இயற்கை கொடையினைக் காப்போம் !
இயற்கையில் இழந்ததையும்
இழந்ததில் இருப்பதையும்
இருப்பதில் காப்பதையும்
காப்பதில் வாழ்வதையும்,
வாழ்வதில் மடிவதையும்
மடிவதில் முடிவதையும்
பயத்துடன் பகிர்கின்றேன்.
அண்டத்தின் பெருவெடிப்பும்
பூகோளப்பிறப்பெடுப்பும்
புவியியல் புத்தகத்தில்
எப்போதோ கண்டதுண்டு!
பிறந்தபின் பூமியும்
தன்னைத்தானே செதுக்கியது.
நெருப்புடனே பிறந்துவந்து
காற்று கண்டு
நிலத்தைக் கண்டு
காலம் கடந்து நீரைக்கண்டு
உயிரினங்கள் ஒன்றிரண்டை
ஓடியாட வைப்பதற்குள்
களைத்துப்போன
இயற்கைக்கு அப்போதே
வயது எழுபது கோடி!
வாழ்வியல் ஓட்டத்தில்
இருப்பியலின் தாக்கத்தில்
தேவைகளின் மாற்றத்தில்
ஒன்றையொன்று சார்ந்துவந்து
உயிரினங்கள் பெருகின!
பெருகிய உயிரினங்களில்
நடந்து வந்து
பேசி நின்று
மூளையெனும் ஆயுதத்தை
முழுமையாகக் கண்டுணர்ந்து
சிந்தித்து செயல்புரிந்து
சிறப்பாக நம்மைக்காப்பான்
என்றெண்ணி இயற்கையும்
மனிதனென்ற உயிரினத்தை
மமதையுடன் படைத்துவிட்டு
மார்தட்டி நின்றது!
வந்திறங்கியவன்
வஞ்சகன் என்றறியா
பித்துமனம் கொண்ட
பேதைத்தாய் இயற்கையும்
பெருஞ்செல்வம் அவனுக்கு
பூமியெங்கும் தந்துவிட்டு
பொறுமை காத்து வந்தது !
//நின்றுமூளையெனும் ஆயுதத்தைமுழுமையாகக் கண்டுணர்ந்துசிந்தித்து செயல்புரிந்துசிறப்பாக நம்மைக்காப்பான்என்றெண்ணி இயற்கையும்மனிதனென்ற உயிரினத்தைமமதையுடன் படைத்துவிட்டுமார்தட்டி நின்றது//
ReplyDelete:-))
நல்லாருக்குங்க கவிதைவரிகளும் படமும்!
வரிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு....படமும் சூப்பர்!
ReplyDeleteதலைப்பை புரிஞ்சி நடந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்... இனிமேலும் புரிஞ்சிக்க போறது.....?????
ReplyDeleteசிந்திக்க வைக்கும் கவிதை! நன்று!!
ReplyDeleteI can see it, a master piece 'poem' on its way...
ReplyDeleteI enoyed it fully well... continue please.
அருமை சுரேகா நன்று.. தொடருங்கள்..
ReplyDelete//நின்றுமூளையெனும் ஆயுதத்தைமுழுமையாகக் கண்டுணர்ந்துசிந்தித்து செயல்புரிந்துசிறப்பாக நம்மைக்காப்பான்என்றெண்ணி இயற்கையும்மனிதனென்ற உயிரினத்தைமமதையுடன் படைத்துவிட்டுமார்தட்டி நின்றது//
ReplyDeleteஇன்னுமாய்யா இந்த பூமி நம்பளை நம்பிகிட்டிருக்கு!?!?
:(((((((((((
கவிதை சூப்பர் சுரேகா.
ReplyDeleteநல்ல கவிதைகள்.. ஆதங்கத்தை அழகாக வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். :)
ReplyDeleteசந்தனமுல்லை said...
ReplyDelete:-))
நல்லாருக்குங்க கவிதைவரிகளும் படமும்!
வாங்க சந்தனமுல்லை!
நன்றிங்க!
பழமைபேசிக்கு அன்பு நன்றிகள்!
ReplyDeleteவாங்க தெகா அண்ணா..!
ReplyDeleteஇப்படியே சொல்லி சொல்லித்தான்
ரணகளமாகிக்கெடக்கு !
:)
வாங்க நிஜமா நல்லவன்..!
ReplyDeleteஉங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி !
வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteநன்றிங்க முத்துலட்சுமி-கயல்விழி!
வாங்க சிவா!
நல்லா கதையக்கெடுத்தீங்க!
அது நம்பிக்கைய இழந்து
பல வருஷமாச்சு !
இப்ப இவிங்களை என்ன பண்ணலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கு!
வாங்க நசேரயன் !
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க !
வாங்க சஞ்சய்!
எல்லாம் உங்கள மாதிரி
அன்பு நண்பர்கள்
பாராட்டுலதான் ஓடிக்கிட்டிருக்கு!