நம்பிக்கைச் சுதந்திரம்

நம்பிக்கை
       வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம்.

சுதந்திரம்

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன்.


     நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே?

அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்? வெட்கமாக இருக்கிறது ! இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா?

ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்!

நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

ஏனென்றால்...

கேட்டால், கிடைக்கும்!!


Comments

  1. அன்பின் சுரேகா - அரசிற்கும் அன்னா ஹசாரேவிற்கும் நடக்கும் போர். வழக்கம் போல் அரசு அடக்கு முறை கடைப்பிடிக்கும்- இறுதியில் ஹசாரே வெற்றி பெறுவார். மெரினாவில் கூடி நம் ஆதரவினை ஹசாரேவிற்கு அளிப்பது / காட்டுவது தவறில்லை. செய்யலாம். நல்லதொரு சிந்தனை தான். நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    ReplyDelete
  2. வாங்க சீனா சார்.!

    உங்கள் அன்புக்கும் , ஆலோசனைக்கும் உளம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    மெரினாவில் கூடலாம், அது மட்டும் போதாது.
    மன்மோகன், சோனியா குழுமத்திற்கு சொல்ல வேண்டும், சட்ட சபை தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம் என்று

    ReplyDelete
  4. ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!
    ovvuru indianum enni parkkavendia varigal.....

    ReplyDelete
  5. வாங்க ராம்ஜி_யாஹூ

    கண்டிப்பாக, காந்தி தோற்றுவித்த ஒரு இயக்கம் இவ்வளவு மட்டமாக நடந்துகொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது. இவர்களை நாட்டை விட்டே விரட்டவேண்டுமென்பது என் அவா!

    ReplyDelete
  6. வாங்க சேகர்!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  7. ஏண்டா ஜெயிலுக்கு கூட்டிகிட்டு போனோம்னு புலம்பி போலிசை கண்ணத்துல மாப்பு போட்டுக்க வெச்சிட்டாரு. இந்த இளைஞனைப் பார்த்து நாமும் ஏதாவது நல்லது செய்யணும்னு தோணுது. அவருடைய தைரியம் ஆச்சரியமா இருக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!