Tuesday, February 28, 2017

இந்தோனேஷியத் தலைநகரம்

இந்தோனேஷியத் தலைநகரம்
by Surekaa Sundar

February 28, 2017 at 07:38PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Monday, February 27, 2017

பாலியின் உபுத் , கிண்டாமணி பகுதிகளில் ஒவ்வொரு வீடும் தனக்கென்று ஒரு கோவிலையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீட்டினுள் இதோ...

பாலியின் உபுத் , கிண்டாமணி பகுதிகளில் ஒவ்வொரு வீடும் தனக்கென்று ஒரு கோவிலையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீட்டினுள் இதோ...
by Surekaa Sundar

February 27, 2017 at 08:12AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Sunday, February 26, 2017

இன்றைய பாலி நிமிடங்கள்....

இன்றைய பாலி நிமிடங்கள்....
by Surekaa Sundar

February 26, 2017 at 04:35PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Will come on live from kintamani temple

Will come on live from kintamani temple
by Surekaa Sundar

February 26, 2017 at 09:18AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Saturday, February 25, 2017

இந்தோனேஷியாவின் பாலி. தமிழன் ஆண்ட உலகின் இயற்கை சொர்க்கங்களில் ஒன்று.

இந்தோனேஷியாவின் பாலி. தமிழன் ஆண்ட உலகின் இயற்கை சொர்க்கங்களில் ஒன்று.
by Surekaa Sundar

February 25, 2017 at 09:17PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Tuesday, February 21, 2017

இன்று முதல்...சிங்கப்பூர் , இந்தோனேஷியா என ஒரு வார தொழில்முறைப் பயணம் !! பிப்ரவரி...22- 25 - சிங்கப்பூர் பிப்ரவரி 26 - மார்ச் 1 - இந்தோனேஷியா நண்பர்கள் Whatsapp ல் தொடர்புகொள்ளலாம்.

இன்று முதல்...சிங்கப்பூர் , இந்தோனேஷியா என ஒரு வார தொழில்முறைப் பயணம் !! பிப்ரவரி...22- 25 - சிங்கப்பூர் பிப்ரவரி 26 - மார்ச் 1 - இந்தோனேஷியா நண்பர்கள் Whatsapp ல் தொடர்புகொள்ளலாம்.
by Surekaa Sundar

February 21, 2017 at 05:35PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Monday, February 6, 2017

மகிழ்ச்சி # 2சமீபத்தில் ஒரு நிகழ்வில், கவிஞர் ஸ்டாலின் சரவணன் உயிர்மை வெளியீட்டில் ஆரஞ்சு மணக்கும் பசி என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதை நூலைக் கொடுத்தார். ஆனந்த விகடனில் அவரது பல கவிதைகளைப்படித்த ருசியில் நானும் உடனே படிக்கத்துவங்கினேன். 

எழுத்தின் வலிமை அந்த மொழியைக் கையாளுபவனின் வார்த்தைப்பிரயோகங்களில் உள்ளது ! அந்த வகையில் ஸ்டாலின் சரவணன் வார்த்தைகளை வண்ணப்படுத்தி உலவவிட்டிருக்கிறார். பொதுவாக, வலிந்து புரியாத வார்த்தைகளைத் திணிக்கும் கவிதைகளிலிருந்து காத தூரம் ஓடும் என்னைப்போன்றவர்களுக்கு, வரம் போல, எளிய வார்த்தைகளுடன் காட்சிப்படுத்தலாகவும், கற்பனைச் சிதறலாகவும், அழகான கவிதைகள் ஒவ்வொரு பக்கமும் வரவேற்கின்றன. 

தூக்கம், கனவு, குருவிகள்,சமகால அரசியல் , சமூக அவலம், இழையோடும் நகைச்சுவை, இயல்பு மனிதர்கள் , இயற்கை, பண மதிப்பு நீக்கம் என்று புகுந்து புறப்பட்டிருக்கிறது பல புதுக்கவிதைகள் !!

 மனிதர்களை நேசிக்கும் மனிதருக்குள்ளிருந்து வந்த மனித வாழ்வின் பார்வைக்கோணங்களை கவிதைகளாகப் பார்க்க முடிகிறது.

சில கவிதைகள் மனதுக்குள் படிந்து விடுகின்றன. சில... அட! நாம நினைச்ச மாதிரியே நினைச்சிருக்காரே என்று இருக்கிறது. பல.. அட !இந்தக்கோணத்தில் சிந்திச்சதே இல்லையே என்று இருக்கிறது.

பல கவிதைகள் ஒரு கதையையே சொல்லிவிடுகின்றன. சில அந்தக்காட்சிக்குள் நம்மைக்கொண்டுபோய் அமர்த்துகின்றன. ஒரு சில குப்பென்று சிரிக்க வைக்கின்றன. ஒருசில உட்கார்ந்து சிந்திக்க வைக்கின்றன. இவ்வளவு வார்த்தைகளையும் கோர்த்து இயல்பாக கவிதை சொன்ன ஸ்டாலின் சரவணனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதுதான் முறை !

நூலின் தலைப்பான ஆரஞ்சு மணக்கும் பசி என்ற கவிதையே பசியில் இருக்கும்போது வரும் ஆரஞ்சு மணத்தை உருவகப்படுத்தி புனையப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்தால் ஆரஞ்சு மணம் வரும் ஆபத்து இருக்கிறது !

மேலும், கவிதைகளுக்கு தலைப்பிடுவதே ஒரு கலை ! அதிலும் அசத்தல் ஸ்டாலின் சரவணனுக்கு கைகூடியிருக்கிறது. நான் இரசித்த ஒருசில தலைப்புகள்

வண்ணக் கணக்கு
கானற் பெரும்பழங்கள்
மின்சாரமுண்ட எலிக்குஞ்சு
பூ வாசம் வீசும் கொலைகள்
பேய்களும் ஆண்ட்ரியா டாப்ஸியும்
ஒரு பாட்ஷா மாணிக்கமானார்
நீல நிறத்திலொரு துரோகம்
ஆரஞ்சு மணக்கும் பசி


இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு மேடைப்பேச்சிலோ , மேற்கோள் காட்டப்படும் வகையில் இருக்கும் கவிதைகள் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. சச்சிதானந்தத்தின் “நினைவில் காடுள்ள மிருகம்” துவங்கி, பிரமிளின் “சிறகிலிருந்து பிரிந்த இறகு” வரை பல கவிதைகள் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போது, சமகாலத்தில் மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.

கவிஞர் தங்கம் மூர்த்தியின் சில கவிதைகளை பல மேடைகளில் மேற்கோள் காட்டப்படுவதை பார்த்திருக்கிறேன். அதுபோல ஸ்டாலின் சரவணனின் சில கவிதைகளை நன்கு மேற்கோள் காட்டலாம் !


“எங்கோ பெய்த மழையை
என் சன்னலில் விசிறிச் செல்கிறது
ஒரு சின்னக் குருவி”

இனிமேல் மழையையும், குருவியையும் சேர்த்தோ, தனித்தனியாகவோ பார்த்தால் நிச்சயம் இந்தக்கவிதை நினைவுக்கு வரும்!


“அம்மாக்குருவி
அப்பாக் குருவி
பாட்டிக்குருவியைக்
கொன்று புதைத்த
சவப்பெட்டியைக்
காதில் தூக்கி வைத்து
சாலையில் கடந்து செல்லும்
ஒருவனைத் துரத்திச்
செல்கிறது ஒரு
சின்னஞ்சிறு குருவி”

என்று முடிக்கும்போது, செல்போனை எடுத்து பார்த்துக்கொண்டேன்.

“வானம் பெரிது
அது
ஒரு சொட்டு
ஏந்த இயலாது.

சொட்டென்பது
ஆகச்சிறியது
அதில்
வானம் பார்க்கலாம்”

என்று சொன்னதின் அர்த்தத்தில் ஆயிரம் வானம் தெரிந்தது!

சமூக யதார்த்தங்கள் குறித்துப்பேசும்போது மெல்லிய நகைச்சுவை ஊசியால் நறுக்கென்று குத்தி விட்டிருக்கிறார் !
அதுவும் குர்குரே என்ற தலைப்பிட்ட கவிதையை முதலில் படித்துவிடுங்கள் !!

அதில் வரும்

”தினவேறியத் தோள்களோடு
காளைகளை அடக்கிய
சேர சோழ பாண்டிய வாரிசுகள்
குவார்ட்டர் பாட்டில் மூடியைத்
திறக்க விரல்கள்
நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனர்!”

என்ற வரிகள் சொல்லும் உண்மை நிலை கொஞ்சம் பதைக்கத்தான் வைக்கிறது.

வார்த்தைப்பிரயோகங்கள்தான் பெரிய பலமாக இருக்கிறது. ஒரு கவிதையில் பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடலை ஒருவன் ஜெபித்துக்கொண்டிருந்தான் என்று சொல்லியிருப்பது அழகு ! 
அடுத்தவருக்குக் குழிபறிப்பவனின் நகக்கண்களில் மண் துகள்களை யோசித்ததாகட்டும்.. கடல் திருடிச்சென்ற தடம் கப்பலின் அடியில் மூச்சு முட்ட நெறிபடுகிறது என்று சொன்னதாகட்டும் ரசிக்க வைக்கிறது.

சரி !  இந்தக் கவிதை நூலை வாசித்து, வாழ்த்தியது மட்டும்தான் எனக்கு மகிழ்ச்சியா ? என்றால்... இல்லை!

ஸ்டாலின் சரவணனை ஒரு கவிஞராக மட்டுமே தெரிந்த எனக்கு,  கவிதை நூலைப்பெற்றுக்கொண்ட அன்றுதான் , எனது தொடக்கப்பள்ளி ஆசிரியை கஸ்தூரி டீச்சரின் மகனென்று தெரிந்தது. !!

எங்க டீச்சர் மகன் சூப்பரா கவிதை நூல் எழுதியிருக்கான் என்பதுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி !!Saturday, February 4, 2017

மகிழ்ச்சி # 1

மகிழ்ச்சி # 1

திருப்பத்தூரில் ,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மன உந்துதல் நிகழ்வு ! 2500 மாணவர்கள் திரண்டிருந்தார்கள்.

பாடங்களைப்பற்றிய முக்கியத் தகவல்களைச் சொல்ல ஆசிரியர்களும், படித்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதை எடுத்துச்சொல்ல நானும் கலந்துகொண்டோம்.

நான் பேசும்போது கல்வி மட்டுமல்ல !! நம் நடத்தையும், செயல்பாடுகளும், மனித உறவுகளும், பெற்றோரை மதித்தலும் சேர்த்துத்தான் நம்மை உயர்த்தும் என்று

பேசிக்கொண்டிருந்தேன். தாய், தந்தையின் அருமை பற்றி சில நிமிடங்கள் சொல்லி முடித்தபிறகு..

ஒரு மாணவன் எழுந்து பேசத்துவங்கினான்.

சார்! எங்க அப்பா பெயிண்டர் வேலை பாக்குறாரு ! அவர் என்னைத் திட்டும்போதெல்லாம்,

படிச்சிருடா ! இல்லைன்னா என்னை மாதிரி செரமப்படணும்னு சொல்லுவாரு !  ஆனா , எனக்கு பெயிண்டர் வேலைல என்ன சிரமப்பட்டுறமுடியும்னு தோணும்! ஜாலியா

போறாரு! சாயந்திரம் வந்திர்றாரு ! செமயா சம்பாதிக்கிறாரு! இதெல்லாம் கஷ்டமா? சும்மா சொல்றாருன்னு நினைச்சிக்குவேன்.

நேத்து எங்க வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சோம் !  நானும் அரை மணி நேரம் ஒரு சுவர்ல கொஞ்சமா அடிச்சுப்பாத்தேன்.  ராத்திரி கையெல்லாம் ரொம்ப வலிச்சிச்சு ! எதுக்கு

வலிக்குதுன்னு தெரியல ! அப்புறந்தான் பெயிண்ட் அடிச்சதால வலிச்சிருக்கும்னு தெரிஞ்சிச்சு ! அதைப்பெரிசா கண்டுக்காம இங்க வந்திட்டேன்.

இப்ப நீங்க அப்பா பத்தி சொன்னதும், அரைமணி நேரம் சுண்ணாம்பு அடிச்சதுக்கே இப்படி வலிக்குதே ! எங்க அப்பாவும் இப்படித்தானே தினமும் வேலை பாத்திட்டு வந்திருப்பாரு!

அவருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு நினைச்சேன். அவர் கஸ்டத்தைப் புரிஞ்சிக்காம இருந்திருக்கேன்னு நினைச்சு அழுகையா வந்திருச்சு ! இனிமே அவருக்காகவாவது நல்லா படிப்பேன். அவரையும் இனிமே மதிப்பேன் என்று எல்லோரையும் கலங்க வைத்தான்.

கிளம்பும்போது ஓடிவந்து என் அலைபேசி எண் கேட்டு வாங்கிக்கொண்டான்.

அன்று இரவு ஒரு அழைப்பு !!

சார் ! நான் யாசின் பேசுறேன். மேடைல அப்பா பத்தி பேசினேனே ?

தெரியுது...சொல்லுப்பா !

எங்க அத்தா பேசணுமாம் !! குடுக்குறேன்.

ஒரு நடுங்கும் குரல்... அத்தா !!

சொல்லுங்க !!

எம் மவன்கிட்ட என்ன சொன்னீங்கன்னு தெரியல ! ஆனா வீட்டுக்கு வந்ததும் 15 வயசுப்பய என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டு அழுவுறான்.  என்னை மன்னிச்சிக்க.. !! நீ சொல்றதெல்லாம் கேப்பேன். ஒழுங்கா படிக்கிறேன். உன் கஸ்டம் எனக்குப் புரியுது! நான் நல்லா படிச்சு உன்னை வச்சு காப்பாத்துவேங்கிறான் என்னன்னு கேட்டா.. நீங்க பேசினீங்கன்னான். நீங்க சொன்னதெல்லாம் சொன்னான் !  ரொம்ப தெம்பு வந்திருச்சு அத்தா! நீங்க யாரோ எவரோ தெரியல !! நல்லா இருங்கத்தா ! எனக்காக இல்லைன்னாலும், நீங்க சொன்ன சொல்லுக்கு இந்தப்பய நல்லா படிச்சிருவாம்போல !! ரொம்ப சந்தோசமா இருக்குத்தா ! என்று வெள்ளந்தியாக வாழ்த்திக்கொண்டே

அத்தனை பயண அலுப்பையும் அந்த அன்பு என்ற தைலம் நீக்கிவிட்டது ! 

இதைவிட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும் ? 

Wednesday, February 1, 2017

நானும் ஒரு CHO !!

வாழ்வின் மற்றொரு பெரிய மைல் கல்லை எட்டியிருக்கும் நாள் இது! சென்னையில் இயங்கிவரும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான NURATECH LABS நிறுவனத்தின் தலைமை மகிழ்வதிகாரி (Chief Happiness Officer – CHO) ஆக நியமிக்கப்பட்டிருக்கிறேன். உலகெங்கும் உள்ள கிளைகளின் ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு உத்தரவாதமளிக்கும் உன்னதப்பணி அளிக்கப்பட்டிருக்கிறது ! இந்தப்பதவி ஏற்கும் முதல் தமிழன் என்ற மகிழ்வும், தென்னிந்தியாவிலேயே முதல் Chief Happiness Officer என்ற பெருமையும் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கும் மேல் உடன் பயணித்த என்னை, உயர் பதவி கொடுத்து அழகு பார்க்கும் உன்னத உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். நண்பர்களிடம் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதைவிட, மகிழ்வதிகாரிக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் ? மேலும், என் ஏனைய எழுத்து, பேச்சு, தொழில்முறைப் பயிற்சி நிகழ்வுகளும் எப்பொழுதும்போல் தொடரும். அனைவரது அன்புக்கும் நன்றிகளுடன் நாள் துவங்குகிறது !!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...