மருத்துவ சோதனை !!

நீயா ? நானா? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...

மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார்....

நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள்? என்று !!

என் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..

அதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..!!

எஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு?

வக்கீல்கள்தான்.. 
சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ?

எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன?

இதைத்தான் நம்ம ஊரில் ..

போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !!

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..!!

சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்…


எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்..? நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை!
ஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்

இன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.

முதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.

இரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.

குறிப்பாக..
சென்னையின் பிரதான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.

அவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...

நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். 

ஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”

டாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார். 

அவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...!!

தவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.

Comments

 1. என் குடும்ப நண்பர் ஒரு பிரபல நரம்பியல் மருத்துவர்.
  நரம்பியல் இல்லாத மற்றவைகளுக்கும் நாங்கள் சென்றால்
  பார்த்து யாரிடம் செல்லவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக சொல்பவர்.

  அவர் ஒரு சமயம் , 1998 என நினைக்கிறேன்.

  ஜெர்மனியில் ஒரு ஆக்சிடெண்டில் தனது விலா எலும்பு முறிவால், கல்லீரல் சிதைவுற்ற நிலையில் இருந்த எனது மகன் சென்னை வந்த உடன் அவரை அணுகியபோது எம்.ஆர். ஐ.ஸ்கான் எடுக்க சொல்லி,நார்மல் ரேட்ஸ் என்று எழுதினார் .

  அதற்கு என்ன அர்த்தம் என்று பிறகு தான் தெரிந்தது.
  அவருக்கு தர வேண்டியது வேண்டாம் என்று சங்கேத மொழி.

  சுப்பு தாத்தா.
  இன்னும் சில விவரங்கள் இங்கே.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !