'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல!
சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது !

(இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி )

மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு..

இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..!

பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..?
ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க!

குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (நமக்கு கெட்டது) நடக்கணும்னா எதுவேணும்னாலும் செய்யுற பார்ட்டி..அவரும் எவ்வளவு நாள்தான் பதவி வெறியே இல்லாத மாதிரி நடிக்கிறது..?

கூட்டு சேந்தவன் கெஞ்சுன கெஞ்சுல, சரி மாப்ளே..நீயே முதலமைச்சரா இரு! ஆனா நாந்தான் துணை முதல்வர்ன்னு ஒரு வழியா பேசி முடிவுக்கு வந்தாய்ங்க..!

வந்தாய்ங்களா..!அந்த ஆளும்..அதான் நம்ப எடியூரப்பா! குடும்பம் குட்டியோட போட்டால்லாம் புடிச்சு அந்த பாழாப்போன நாற்காலில
ஒக்காந்தாரு.அப்பறம்தான் தெரிஞ்சுது.அதுக்கும் ஆப்பு இருக்குன்னு.!

சரி வந்தது வந்துட்டோம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு (பாருங்க..அதுலயே கெடுப்பு இருக்கு) கழுதையை முடிப்போம்னு அந்த ஆள் 'நம்பி ' சட்டசபைக்கு வந்தாரு..வந்தப்புறம்தான் தெரிஞ்சுது..சனியன் சடை பின்னி பூ வைக்காம
போகாதுன்னு! அசுர கவுடா கவுத்துப்புட்டாருல்ல..அழுதுக்கிட்டே வெளீல போனான் மனுஷன்.

கடைசியா குமாரசாமி இப்ப சொல்றாரு."கர்நாடகால கட்சியெல்லாம் கெட்டுப்போச்சு! நான் புதுசா கட்சி ஆரம்பிச்சுத்தான் கர்நாடகாவை சாப்பிடணும்"னு !

அடப்பாவிகளா..இவ்வளவு கூத்தடிக்கிறீங்களே..எங்க காசை தின்னுப்புட்டு, எங்க ஓட்டை வாங்கிக்கிட்டு, ஒரு மாநிலத்தையே தொங்கல்ல விடுறீங்களே.நீங்கள்லாம் மனுசந்தானான்னு ஒரு பொது ஜனம் கூட கேக்கலயா? தர்ணா பண்ணலையா? பஸ்ஸை கொளுத்தலையா? இல்ல.. அவனுங்களையே கொளுத்தலையான்னு கேட்டா..

அவுங்க சொல்றாங்க..நாங்க கேக்கலாம்னு பாத்தோம்..எம் எல் ஏ ல ஒருத்தன் சொல்றான்.நம்ம மக்கள் எவ்வளவு இளிச்சவாயனா ஆக்கினாலும் தாங்கிக்குவாங்க..ஏன்னா அவுங்க ரொம்ப "நல்லவுங்க"....ஊஊஊஊஊ...

Comments

  1. சுரேகா,
    சூப்பர், அரசியலை செம காமெடியா குடுத்து இருக்கீங்க பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள் "Word Verification"ஜ கொஞ்சம் நீக்க முடியுமா?

    ReplyDelete
  2. haha நல்லா எழுதறீங்க கிரி படம் பாத்த எஃபக்ட்

    ReplyDelete
  3. போட்டுத் தாக்கிப்புட்டீர்... கலக்கல் காமெடி அரசியல் அலசல்... சீக்கிரமா தமிழ் மணம் மூலமா வந்து எல்லார் மனசிலயும் டபக்கின்னு ஏற வாழ்த்துக்கள்... ::))

    Yes, can u remove the word verification pleaseeeeeeeeeeeee...?

    ReplyDelete
  4. //சூப்பர், அரசியலை செம காமெடியா குடுத்து இருக்கீங்க பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள் "Word Verification"ஜ கொஞ்சம் நீக்க முடியுமா?//

    நன்றி சந்தோஷ்... "Word Verification ஐ நீக்கிட்டேங்க..

    ReplyDelete
  5. மகேந்திரன்.பெ said...

    haha நல்லா எழுதறீங்க கிரி படம் பாத்த எஃபக்ட்

    நன்றிங்க.. அடிக்கடி வந்து போங்க..

    ReplyDelete
  6. //போட்டுத் தாக்கிப்புட்டீர்... கலக்கல் காமெடி அரசியல் அலசல்... சீக்கிரமா தமிழ் மணம் மூலமா வந்து எல்லார் மனசிலயும் டபக்கின்னு ஏற வாழ்த்துக்கள்... ::))//

    நன்றி தெகா..

    கண்டிப்பா வருவோம்ல..!

    ReplyDelete
  7. Naattukku sevai seiyya
    nava nahariha Bharathi vantharaiyya
    kanipori pettikkul vantharaiyya
    Valaipoovin moolamaha vantharaiyya

    SUREKKAVUKKU VAZHTHUKKAL
    KALAKKUNGA THALAIVARE

    ReplyDelete
  8. VINU said...

    //Naattukku sevai seiyya
    nava nahariha Bharathi vantharaiyya
    kanipori pettikkul vantharaiyya
    Valaipoovin moolamaha vantharaiyya//

    வாங்க..! வணக்கம்!
    பாட்டெல்லாம் பலமா இருக்கு?
    உள்குத்து எதுவும் இல்லையே?

    SUREKKAVUKKU VAZHTHUKKAL
    KALAKKUNGA THALAIVARE

    நன்றிங்க! கலக்கிருவோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!