உணவு @TIE
ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில்
மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடுப்பது
பல்வேறு வெளிநாட்டு துணிகள், மணிகள், கனிகள், கணிணிகள் என்று வகைப்படுத்தி விற்றுத்தரும்
கடைகளால் கட்டப்பட்ட மால்கள் என்ற மாபெரும் கொள்ளைக் கூடாரத்திற்குத்தான்.!
அங்கு சென்றால்தான் தானும் ஒரு ஆடம்பரன்
என்று காட்டமுடியும் என்று அவனாகவே எண்ணிக்கொள்வான் அல்லது இப்படிப்பட்ட கடைகளிலெல்லாம்
வாங்கித்தான் நான் உண்கிறேன், உடுத்துகிறேன் என்று உலகுக்கு அறிவிப்பதற்காக இருக்கும்.
இவற்றையெல்லாம் மீறி உண்மையிலேயே அங்கு என்னதான்
நடக்கிறது என்ற ஆவலில் வேடிக்கையாளனாகப் போனால், அந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் வேகம்
அவன் பணம்கொள் சட்டைப்பையை, பிய்த்து அவனை பிச்சைக்காரனாக்காமல் விடாது.
இவையெல்லாம் ஒரு பொதுவான கருத்தாக இருந்தாலும்,
அங்கு செல்லும் வேட்கையை குறைக்கவிடாது அந்தக்கட்டிடங்களின் மின்வாரியச் சலுகைகளின்
சாட்சிகளான பல்புகள்! உள்ளே அவன் சென்று வந்தபின் வாங்கிய ’பல்பு’கள்தான் அதில் தொங்குகின்றன
என்ற உண்மையே தெரியாமல் வாயையும், பையையும் பிளந்து காட்டிவிட்டு வந்துசேருவான்.
இது என்ன புலம்பல் என்று நீங்கள் யோசித்தால்…
மிகச்சரி.!. மறுபடியும் கேட்டால் கிடைக்க வைத்து விட்டார்கள் இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூவின்
ஆட்கள்.!
ஜனவரி முதல் தேதி எங்காவது சென்றே ஆகவேண்டும்
என்ற தங்கமணியின் தவத்திற்கு, வரமாய்ச் செல்ல முடிவெடுத்ததுதான் செம்மொழிப் பூங்காவும்
( அம்மா புதுப்பேரு வைக்காததுனால பழைய பேரையே சொல்லிட்டேன்..) எக்ஸ்பிரஸ் அவென்யூவும்!
முதலில் சென்றதில், பிரச்னைகள் எதுவுமில்லை. அழகான
வாத்துகளைப்பார்த்து அளவளாவிவிட்டு வந்தோம். அடுத்து சென்ற இடத்தில்தான் ஆரம்பித்தது
பிரச்னை..!
பார்க்கிங் கட்டணம் பார்த்தே பல்ஸ் எகிறினாலும்,
அது தொடர்பான அரசு ஆணையைப் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதால்,( நிற்க.. அது பற்றி
தனிப் பதிவிடுகிறேன்) அதுவரை ஒன்றும் செய்யவேண்டாமென்று, வண்டியை வைத்துவிட்டு மாடி
மாடியாய்ச் சுற்றிவந்தோம்.
ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நாங்கள்
முடிவெடுக்க, நீண்ட நாட்களுக்குமுன் உண்ட ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்சின் சுவை இன்னும்
நாக்கிலேயே இருப்பதாக தங்கமணி அறிவிக்க, SUBWAY யில் கைநீட்டுவது என்று முடிவாயிற்று..!!
அந்த
உணவு வளாகம் முழுவதும் கடுமையான கூட்டம். நானும் சப்வேவுக்குச் சென்று, ஒரு சிறு வரிசையில்
நின்று என் முறை வரும்வரை காத்திருந்து அருகில் சென்று, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து
கெத்தாக,
’ஒரு
வெஜிடபிள் சாண்ட்விச் வித் சீஸ்’ என்று சொன்னேன்.
அவர்
என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
’சார்.!இங்க கேஷ் கொடுத்து வாங்க முடியாது..கார்டுதான்’ என்றார்.
அந்தக் கொடுமை வேறயா?’என்று நினைத்துக்கொண்டே என்னிடமிருக்கும் கடன் அட்டை ஒன்றை எடுத்து
அப்பாவியாய் நீட்ட,
ஒரு
நக்கல் சிரிப்புச் சிரித்துக்கொண்டே……
சார்! அந்தக் கார்டு இல்லை…! இங்க ஃபுட் கோர்ட்டுக்குன்னு ஒரு கார்டு இருக்கு அதைத்தான் வாங்கணும்.!என்றார்.
ஆஹா..!வருடத்தின் முதல்நாளே இப்படி வெறியேத்துறியே வெங்கடேசா என்று நினைத்துக்கொண்டே..
ஏங்க!நான் உணவுப்பொருள் வாங்கப்போறது இங்க! அப்புறம் ஏன் எங்கயோ போய் கார்டு வாங்கிட்டு
வரணும்? என்றேன்.
இல்லை
சார்! அதான் இந்த மாலில் உள்ள FOOD COURT ரூல்ஸ் !
இது
என்ன வித்தியாசமான ரூல்.? .சரி! எங்க போய் வாங்கணும்?
பக்கத்துல
கேஷ் கவுண்டர்ன்னு ஒண்ணு இருக்கும்..அங்க போய் வாங்குங்க என்றார்.
அங்கு
போனபின் தான் அடுத்த கட்ட அதிர்ச்சி என்னை வரவேற்றது. அந்த கவுண்ட்டரில் இரு இளைஞர்கள்
அமர்ந்திருந்தார்கள்.
அவர்களிடம் ’ஏதோ புட் கார்டாமே’ அதைக் கொடுங்க என்றேன்.
’சார்
உங்களுக்கு எவ்வளவுக்கு கார்டு வேணுமோ அவ்வளவு ரூபாய் இந்த கார்டில் ஏத்திருவோம். நீங்க
அதைக்கொண்டுபோய் இந்தத் தொகைக்குள்ள சாப்பிட்டுக்கலாம். மிச்சமிருந்தால் அடுத்த தடவை
வரும்போது கழிச்சுக்கலாம். அதிகமாயிட்டா மறுபடியும் இங்க வந்து டாப் அப் பண்ணிக்கலாம். ஆனா, கார்டுக்கான Non Refundable Charge Rs. 20 இப்போதே கழிச்சுக்குவோம்
என்றார்.
இப்போது என் கேள்வி நரம்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.
’நான்
உங்ககிட்ட ’ஆசைப்பட்டு’ கார்டு வாங்க வரலைங்க! நான் சாப்பிட விரும்பின கடைல இங்க வந்து
வாங்கிட்டு வந்தாத்தான் தருவேன்னாங்க ! அதனால் வந்தேன். நான் ஏன் அந்தக் கார்டுக்கு
இருபது ரூபாய் அதிகம் தரணும்? இது என்ன புதுக்கொள்ளையா இருக்கு?’ என்றேன்.
ஆனால்,
பாவம்..அந்த இளைஞன் மிகப்பொறுமையாக பதில் சொன்னார்.
’இப்படித்தான்
சார் எங்களுக்கு செய்யச்சொல்லியிருக்காங்க! உங்களுக்கு வேறு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால்
எங்க மேலதிகாரிக்கிட்டதான் பேசணும்!’
அப்ப
உங்க மேலதிகாரி நம்பர் கொடுங்க!
உடனே
கொடுத்தார். அவர் எண்ணுக்கு அடித்தேன் எடுக்கவேயில்லை. காரமாய் ஒரு குறுஞ்செய்தி :
நான் ஒரு நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி இங்கு ஒரு பிரச்னை உடனே வரவும் என்று இடத்தைக்
குறிப்பிட்டு என்று அனுப்பினேன்.
மீண்டும்
சப்வே வந்தேன். அவரிடம்
’நான்
கார்டெல்லாம் வாங்கத் தயாராக இல்லை! நான் காசுதான் தருவேன். எனக்கு பொருள் தரமுடியுமா
?’ என்றேன்.
’இல்லை
சார்! அது எங்களுக்கு அதிகாரமில்லை! ஆனால் நீங்க FOODCOURT மேனேஜரிடம் பேசிப்பாருங்க!’என்று கூறிவிட்டு எண்ணும் கொடுத்தார்.
மேனேஜருக்கு
அடித்தேன். உடனே எடுத்தார். விபரம் சொன்னேன்.
’நீங்க
எங்க இருக்கீங்க சார்? உடனே வரேன்’ என்றார்!
நான்
நடந்துகொண்டே கேஷ் கவுண்டர் சென்றுவிட்டேன். அங்கு வருவதாகச் சொன்னார்.
இரண்டு
நிமிடங்களில் வந்தும் விட்டார். மிகவும் அன்பாகவும், பொறுப்பாகவும் பேசினார்.
‘சார்.! இங்க இந்த முறைலதான் நாங்க கடைகளில் உணவு வாங்க வைக்கிறோம். உங்க எண்ணம் புரியுது.! ஆனாலும் இது மேனேஜ்மெண்ட் எடுக்குற முடிவுதான் சார்! இருந்தாலும்..உங்களுக்காக… அந்த இருபது
ரூபாயை ரீஃபண்ட் செய்ய வைக்கிறேன்’ என்றார்.
’நான்
எனக்கு மட்டும் சொல்லலை. எல்லார்க் கிட்டயும் இந்த முறையில் நீங்க கார்டுக்காக கட்டாயப்படுத்தி,
பணம் வாங்குறது இந்திய உணவக சட்டத்துக்குப் புறம்பானது தெரியுமா? சாப்பிடணும்னு
நினைக்கிறவன் காசைக்குடுத்து சாப்பிட்டுட்டுப் போறான்!’ என்றேன்.
’இதையும், நீங்களே எங்க மேனேஜ்மெண்ட்டுக்கு
சொல்லிடுங்க சார்! ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காக (அந்த அரசியலை தனிப்பதிவாக எழுதுகிறேன்.) இப்படி பண்ணியிருக்காங்க! நாங்க எதுவும் கமெண்ட் செய்யமுடியாது’. என்று சொல்லிவிட்டு
தனது கார்டையும் கொடுத்துவிட்டு, வேறு ஏதாவது சேவை தேவையெனில் தன்னை அழைக்குமாறும்,
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் எப்போதும்(!) என்னை அன்புடன் எதிர்பார்ப்பதாகவும் சொல்லி , கூடவே ஒரு ஊழியரையும் எனக்கு உதவிசெய்ய அனுப்பி , விடைபெற்றார்.
நானும், இருநூறு ரூபாய்க்கு கார்ட் வாங்கி SUBWAY வந்து மீண்டும் அதே ஆளிடம் சாண்ட்விச் கேட்டேன்.
அவர்
சிரித்துக்கொண்டே , கார்டை வாங்கி மெஷினில் இழுத்தார்.
கூடவே
ஒரு டம்ளர் தண்ணியும் கொடுத்துருங்க என்றேன்.
ம்
என்று சொல்லிவிட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலுக்கான
தொகையையும் என் கார்டிலிருந்து கழித்திருந்தார்.
நான்
பில் பார்த்தவுடன் அதிர்ந்தேன்.
‘நான்
வாட்டர் பாட்டில் கேட்கவே இல்லையே?’
’தண்ணி
இப்படித்தான் சார் கொடுப்போம்..’
ஹெ
…ஹெ..நாங்கள்லாம் அப்பவே இப்படி! என்று ஆரம்பித்தேன்.
இரண்டு
நிமிடங்களில், இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வந்தது.
அடுத்த
ஆச்சர்யம். எனக்கு தண்ணீர் பாட்டிலுக்காக போட்ட பில்லும் திரும்ப என் கணக்கில் வரவு
வைக்கப்பட்டது.
சாப்பிட்டுவிட்டு,
மேனேஜரை அழைத்தேன். அவரது ஊழியர் ஒருவரை என்னுடன் அனுப்பி..என் கணக்கில் மீதமிருந்த ஐம்பது ரூபாயை, *(புத்தம்புது நோட்டு) வாங்கிக்கொடுத்து புன்னகையுடன் வழியனுப்பினார்.
அப்போது
வாங்கிய கார்டை , அப்போதே தலைமுழுகிவிட்டு மகிழ்ச்சியாய்க் கிளம்பினேன்.
கார்டு வாங்கிய பில்..!
சாண்ட்விச்சும் , தண்ணீர் பாட்டிலும் சேர்த்து போடப்பட்ட பில்
தண்ணீர் பாட்டில் பணம் திரும்பக் கொடுத்த பில்
நன்றாக
யோசித்துப்பார்த்தால், இந்த முழுப்பிரச்னையிலும் அந்த நிறுவன ஊழியர்களில் யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை. முடிந்தவரை
எனக்கு உதவத்தான் முயற்சித்தார்கள். ஒரே ஒருவர் மட்டும் கொஞ்சம் இடக்காக ஆரம்பித்தார். நான் மடக்காக ஆரம்பித்ததும் அடங்கிவிட்டார்.
ஆனால்...பொதுமக்களிடம் எப்படிவேண்டுமானாலும் காசு கறக்கலாம் என்று திட்டம் போட்ட முதலாளிகளைவிட… இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் யார் தெரியுமா?
இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருந்த போதும்
வேடிக்கையைக்கூட ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, அணிந்திருந்த ஜீன்ஸின் பின்பக்கம் பேண்ட்டியின் நிறுவனப்பெயரை
எல்லோருக்கும் காட்டியபடி ’No Refund? Is It? என்று கேட்டுவிட்டு தலையாட்டிக்கொண்டே
காசைக் கொடுத்துச் சென்ற மானமங்கைகளும், சுப்பையா என்ற பெயரில் ஐ.டி கார்ட் இருந்தாலும்,
சுவிஸ் நாட்டுக் குடிமகன் என்ற நினைப்பில் ‘Seven Chicken Sanwitch !’ என்று வாங்கி
அவன் அடாவடியாகக் கொடுத்த 2 வாட்டர் பாட்டில்களையும் வாய் திறக்காமல் வாங்கிச்சென்ற தட்டிக்கேட்க வக்கில்லாத சேர,சோழ, பாண்டியப்பேரன்களும்தான்.!!
இவர்கள்தான் தங்களை பெரிய எச்சிக்கலை ஃபேமிலி
போல் எண்ணிக்கொண்டு பக்கி முண்டங்களாக வரிசையில் நின்று சமூகத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும்
ஹீரோவின் படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் வரிசைகட்டி, 20ரூபாய் கொள்ளைக் கார்டை
,300 ரூபாய் மதிப்பேற்றி வாங்கி 240க்கு மூன்று காபிகள் குடித்துவிட்டு மிச்சமிருக்கும்
40 ரூபாயை எப்போது செலவழிப்பது என்று தெரியாமல், அதற்காகவே மீண்டும் வந்து கீழே நிறுத்திய
வண்டிக்கு பார்க்கிங் கட்டணமாக அதே 40 ரூபாயை தண்டம் அழுதுவிட்டு, I Support India Against Corruption என்ற
பனியனை வாங்கி அணிந்துகொண்டு, அன்னா ஹஜாரேவை இணையத்தில் லைக்கும் ,இந்தியாவில், முதலில்
நசுக்கப்பட வேண்டிய முதுகெலும்பில்லாத கரப்பான்பூச்சிகள் !
நேர்மையான
தைரியத்துடன், உங்கள் உழைப்பு உண்மையென்றால், உங்கள் பணம் நியாயமானதென்றால், உங்களுக்குள் இருக்கும் ஹீரோவுக்கு வேலைகொடு்த்து, உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப்
பாருங்கள்!
கேட்டால்....கிடைக்கும்!
Appadiyavathu Sandwitch sapidanuma?
ReplyDeleteஅதை அனானியாத்தான் வந்து சொல்லணுமா? :))
ReplyDeleteஎதுக்கு 2012 இறுதிவரை காத்திருக்கணும். 2012 ண் சிறந்த பதிவு...
ReplyDeleteஒரு கோடி சுரேகாகள் இந்த சென்னையில் உதிக்க வேண்டும் ..
மால் கலாசாரத்தில் தமிழன் மக்கி போய்கொண்டே இருக்கிறான்..
தென்மாவட்டங்களில் இந்த அசுரன் எட்டி பார்க்க ஆரம்பித்து இருக்கிறான்..
இவர்கள்தான் தங்களை பெரிய எச்சிக்கலை ஃபேமிலி போல் எண்ணிக்கொண்டு பக்கி முண்டங்களாக வரிசையில் நின்று சமூகத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஹீரோவின் படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் வரிசைகட்டி, 20ரூபாய் கொள்ளைக் கார்டை ,300 ரூபாய் மதிப்பேற்றி வாங்கி 240க்கு மூன்று காபிகள் குடித்துவிட்டு மிச்சமிருக்கும் 40 ரூபாயை எப்போது செலவழிப்பது என்று தெரியாமல், அதற்காகவே மீண்டும் வந்து கீழே நிறுத்திய வண்டிக்கு பார்க்கிங் கட்டணமாக அதே 40 ரூபாயை தண்டம் அழுதுவிட்டு, I Support India Against Corruption என்ற பனியனை வாங்கி அணிந்துகொண்டு, அன்னா ஹஜாரேவை இணையத்தில் லைக்கும் ,இந்தியாவில், முதலில் நசுக்கப்பட வேண்டிய முதுகெலும்பில்லாத கரப்பான்பூச்சிகள் !//
ReplyDeleteமுற்றிலும் உண்மை...
நன்றி காவேரி கணேஷ் அண்ணே!
ReplyDeleteஇது என்மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.
எத்தனையோ விஷ விஷயங்கள் பரவுவது போல், இந்த கேட்கும் குணம் பரவ வேண்டும் என்பதுமட்டும்தான் என் எண்ணம்!
யாராவது ஒருவர்,
எனக்கு தைரியம் வந்து தட்டிக்கேட்டேன் என்று சொன்னாலே போதும்..!!
வெற்றியின் அடிவாரத்தைத் தொட்டுவிட்டோம் என்று அர்த்தம்!
வாங்க செவிலியன்
ReplyDeleteமிக்க நன்றி!
ஒழுங்கா போய்க்கிட்டு இருக்கற ட்ராபிக்ல சடனா நம்ம வண்டி மக்கர் செஞ்சா நம்மளை எம்புட்டு திட்டுவாங்களோ அந்த அளவுக்கு இந்த மாதிரி இடங்களில் நம் உரிமையை தட்டிக்கேட்கும் பொழுது நம்ம மத்தவங்க ஜந்து மாதிரி பார்ப்பாங்க. நானும் கேட்டு பாக்கிறேன். சில சமயம் எஸ்... பல சமயம் நோவாகிவிடுகிறது.
ReplyDeleteஅணிந்திருந்த ஜீன்ஸின் பின்பக்கம் பேண்ட்டியின் நிறுவனப்பெயரை எல்லோருக்கும் காட்டியபடி ’No Refund? Is It? என்று கேட்டுவிட்டு தலையாட்டிக்கொண்டே காசைக் கொடுத்துச் சென்ற மானமங்கைகளும், //
ReplyDeleteஇந்த மாதிரி உடை அணிவது மங்கன் களும் தான். அதைப்பார்க்கும் போது ஆத்திரம் அதிகமாக வருகிறது. கடையில் ரெடிமேட் பேண்ட் வாங்கப்போனால் (மகனுக்கு) லோ ஹிப் பேண்ட் தான் கிடைக்கிறது. மேலே ஏற்றி போடலாம் என்றால் ஜிப் சின்னதாக வைத்து தொலைக்கிறார்கள். பிரச்சனையே வேண்டாம் வாங்கி தைக்கலாம் என்றால் டெய்லரை தேடிவது ஒரு கொடுமை. ரெடிமேட் துணி என்றாலும் ஃபேஷன் இல்லாமல் துணி வாங்கி போடும் உரிமை கூட நமக்கு கிடையாதா? கொடுமை
// காரமாய் ஒரு குறுஞ்செய்தி //
ReplyDeleteவெஜிடபிள் சான்ட்விச்சை விடவா...
அருமையான பதிவு. நானும் அந்த கொல்லைகூடரதிற்குள் முதல் முறை சென்றபொழுது இப்படி ஒரு அனுபவம் நேர்ந்தது. நான் அந்த கடை பணியாளரிடம் கேட்டது என்னவென்றால் எனக்கு தேவையான உணவிற்கான பில்லை குடுங்கள் நான் அந்த தொகைக்கு அந்த கவுன்டரில் சென்று பணம் செலுத்துகிறேன் என்று சொன்னேன் இதில் எதாவது தவறு உள்ளதா நீங்களே சொல்லுங்கள். அதற்கு அந்த பணியாளர் இனங்காததாலும் எனக்கு பின்னால் நின்ற பல பணக்காரர்களின் புலம்பளினாலும் அங்கிருந்து நகர்ந்தேன். அன்று முடிவு செய்தேன் மீண்டும் ஒரு முறை அந்த கொல்லைகூடரதிற்குள் செல்வதில்லை என்றும் அப்படியா தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அங்கு செல்ல வேண்டி நேர்ந்தால் அங்க வாகனத்தை நிறுத்துவதும் சாப்பிடுவதும் இல்லை என்று முடிவு செய்தேன். அதன் படி ஒரு முறை என் நண்பன் அங்கே உள்ள எஸ்கேப் சினிமாஸில் டிக்கெட் புக் செய்திருந்தான் அதனால் நாங்கள் ஒரு முடிவெடுத்து எங்கள் வண்டியை ஸ்பென்சரில் பார்க் செய்து விட்டு சென்றோம் . அங்கே நேராக சென்று படம் பார்த்து விட்டு எதுவும் சாபிடாமல் வந்துவிட்டோம். அது தான் நான் அங்கு சென்று வந்தது கடைசி முறை இந்த ஒன்றரை ஆண்டுகளாக அங்கு செல்லவே இல்லை. இனி செல்லவும் விருப்பம் இல்லை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேர்மையான தைரியத்துடன், உங்கள் உழைப்பு உண்மையென்றால், உங்கள் பணம் நியாயமானதென்றால், உங்களுக்குள் இருக்கும் ஹீரோவுக்கு வேலைகொடு்த்து, உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப் பாருங்கள்!
ReplyDeleteகேட்டால்....கிடைக்கும்!]]
சிறப்பா சொன்னீங்க, முயற்சிப்போம்
கேட்டால் ... கிடைக்கும்
கேட்டால் தான் கிடைக்கும் :)
Intha koothu theater la yum nadakuthunga. Entha theater layum Thanni vekkarathe illa. Parking name la kolla adikuranunga.
ReplyDeleteவீட்டம்மா கூட வெளியே போகும் போது " எதுக்கு சண்டை ?பேசாம இருங்க" என அடக்கி விடுவதால் பல சிங்கங்கள் எதையும் தட்டி கேட்காமல் வந்து விடுகிறது. :))
ReplyDeleteசுரேகா வீட்டில் சிதம்பர ஆட்சி போலும்
சென்ற வாரம் சென்னை வந்திருந்த போது நண்பரிடம் மால் என்று சொல்கிறார்களே? அதைப் போய் பார்க்க வேண்டும் என்றேன். என்னை மேலும் கீழும் பார்த்தார். நீங்க போனா சண்டை வந்து விடும் என்றார். நீங்களாவது பொறுமையா வந்துருப்பீங்க போல. கிழிச்சு தோரணம் கட்டியிருப்பேன். ரொம்ப சிறப்பா எழுதியிருக்கீங்க. வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உள்ளே போக வேண்டும் போல?
ReplyDeleteஅண்ணே அமெரிக்கா மாதிரின்னு சொல்லிகிட்டு இல்லாத அராஜகம் எல்லாம் பன்றானுங்க, ஆனா அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ இப்படி கார்ட் மூலம்தான் பணம் கொடுக்கனுன்னு சொன்னா மொதலாளிகளுக்கு லாடாம் கட்டிவிடும்.
ReplyDeleteஆனால் இங்கே மண்ணுமோகன் ஆட்சிலே அதெல்லாம் கனவுதான்:)))
நல்ல பதிவு சுரோகா,
ReplyDelete//உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப் பாருங்கள்! கேட்டால்....கிடைக்கும்! //
என்று நீங்கள் எழுதி இருப்பது
//பிரச்சனையே வேண்டாம் வாங்கி தைக்கலாம் என்றால் டெய்லரை தேடிவது ஒரு கொடுமை. ரெடிமேட் துணி என்றாலும் ஃபேஷன் இல்லாமல் துணி வாங்கி போடும் உரிமை கூட நமக்கு கிடையாதா? கொடுமை//
புதுகைத் தென்றல் சொல்லும் இந்தப் பிரச்சனைக்கு எப்படி உதவும். டெய்லர்களே இல்லாமல் போய் விட்ட சூழலில் எங்கு போய் நாம் தட்டிக் கேட்க முடியும்?
இது போன்று மாலில் தகராறு செய்கிறார்கள் என்று நாளைக்கே சட்டம் திருத்தப்பட்டு விட்டால் என்ன செய்ய முடியும்?
அன்பின் சுரேகா - என்ன செய்வது - இவர்களாஇ எல்லாம் திருத்த இயலாது - ஏதேனும் தட்டிக் கேட்டால் - பின்னால் வரிசையில் நிற்பவர்கள் நம்மை எகத்தாளமாகப் பார்ப்பார்கள். பொதுவாக இங்கு வந்தால் இவை தான் விதிமுறைகள் - பின்பற்றுக - பிடித்தமில்லை எனில் வெளியே செல்க - இது தான் கொள்கை - கொள்ளை - ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteவெளிநாடு கணக்கா செய்யறாங்களாம் (பந்தா)
ReplyDeleteநேர்மையான தைரியத்துடன், உங்கள் உழைப்பு உண்மையென்றால், உங்கள் பணம் நியாயமானதென்றால், உங்களுக்குள் இருக்கும் ஹீரோவுக்கு வேலைகொடு்த்து, உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப் பாருங்கள்!
ReplyDeleteகேட்டு தான் பார்க்கணும் கிடைக்காது .
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த மாதிரி இடத்துல ரொம்ப கடுப்பேத்துவாங்க மி லாட்!!
ReplyDeleteகடைசி பத்தி செம காரம்....
உங்கள் ASK குழுவில் இணைந்த பிறகுதான் எனக்கு பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்களுக்கு என் நன்றிகள்...
EA உள்ள அவ்ளோ காசு செலவு செய்து சாப்பிடறதுக்கு, மணிக்கூண்டுக்கு எதிர்ல ஒரு அசைவ உணவகம் இருக்கு. அந்த உணவகத்துக்கு போகலாமே!!
Rombha arpudhamaa sonneenga.. Idhil kodumayana vishayam ennana naama ippadi adippadai urimayai kekkum podhu andha Pakki Mundangal nammala PAZHAM nu sollunga.. Idhula enoda indha idathuku vara Pakki Mundangalum adakkam..
ReplyDelete// இவர்கள்தான் தங்களை பெரிய எச்சிக்கலை ஃபேமிலி போல் எண்ணிக்கொண்டு பக்கி முண்டங்களாக வரிசையில் நின்று சமூகத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஹீரோவின் படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் வரிசைகட்டி, 20ரூபாய் கொள்ளைக் கார்டை ,300 ரூபாய் மதிப்பேற்றி வாங்கி 240க்கு மூன்று காபிகள் குடித்துவிட்டு மிச்சமிருக்கும் 40 ரூபாயை எப்போது செலவழிப்பது என்று தெரியாமல், அதற்காகவே மீண்டும் வந்து கீழே நிறுத்திய வண்டிக்கு பார்க்கிங் கட்டணமாக அதே 40 ரூபாயை தண்டம் அழுதுவிட்டு, I Support India Against Corruption என்ற பனியனை வாங்கி அணிந்துகொண்டு, அன்னா ஹஜாரேவை இணையத்தில் லைக்கும் ,இந்தியாவில், முதலில் நசுக்கப்பட வேண்டிய முதுகெலும்பில்லாத கரப்பான்பூச்சிகள் //
ReplyDeleteஅட்டகாசம் அண்ணே, நான் கூட ஒரு முறை இதே போல சாப்பிட ஆசைப்பட்டு போனேன் அனால் காஷ் கவுண்டரில் பணம் கட்டி கார்டு வாங்க வேண்டும் என்றனர் இருந்த கூட்டத்தை பார்த்து பேசாம வீட்டுக்கு போய் சாப்டலாம் என நினைத்து கிளம்பி வந்துவிட்டேன், மறுபடியும் இதுபோல நேர்ந்தா உங்க அனுபவத்த repeat பண்ணிடலாம் விடுங்க
//வாய் திறக்காமல் வாங்கிச்சென்ற தட்டிக்கேட்க வக்கில்லாத சேர,சோழ, பாண்டியப்பேரன்களும்தான்.!!
ReplyDelete//
அருமைச் சொன்னீங்க!!!
இப்படி சண்டை போடறவங்களை தவறாகவேறு பார்க்கும் சமூகம் இன்னும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் வெளிநாட்டைக் காப்பியடிக்கும் மிஸ்டர் படிப்பாளிகள் வெளிநாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தைரியத்தையும் கொண்டிருக்கவேண்டும்.
போன வருடம் எக்ஸ்பிர்ஸ் மாலுக்கு சென்றேன்.அந்த புட்கோர்ட்டில் சாப்பிடுவதற்காக ரூ 500 கொடுத்து கார்டு வாங்கினேன்.கார்டுக்கான வைப்பு தொகையாக ரூ 20 கழித்துகொண்டு ரூ 480 கார்டில் கொடுத்தார்கள்.எதற்கு இந்த 20 ரூபாய் என்று கேட்டதற்கு”கார்டில் காசு தீர்ந்தபிறகு அந்த கார்டினை திருப்பித்ராமல் போய்விடுகிறார்கள் அத்னால் தான் ரூ 20 பிடித்து வைக்கிறோம் என்றார்கள்.அதேப்போல் நாங்கள் ரு 480 செலவு செய்துவிட்டு கார்டினை திருப்பி கொடுக்கும்போது ரூ 20 திருப்பிதந்தார்கள்.
ReplyDeleteஅப்ப கார்டுக்கு செக்க்குயுரிட்டி டெபாஸிட் மாதிரி வாங்கினார்கள்.ஒரு நியாயம் இருந்தது.இப்ப அதை கட்டணமாக வாங்குகிறார்கள் இது பகல் கொள்ளை.
நீங்கள் நுகர்வோர் அமைப்பின் உறுப்பினரா?
ReplyDelete//கட்டாயப்படுத்தி, பணம் வாங்குறது இந்திய உணவக சட்டத்துக்குப் புறம்பானது //
எனில், இதுபோன்ற அதிகப்படி கட்டணங்கள் வசூலிக்கும் உணவகங்களின் மீது (உங்கள் அமைப்பின் சார்பாக) சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா?
இது சட்டப்படி தவறு என்றே பலருக்கும் தெரியாது. இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு - பத்திரிகை விளம்பரம் போல - அரசுத்துறைகள் செய்திருந்தால்/ செய்தால்/ செய்ய வைக்கப்பட்டால் - அனைவருக்கும் தெரியும் பட்சத்தில், எதிர்க்குரல்கள் அதிகமாக எழ வாய்ப்புண்டு.
வாழ்த்துகள். இதுக்கு தான் இன்கலம் போகறதே இல்ல.(அப்போ நான் சென்னை வாசி இல்லையோ)
ReplyDeleteennakum ipadi ellam sandai pootu needhi keekanumnu asai sir..aana bayama iruku ? eppadi sir antha bayatha pookarathu..
ReplyDeleteவாங்க புதுகைத் தென்றல்..
ReplyDeleteநீங்க சொல்றது சரிதான்..
சாக்கடையைச் சுத்தம் செய்ய இறங்கிவிட்டால் நாற்றம் பார்க்கமுடியாது என்ற நினைப்பில்தான் ,யாரையும் கண்டுகொள்ளாமல் இதைச் செய்யவேண்டியிருக்கிறது. அவர்களுக்காகவும்தான் பேசுகிறோம் என்று என்றாவது புரியும்..!!
@புதுகைத்தென்றல்...ஆமா..நானும் கம்ஃபோர்ட் ஜீன்ஸ் கிடைக்க போராடுறேன். ஆனால் 4 கடை ஏறி இறங்கினால், கிடைக்கிறது.
ReplyDeleteவாங்க பிலாஸபி பிரபாகரன்..!!
ReplyDeleteஆமா..வெஜ் சாண்ட்விச்...பெரிசா காரமில்லை.. குறுஞ்செய்திதான் காரம்.!
வாங்க ராகேஷ்..!
ReplyDeleteஆம்.
ஆனால், நாம் அங்கு செல்லவேண்டும். நமக்கேற்றார்போல் அவர்கள் சட்டதிட்டங்களை மாற்றவேண்டும்.. அதுதான் நுகர்வோரின் வெற்றி!
வாங்க நட்புடன் ஜமால் அண்ணே!
ReplyDeleteமிக்க நன்றி!
வாங்க அரவிந்த்...
ReplyDeleteதியேட்டரிலும் தண்ணி கேட்டுப்பாருங்களேன்..
கிடைக்கும்!!
வாங்க மோகன் குமார் அண்ணே!
ReplyDeleteஆமா..நீங்க சொல்லும் அர்ச்சனை சில ரங்கமணிகளுக்கு நடக்கும்..எங்க வீட்டில் சுவாரஸ்யமா வேடிக்கை பார்ப்பார்கள்! :))
வாங்க ஜோதிஜி..
ReplyDeleteஅப்ப நீங்க நம்ம கூட்டம்!!
வாங்க வாங்க எதாவது செய்வோம்..!! :)
வாங்க கே ஆர் பி செந்தில்..
ReplyDeleteஆமா..
சரியா சொன்னீங்க!!
வாங்க சிவகுமார் மா!
ReplyDeleteஅப்படி ஜீன்ஸை வாங்காமல் இருக்கவேண்டியதுதான்..!!
நீங்க சொல்றமாதிரி சட்டம் போட்டா... அப்புறம் அந்த மால் இருக்குமான்னு பாப்போம்!
அதைவிட இன்னொரு யுக்தி...புறக்கணிப்பு!!
வாங்க சீனா சார்!..
ReplyDeleteஇது நம் தேசம்.. நம் உரிமையை நாம் கேட்கலாம் என்ற நினைப்பை உருவாக்கிவிட்டால்..இவர்களெல்லாம் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள்.
வாங்க fundoo.!
ReplyDeleteவாங்க சசிகலா!
கேட்டுத்தான் பார்க்கிறோம். கிடைக்கிறதே!! :)
மேலும் அப்படி கிடைக்காத பட்சத்தில் இது போன்ற ஒத்த சிந்தனையுடையவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்று தெரிந்துகொண்டால் போதும்!!
வாங்க நல்லவன்..!
ReplyDeleteமிக்க நன்றி!
ஹே.ஹே..அதே ஏரியால நல்ல சைவ ஹோட்டல் இருந்தா சொல்லுங்களேன்.! :))
வாங்க தரண்...மிக்க நன்றி!
ReplyDeleteவாங்க தன்ஸ்.
ReplyDeleteகண்டிப்பா அடுத்த முறை போய் அப்படிச் செய்யுங்க!
வாங்க MSATIA.!!
ReplyDeleteகரெக்ட்...வெளிநாட்டின் நுகர்வோர் கலாச்சாரம் வரணும்!
வாங்க அரவிந்தன்..!!
ReplyDeleteஆம்..!
நம்மிடம் 20 ரூபாய் வாங்குவதுதான் தவறு..!
வாங்க ஹுசைனம்மா..
ReplyDeleteஆம்.. நான் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலச் செயலாளர்
அதில் சில நடைமுறைச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி... இந்த உணவகங்கள் செயல்படுகின்றன. அது சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்ந்துதான்...இந்தப்பிரச்னையைக் கையாள வேண்டும்..!
வாங்க நிலா..
ReplyDeleteமிக்க நன்றி!
வாங்க ரமேஷ்..
ReplyDeleteகேக்கணும்னு ஆசைப்படுறீங்க இல்லையா? அது போதும். மிச்சத்தை நாங்க பாத்துக்குறோம். கேட்டால் கிடைக்கும் இயக்கத்தின் கூட்டம் விரைவில் நடக்கும். அதற்கு வாருங்கள்!
நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - மருத்துவமனை உட்பட - அங்கேயும் டாக்டர்கள் நடத்தும் கொள்ளை மற்றும் அசவுகரியங்களைத் தட்டிக் கேட்பதால் - என்னுடன் வருவதற்கே என் குடும்ப உறவுகள் நெளிகிறார்கள். இதில் உள்ள நேர்மையை - அவசியத்தை - புரிந்து கொண்டாலும் மற்றவர்கள் போல நான் இல்லாமல் எப்பவுமே சண்டைக்கோழி என்று பெயர் எடுக்கிறேன் என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.
ReplyDeleteலட்சுமணன்
நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - மருத்துவமனை உட்பட - அங்கேயும் டாக்டர்கள் நடத்தும் கொள்ளை மற்றும் அசவுகரியங்களைத் தட்டிக் கேட்பதால் - என்னுடன் வருவதற்கே என் குடும்ப உறவுகள் நெளிகிறார்கள். இதில் உள்ள நேர்மையை - அவசியத்தை - புரிந்து கொண்டாலும் மற்றவர்கள் போல நான் இல்லாமல் எப்பவுமே சண்டைக்கோழி என்று பெயர் எடுக்கிறேன் என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.
ReplyDeleteலட்சுமணன்
எனக்கும்வாங்க சொல்லுங்க சார்.. நல்ல பதிவு:)
ReplyDeleteவாங்க லட்சுமணன் சார்!
ReplyDeleteகேள்வி கேட்பவர்களை எப்படிப்பார்த்தாலும், நாம் கவலைப்படவே வேண்டியதில்லை. அந்தப் பிரச்னையை கையாண்டபின் கிடைக்கும் நிம்மதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால்..நான் எப்போதும் கத்துவதோ, அடாவடி செய்வதோ கிடையாது. அழுத்தமாக, மிகவும் நிதானமாகப் பேசிவிடுவேன். அதில் அவர்களுக்கு பயம்தான் ஏற்படும்.
வாங்க மழை!!
ReplyDeleteமிக்க நன்றிங்க! :))
மிக நியாயமான பதிவு..
ReplyDeleteவாங்க மர்மயோகி..!!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
சுரேகா,
ReplyDeleteஏதோ ஃபுட் னு பார்த்ததும் சாப்பாட்டுக்கடைப்பதிவா இருக்கும்னு படிக்கலை. ஆனால் ஒரு உரிமைப்போரே நடத்தி இருக்கிங்க. அஞ்சா நெஞ்சர் தான்!
ஆனாலும் ஒரு சாண்ட்விட்ச் கு அவ்வளவு காசுக்கொடுத்து சாப்பிடணுமா? இந்த விலையே பெரும் கொள்ளை ஆச்சே? 150 ரூ என்பது 6 இன்ச்ல ரெண்டு பிரட் துண்டுக்கு என்பது அநியாய விலையாக உங்களுக்கு தெரியவில்லையா?(ஒரு சாண்ட்விட்ச் வாங்கி ,நீ பாதி நான் பாதினு சாப்பிடிங்கலா :-)) )
20 ரூ க்கு உரிமைப்போர் நடத்தி இந்த காச அவனுக்கு கொடுக்கணுமா அஞ்சப்பரில் ஒரு எரால் பிரியாணி திவ்யமா சாப்பிடலாம் :-))
வெஜ் தான் சாப்பிடணும்னா பேசாம சாந்தி தியேட்டர்ல் இருக்க சர்வண பவன் போய் இருக்கலாமே?
நாளு ,நாளு பேரா சேர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி எல்லாருக்கும் பரப்பி அந்த கடைப்பேர நாறடிக்கனும்,அப்போ தான் அடங்குவாங்காங்க!
//ஆமா..நானும் கம்ஃபோர்ட் ஜீன்ஸ் கிடைக்க போராடுறேன். ஆனால் 4 கடை ஏறி இறங்கினால், கிடைக்கிறது.//
நீங்க எல்லாம் குளோபஸ், லைப் ஸ்டைல்,வெஸ்ட் சைட், போன்ற கடைக்கு தான் போவிங்களோ? (அங்கும் இருக்கு ,கேட்டா கிடைக்கும்) மற்ற எல்லா கடையிலும் நார்மல் ஜீன் கிடைக்குதே? சென்னையில் தானே நானும் வாங்குகிறேன்
அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் , ரொம்ப ரீஜண்டான ஆளுனா அமைதியா எது நடந்தாலும் உணர்ச்சிவசப்படாம வேடிக்கை பார்க்கிறாதாம் :-)) அதான் நம்ம சேர,சோள,பாண்டிய குலக்கொழுந்துகள் ரீஜண்டான ஆளுங்கனு அவங்க கூட்டி வந்த புள்ளங்க முன்ன ஸீன் போடுதுங்க!
ReplyDeleteஹி...ஹி..உங்களுக்கு அப்படி ஸீன் போட்டு நடிக்க தேவை இல்லை! நான் கூட இது போல நடந்துக்கிட்டதுக்கு எனக்கு இது போல இடத்துல எல்லாம் ரீஜண்டா நடந்துக்க தெரியலைனு பேரு தான் கிடைச்சது :-))
படிக்கும் போதே நாலு பேர அடிக்கணும்ன்னு வெறியேறுதுண்ணே...கேட்டால்தான் கிடைக்கும். அருமை.
ReplyDeleteGood one.. Very true
ReplyDelete