விண்வெளிக்கு போனதுக்கப்புறம் அங்க காத்தே இல்லாததாலயும், புவியீர்ப்பு விசை இல்லாததாலயும், எழுத மாட்டேங்குது! இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காம ரிப்போர்ட் எழுதறது கஷ்டம்.! அப்டின்னாங்க

உடனே அட்டெரிக்காவுல உள்ள எல்லா விஞ்ஞானிகளும் ஒண்ணு சேந்து பெரிய அளவுல ஆராய்ச்சி பண்ணி 2 வருஷம் கழிச்சு ,விண்வெளிக்குப்போனாலும் பிரச்னை இல்லாம எழுதற மாதிரி பேனா ஒண்ணை கண்டுபிடிச்சுட்டாங்க. என்ன? செலவுதான் கொஞ்சம் அதிகமா ஆயிருச்சு. இருந்தாலும் இதை எல்லா நாடுகளுக்கும் சொல்லணும்னு ஒரு பெரிய மாநாட்டைக்கூட்டினாங்க!. இவுங்களோட நோக்கமே.. ரமிலியா நாட்டை அவமானப்படுத்துறதுதான். மேலும் உலக நாடுகள் இனிமே விண்வெளிக்கு ஆளை அனுப்பினா நம்ம பேனாவைத்தான் பயன்படுத்தியாகணும், அதுனால பேனா வியாபாரமும் நடக்கும்னு நினைப்பு!
மாநாடும் நடக்க ஆரம்பிச்சது! அட்டெரிக்கா தன்னோட பேனாவோட பெருமையெல்லாம் சொல்லி, எல்லாரையும் ஆச்சர்யப்பட வச்சிக்கிட்டிருந்தாங்க!
எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் மேடைல பேசினாங்க! அட்டெரிக்காவோட இந்த கண்டுபிடிப்பு இந்த உலகத்துக்கு ஒரு வரப்பிரசாதம்ன்னு சொன்னாங்க!
அட்டெரிக்கா விஞ்ஞானி ஒரு அறிவிப்பு செஞ்சார்.! இப்ப பேச வரப்போறது ரமிலியா நாட்டு விஞ்ஞானி! அவுங்க நாடும் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பிக்கிட்டிருக்கு! ஆனா பாவம் இந்த மாதிரி பேனா இல்லாம எப்படி கஷ்டப்படுறாங்களோ அப்படின்னு நக்கலா சொன்னார்.
அடுத்து மேடையேறினார். ரமிலியா நாட்டு விஞ்ஞானி.!
ஒரு சின்ன விஷயத்துக்கு அட்டெரிக்கா இவ்வளவு செலவு பண்ணியிருக்கு..! நாங்க வருஷக்கணக்கா விண்வெளிக்கு ஆளுங்களை அனுப்பிக்கிட்டிருக்கோம். ஆனா எங்களுக்கு இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதுற பிரச்னை வந்ததே இல்லை. ஏன்னா நாங்க பேனாவே யூஸ் பண்றதில்லை. நாங்க எழுதப்பயன்படுத்துறது ...........பென்சில்! அப்படின்னாரு.
எல்லா விஞ்ஞானிகளும் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க!  (இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா..? ஏற்கனவே தெரிஞ்ச கதைதான் ....வேற?)

இன்னிக்கு நாம பாக்க்பபோறதும் பென்சிலைப்பத்திதான்.!



பென்சில் மாதிரி இருந்தா வாழ்க்கைல ஜெயிச்சுடலாம்ங்கிறதுதான் மேட்டர்!

உடனே பென்சில் மாதிரி ஒல்லியா இருக்கணுமான்னு கேட்டுராதீங்க! இது உங்க உடம்பு சம்பந்தப்பட்டது இல்லை! மனசு சம்பந்தப்பட்டது! இருந்தாலும், பென்சில் மாதிரி ஒல்லியா இருந்தா நோய் நொடி வராதுன்னு சொல்றாங்க! ஆக பென்சில் மாதிரி ஒல்லியா இருந்தாலும் நல்லதுதான்.

பென்சிலை கவனிச்சுப்பாத்தீங்கன்னா...ஒரு விஷயம் தெரிய வரும். இப்ப சொன்ன கதை மாதிரி...
எந்த சூழ்நிலைலயும் எழுதும். எந்த இடத்திலேயும் எழுதும். பேனாவை மேல்நோக்கி வச்சு எழுத முடியாது. பென்சிலை எப்படி வேணும்னாலும் வச்சு எழுதலாம். அதோட ஒரே வேலை எழுதறது! அதை கரெக்டா பண்ணிரும்.

அது மாதிரிதான் நாமளும் எந்தச் சூழல்லயும் மாறாம நம்ம வேலையை பாத்துக்கிட்டே இருக்கணும். நம்ம வேலை எதுவோ அதை சூழல் பாக்காம செய்யப்பழகணும். அப்பதான் லட்சியத்தை அடையமுடியும்.
நாற்காலில உக்காந்துதான் படிப்பேன். எங்க வீட்டில் தூங்கினாத்தான் எனக்கு தூக்கம் வரும்.ஒரே மூட் அவுட்.! இன்னிக்கு விட்டுட்டு நாளைக்கு படிக்கிறேன். இன்னிக்கு மழையா இருக்கு.., ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு, இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை! மேலதிகாரி சரியில்லைன்னு ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி நாம பிரச்னைல சோந்து போய் ஒக்காந்திருக்கோம். அல்லது - தப்பிக்கப்பாக்குறோம்.

பென்சில்கிட்டேயிருந்து கத்துக்க வேண்டிய முதல் விஷயம், இதுதான். எந்த சூழலிலும், நாம கலங்காம இருந்தாலே பாதி வெற்றியை அடைஞ்ச மாதிரிதான்.அதாவது வெளிச்சூழ்நிலை உங்க வேலையையோ,படிப்பையோ எக்காரணம் கொண்டும் பாதிக்கக்கூடாது. ஆனா பாதி பேர் வெற்றி இப்படி ஆகிடுது!

மொக்கச்சாமி இருந்த நாட்டு ராஜாவுக்கு ஒரு பொண்ணு.! ரொம்ப அழகா இருக்கும். அதுக்கான மாப்பிளை தேடும் முயற்சில இருந்தாரு ராஜா! அதுனால ஒரு அறிவிப்பு வெளியிட்டாரு. நம்ம நாட்டு அகழில யார் குதிச்சு , நீச்சலடிச்சு ,அந்தப்பக்கம் வராங்களோ, அவுங்களுக்குத்தான் இளவரசியை கட்டிக்கொடுப்பேன்ன்னுட்டாரு. அதே மாதிரி எல்லாரும் கூட்டமா அகழிமுன்னாடி கூடிட்டாங்க! அகழிக்குள்ள பாத்தா, பெரிய பெரிய முதலைங்களா இருக்கு! யாருமே குதிக்காம பயத்தோட வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தாங்க! ராஜாவுக்கு கவலையா ஆகிடுச்சு.! நம்ம நாட்டுல வீரன் யாருமே இல்லையான்னு கூட்டத்தைப்பாத்து கேட்டாரு.! திடீர்ன்னு நம்ம மொக்கச்சாமி படக்குன்னு பாஞ்சுட்டாரு..! கத்திக்கிட்டே எப்படியோ எதிர்க்கரைக்கும் வந்துட்டாரு. ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். உடனே மொக்கச்சாமியைக்கூப்பிட்டு, அடேயப்பா! உன்னைமாதிரி ஒரு தைரியசாலியை நான் பாத்ததே இல்ல! என் மகளை மணக்க தகுதியான ஆள் நீதான் ன்னு சொல்லி பாராட்டினாரு. ஆனா மொக்கச்சாமி படபடப்பாவே இருந்தாரு. அதெல்லாம் இருக்கட்டும் ராஜா! என்னைய அகழிக்குள்ள தள்ளிவுட்டது யாருன்னு மட்டும் கண்டுபிடிங்க! அவனுக்கு இருக்கு வேட்டு ! ன்னாரு.


தொல்லை தொடரும்.. (அய்....தொனாவுக்கு தொனா)

Comments

  1. இந்த அட்டெரிக்காங்கிறது அந்த குயின் டவரை லாலிபான் தரை மட்டமாக்கினாங்களே அந்த நாடுதானே!!

    ReplyDelete
  2. ரமிலியா நாட்டு சர்க்கஸ் பொண்ணுங்கல்லாம் ரொம்ப அழகா இருக்கும்

    :))))))))))

    ReplyDelete
  3. /
    அதெல்லாம் இருக்கட்டும் ராஜா! என்னைய அகழிக்குள்ள தள்ளிவுட்டது யாருன்னு மட்டும் கண்டுபிடிங்க! அவனுக்கு இருக்கு வேட்டு ! ன்னாரு.
    /

    சுரேகா ஸ்டாட்டிங் ட்ரபுளா???

    நான்வேணா உங்களை அகழில தள்ளறேன்!!!!!!

    ReplyDelete
  4. /

    தொல்லை தொடரும்..
    /

    ஆ 'ரம்பம்'
    ஆகட்டும்

    ஸ்டாட் மீஜிக்

    ReplyDelete
  5. surekaa,

    ஆனாலும், உங்க தொல்லை கொஞ்சம் அதிகமா ஆயிருச்சு.
    தொல்லை தொடரும்.. வேற?..

    இது என்ன கொடுமை சார்.!
    நடக்கட்டும்!

    ReplyDelete
  6. ஆஹா சுரேகா அளக்க ஆரம்பிச்சிட்டாரு. நல்லா அளக்குறீங்கப்பா! பதிவு சூப்பர்ப்!!!தொல்லைகளை மகிழ்வுடனே எதிர்கொள்வோம்!!

    ReplyDelete
  7. இந்த கந்தியா ல நடுவால உள்ள மக்கா நல்ல சோறு திங்கிறதால தான் ஒலகம் பூரா வெலவாசி எகிறி போய் கெடக்குன்னு சொன்னுதே ஒரு பிஷ் அந்த நாடு தான் அட்டெரிக்கா வா?

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    நான்வேணா உங்களை அகழில தள்ளறேன்!!!!!!///

    குழி பறிக்கிறது, தள்ளுறது இந்த வேலை எல்லாம் நீ நல்லாவே செய்ற சிவா?

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said...

    இந்த அட்டெரிக்காங்கிறது அந்த குயின் டவரை லாலிபான் தரை மட்டமாக்கினாங்களே அந்த நாடுதானே!!//

    அதே அதே..!

    ReplyDelete
  10. //நிஜமா நல்லவன் said...

    இந்த கந்தியா ல நடுவால உள்ள மக்கா நல்ல சோறு திங்கிறதால தான் ஒலகம் பூரா வெலவாசி எகிறி போய் கெடக்குன்னு சொன்னுதே ஒரு பிஷ் அந்த நாடு தான் அட்டெரிக்கா வா?//

    எப்புடி? வெவ்வேற நிகழ்வை சொல்லி நாட்டை அடையாளப்படுத்துறீங்க!!!

    எல்லாம் அக்காமாலா வேலைதான்.!

    ReplyDelete
  11. ஆஹா கூட்டம் கூடிருச்சே! அதுவும் சிவாவும், நல்லவனும் ஒண்ணு கூடிட்டாங்களே..இன்னும் எத்தன தல உருளப்போவுதோ..?

    ReplyDelete
  12. நல்லா எழுதியிருக்கீங்க. ஒரு மேட்ச்ல தோத்திட்டு எரிச்சலோட உட்கார்ந்திருந்தேன், இந்த பதிவை எதேச்சையா படிக்கமுடிஞ்சது. என் நெத்தில அடிச்ச மாதிரி இருக்கு. ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !