குடும்ப அமைப்பும் கோபிநாத்தும்

சமீபத்தில் ஒரு ரோட்டரி சங்க விழாவில், விஜய் டிவியில் நீயா?நானா? நடத்தும் திரு.கோபிநாத் அவர்களை பேசக்கூப்பிட்டிருந்தார்கள்.

அவர் பேசுவதற்கு முன்..கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் :

' இவர் என்ன பேசப்போறாரு?'

'நம்மை விட்டு கேள்விகேக்கச்சொல்லி அவரை பதில் சொல்லவைக்கலாமே?'

'இந்தவாட்டி நடிகர் யாரையும் கூப்பிடலை இல்லையா? அதனால் பிரபலத்துக்காக கூப்பிட்டிருப்பாங்க!'

இவர்களுக்கெல்லாம் கேமிரா முன்னால் நின்னாத்தான் பேசவரும்..இங்க எப்படி? என்ன பேசிடப்போறாங்க!'

'டிவில நிறையதடவை டேக் வாங்கி பேசலாம். இங்க அப்படி இல்லைல்ல..! பாரு ஒரு 15 நிமிஷம் பேசிட்டு இறங்கிடுவாரு'

என்றெல்லாம் விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அவர் பேசும் நேரம் வந்தது.மேடையேறினார்...ஒப்பனை எதுவுமில்லாத சாதாரண முகம். நம்ம ஊர் வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அன்பான ஊழியரின் பாவனை.!

பேச ஆரம்பித்தார்...!

'எனக்கு நகைச்சுவையாகவோ, ஜோடனைகளுடனோ பேச வராது. மேலும் அவ்வாறு பேச நான் வரவில்லை..சில முகத்தில் அடிக்கும் நிஜங்களைக்கூறுகிறேன்.' இப்படி ஆரம்பித்து அவர் எடுத்துக்கொண்ட விஷயம்..நமது குடும்ப உறவுகள் மற்றும் அதன் மதிப்பை நாம் எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்போகிறோம் என்றுதான்.!

குடும்பம் என்ற முழுமையான அமைப்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. ஆனால் பொருளாதார ஏற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் சந்தித்தபோது குடும்பம் என்ற அமைப்பை பேணுவதில் அனைத்து தேசங்களும் தோற்றுப்போயின.!

உதாரணமாக, நம் நாட்டில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கத்தொடங்கி, கடைசியாக 5000 ரூபாய் வாங்கி ஓய்வு பெற்றவரின் மகன், தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலிலேயே 25000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறான். அப்போது அவன் அதற்கேற்றார்ப்போல் செலவு செய்ய ஆரம்பிக்கிறான். இரவு நேரம் கழித்து வீடு வருகிறான். அவனிடம் உங்கள் சம்பள கணக்குகளையோ, தாமதத்தை குற்றமாகவோ பார்த்தால் கண்டிப்பாக அந்த குடும்பப்படகில் ஓட்டை விழுவது நிச்சயம்.!

இதே போன்ற தருணத்தை சமாளிக்க முடியாமல்தான் , தலைமுறை இடைவெளியை நிரப்பமுடியாமல் எல்லா மேற்கத்திய தேசங்களும் தோற்றுப்போயின. அங்கெல்லாம் குடும்பம் என்ற அமைப்பே இல்லை.! திருமணத்திற்குப்பிறகு பெற்றோரை தன்னுடன் வைத்துக்கொள்ளும் முறையையே அவர்கள் மறந்து யுகங்களாகின்றன. சீனாவும் குடும்ப அமைப்பை பேணுவதில் தோற்றுவிட்டது.

ஒருமுறை பல்வேறு தேசங்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது...ஒரு சக பத்திரிகையாளர் திருமணத்தைப்பற்றி கேட்டபோது..எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல், அப்படியா..அவருக்கு பிடித்த பெண்ணை அவரல்லவா திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டாராம். அதற்கு இவரும், என் அப்பாவின் அப்பா பார்த்த பெண்ணைத்தான் என் அப்பா மணந்துள்ளார் என்று கூறினாராம்.

இது போன்று பல சம்பவங்களையும், நம் தேசத்தின் இன்றைய நிலையையும் உடைத்து வைத்துவிட்டு...தீர்வுக்கு வந்தார்.

நம் குடும்ப அமைப்பு சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு இன்றைய இளம் தலைமுறையிடத்தில் இல்லை..! பெரியவர்களிடத்தில் தான் உள்ளது..! மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்! எவ்வளவு தாமதமானாலும் உங்கள் வீட்டுக்குத்தானே வருகிறான். காத்திருந்து திட்டும் வழக்கத்தை கைவிடுங்கள். அவனுக்கு இருக்கும் வேலை அழுத்தத்தை புரிந்து கொள்ளுங்கள் ! ஆதரவாகப்பேசுங்கள்! இயல்பாகவே உங்கள்மேல் பாசம் அதிகமாகும். இவர்களை விட்டு போனால்தான் நிம்மதி என்ற எண்ணத்தை அவனுக்கு தூண்டுவது நமது செயல்கள்தான். ! அதை நிறுத்துங்கள்.! அன்புடன் அவனை அணுகுங்கள்! அவனுக்கு கிடைக்கும் அதிகப்படியான பணத்தை எப்படி செலவழிக்கிறான் என்று வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் மெதுவாக வழிமுறைகளைக்கூறுங்கள்.!

எல்லா நாடுகளும் இன்னும் இந்தியாவைக்கண்டு பொறாமைப்படுவது பொருளாதார வளர்ச்சிக்காகவோ., அறிவு முதிர்ச்சிக்காகவோ இல்லை.. குடும்ப அமைப்புக்காகத்தான். அதைப்பேணவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கொஞ்சம் விட்டுப்பிடிக்கப்பழகுங்கள். இல்லையேல் இந்தியாவும் குடும்ப அமைப்பை இழக்கவேண்டிய தருணம் வந்துவிடும்.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

திரு.கோபிநாத்தின் பேச்சில்...அப்படி ஒரு தமிழ்.! பிரவாகமாக பேசுகிறார். வேகமாக தமிழ் வார்த்தைகள் வந்து விழுந்து கைகொடுக்கின்றன.
வார்த்தைகளின் அழுத்தம் கொடுக்கவேண்டிய இடத்தை கணித்து வாக்கியத்தை அமைத்து, எழுதி வைத்துக்கொள்ளாமல்.. ....அழகு!
எளிமையான அணுகுமுறை.! உண்மையான தேச நலம் சார்ந்த நோக்கம் - பேச்சில் தெரிகிறது.

முதலில் இவரை சாதாரணமாக எண்ணி பேசியவர்களில் ஒருவரது முகத்தில் அப்படியொரு ஆச்சர்யமும், தெளிவும்..! கோபிநாத்தின் பேச்சை ஆர்வமில்லாமல் பார்க்க (கேட்க) ஆரம்பித்த கூட்டம், அவர் பேசி முடிந்தபின் ஏகோபித்த குரலில் சொல்லிய ஒரே வார்த்தை.!

கலக்கிட்டாருய்யா!

Comments

  1. எல்லா நாடுகளும் இன்னும் இந்தியாவைக்கண்டு பொறாமைப்படுவது பொருளாதார வளர்ச்சிக்காகவோ., அறிவு முதிர்ச்சிக்காகவோ இல்லை.. குடும்ப அமைப்புக்காகத்தான். அதைப்பேணவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கொஞ்சம் விட்டுப்பிடிக்கப்பழகுங்கள். இல்லையேல் இந்தியாவும் குடும்ப அமைப்பை இழக்கவேண்டிய தருணம் வந்துவிடும்.//

    யாரு கேப்பாக!!!!!!
    அதான் குடும்பநலக் கோர்ட்கள்ல விவாகரத்து வழக்கு குவியுதாம்ல.

    காதலிச்சு கல்யாணம் கட்டினவங்களுக்கு ஒரு பிரச்சனையின்னா, அப்பா, அம்மா பாத்து வெச்ச கல்யாணத்துல 4 பிரச்சனை. ஈகோ ஆட்டுது சாமி..

    ReplyDelete
  2. <==\ ஒரு சக பத்திரிகையாளர் திருமணத்தைப்பற்றி கேட்டபோது..எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல், ==>
    என்னிடமும் என்னுடைய கிளையண்ட்(பெண்) நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது அப்படித்தான் கேட்டார். அவர்களுக்கு அது ஆச்சரியமான விஷயம்.

    ReplyDelete
  3. yes it is very fact...naam nam kattukoppana kudumpa vazhkkaimuraiyai money pannuvathil paasathaiyum kudumpa amaippaiyum ilappathaga thonukirathu..
    ithu kaalathin kattaayamo..
    Periyavarkalum porumaiyaga anusaranaiyudan nadanthukolla vendiyathu kattayam..
    Manitharin appearance sai vaithu edaipoduvathu innum namakku irukirathu.. ethilum avasarapada koodathu enpathai ungkal article paditha pinpavathu manithanin palakka vazhakkangalai vaithu edai poda pazhagavendum
    this is very important thing where we are lacking. avasara puthi..
    Mr.Gopinaathin karuthai / anugumuraiyai anaivariyum ariyavaithamaikku paaraattu..

    ReplyDelete
  4. yes it is very fact...naam nam kattukoppana kudumpa vazhkkaimuraiyai money pannuvathil paasathaiyum kudumpa amaippaiyum ilappathaga thonukirathu..
    ithu kaalathin kattaayamo..
    Periyavarkalum porumaiyaga anusaranaiyudan nadanthukolla vendiyathu kattayam..
    Manitharin appearance sai vaithu edaipoduvathu innum namakku irukirathu.. ethilum avasarapada koodathu enpathai ungkal article paditha pinpavathu manithanin palakka vazhakkangalai vaithu edai poda pazhagavendum
    this is very important thing where we are lacking. avasara puthi..
    Mr.Gopinaathin karuthai / anugumuraiyai anaivariyum ariyavaithamaikku paaraattu..

    ReplyDelete
  5. உண்மையிலேயே கலக்கிட்டாருதான்..அதிலும் அர்த்தமில்லாமல் இளைய சமுதாயத்தையே குறை கூறி வரும் வழக்கத்தைச் சாடியிருப்பது பாராட்டத்தக்கது..

    ReplyDelete
  6. surekaa!

    romba usefullanna topic. athuvum ilaya thalaimuraikkana indraya prachinnaikku miga miga sariana thervu...
    old generation should change.. basically oruthar mela vaithu irrukkira confident and give-up kind of mental attitude only give real change.... but everybody has to accept this reality.......it is very difficult.....
    anyway oothara sangai oothuvum vidiyum varai......

    gopinath pesia vitham miga kalakkal.... yendral athai nengal eluthiza vitham:

    "kalakalo kalakkal".

    keep writing this kind of useful messages.

    romba asathiputtinga thalaiva!.....

    ReplyDelete
  7. kudumba amaipa gopinath ungalukku solli irundhalum adhukku neenga vadivum kodukkumbodhu kalakala irukku.
    Ilaiya samudhayathukkum periyavarhalum purunchukkavendia nalla thahaval kuduthirukeenga

    nandrihal

    ReplyDelete
  8. என்னாத்தை சொல்றதுன்னே தெரியலையே... என் கிணறு அவன் கிணற்றை விட பெரியதுங்கிற மாதிரியில்ல இருக்குது, இது!

    ReplyDelete
  9. புதுகைத் தென்றல் said...

    //யாரு கேப்பாக!!!!!!
    அதான் குடும்பநலக் கோர்ட்கள்ல விவாகரத்து வழக்கு குவியுதாம்ல.

    காதலிச்சு கல்யாணம் கட்டினவங்களுக்கு ஒரு பிரச்சனையின்னா, அப்பா, அம்மா பாத்து வெச்ச கல்யாணத்துல 4 பிரச்சனை. ஈகோ ஆட்டுது சாமி..//

    ஆமா அதைப்பத்தியும் கோடிட்டு காட்ட்டினாரு ! ஈகோ காரணம்கிறது கட்டாயம் உண்மைங்க!

    ReplyDelete
  10. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said

    //என்னிடமும் என்னுடைய கிளையண்ட்(பெண்) நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது அப்படித்தான் கேட்டார். அவர்களுக்கு அது ஆச்சரியமான விஷயம்.//

    அவங்க இந்த நிலையைக்கடந்துதான் வந்திருக்காங்க ன்னுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. பாச மலர் said...

    //உண்மையிலேயே கலக்கிட்டாருதான்..அதிலும் அர்த்தமில்லாமல் இளைய சமுதாயத்தையே குறை கூறி வரும் வழக்கத்தைச் சாடியிருப்பது பாராட்டத்தக்கது..//

    வாங்க ! பாசமலர்!

    ரொம்ப உணர்வுப்பூர்வமா...மனசார பேசினார். அதுதான் இவ்வளவு நாள் மனதில் நின்றது.

    ReplyDelete
  12. Anonymous said...

    //Mr.Gopinaathin karuthai / anugumuraiyai anaivariyum ariyavaithamaikku paaraattu..//

    நன்றி அனானி அவர்களே!

    ReplyDelete
  13. chinna mayil said...

    //romba usefullanna topic. athuvum ilaya thalaimuraikkana indraya prachinnaikku miga miga sariana thervu...
    old generation should change.. basically oruthar mela vaithu irrukkira confident and give-up kind of mental attitude only give real change.... but everybody has to accept this reality.......it is very difficult.....
    anyway oothara sangai oothuvum vidiyum varai......//

    சின்ன மயில் என்ற பெயரில் வந்த ம.....! அவர்களே!

    தங்கள் ரசனைக்கு நன்றி!

    ReplyDelete
  14. Thekkikattan|தெகா said...

    //என்னாத்தை சொல்றதுன்னே தெரியலையே... என் கிணறு அவன் கிணற்றை விட பெரியதுங்கிற மாதிரியில்ல இருக்குது, இது!//

    ஆமாண்ணே ஆமா! என்னா பண்றது?
    ஒருபக்கம் குடும்பத்தொல்லை..
    மறுபக்கம் தனிமைக்கொல்லை!

    ReplyDelete
  15. Anonymous said...

    //kudumba amaipa gopinath ungalukku solli irundhalum adhukku neenga vadivum kodukkumbodhu kalakala irukku.
    Ilaiya samudhayathukkum periyavarhalum purunchukkavendia nalla thahaval kuduthirukeenga

    nandrihal//

    வாங்க அனானி..அ...பாஸ்கி.!

    தங்கள் பாரட்டுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  16. //எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல்,//

    எந்த வருஷத்து ஆளு இவரு? இல்ல... எந்த வருடத்து செய்தி இது
    எவனாவது/எவளாவது இப்போ இப்படி அனுமதிப்பாங்களா?
    கிண்டலா போச்சி இவங்களுக்கு எல்லாம்....

    ReplyDelete
  17. //இந்தியாவிலதான் குடும்பம்மிங்கிற கட்டமைப்பு //

    இப்படி சொல்லுறவங்க எதன் அடிப்படைல சொல்லுறாங்க
    சும்மா சொல்லனுமின்னா... இல்ல..
    கேக்குறவன் கேணயன்னா...

    தெரியாமல்/அறியாமல் பேசுறவங்க தான் ஜாஸ்தி ஆகிட்டாங்க. உதாரணத்திற்கு இத்தாலி நாட்டவரின் கல்ச்சர் பத்தியும் படிச்சிட்டு, அவங்களோடு பழகிட்டு, அப்புறமா இப்படி பேச சொல்லுங்க. இதுபோல சொல்லிட்டே போகலாம்.

    நாம் பழம் பெருமை பேசுவதில் இருந்து விடுபடும் போது தான் எண்ணங்களில் முன்னேறுவோம். அதுவரைக்கும்....

    ReplyDelete
  18. காட்டாறு said...

    //எந்த வருஷத்து ஆளு இவரு? இல்ல... எந்த வருடத்து செய்தி இது
    எவனாவது/எவளாவது இப்போ இப்படி அனுமதிப்பாங்களா?
    கிண்டலா போச்சி இவங்களுக்கு எல்லாம்....//

    வாங்க காட்டாறு! வருகைக்கு நன்றி!

    அனேகமா சில ஆண்டுகளுக்குள்தான் ன்னு நினைக்கிறேன்.
    நிர்ணயிக்கப்பட்ட திருமணங்களைத்தான் அப்படிச்சொல்லியிருப்பார். அது இன்னும் பரவலா நம்ம சமூகத்தில் இருக்கத்தானே செய்யுது! அதான்!

    ReplyDelete
  19. காட்டாறு said...

    //இப்படி சொல்லுறவங்க எதன் அடிப்படைல சொல்லுறாங்க
    சும்மா சொல்லனுமின்னா... இல்ல..
    கேக்குறவன் கேணயன்னா...

    தெரியாமல்/அறியாமல் பேசுறவங்க தான் ஜாஸ்தி ஆகிட்டாங்க. உதாரணத்திற்கு இத்தாலி நாட்டவரின் கல்ச்சர் பத்தியும் படிச்சிட்டு, அவங்களோடு பழகிட்டு, அப்புறமா இப்படி பேச சொல்லுங்க. இதுபோல சொல்லிட்டே போகலாம்.

    நாம் பழம் பெருமை பேசுவதில் இருந்து விடுபடும் போது தான் எண்ணங்களில் முன்னேறுவோம். அதுவரைக்கும்....//

    காட்டாறு..! நீங்க சொல்றது சரிதான்.!
    இந்த பதிவு போட்டபிறகு, வலையுலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கிட்டிருந்தபோது..இதை விவாதித்தோம். பெற்றோருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள்தான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றுதான்
    அப்படி கூறியிருப்பார். மற்றபடி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு!

    ReplyDelete
  20. கோபிநாத் பற்றி...

    பார்ப்பன வழியில் "அய்யங்காராக பிறந்ததிற்கு பெருமைப்படுகிறேன்" என்று கல்லாகட்டிய பெண்ணை ஒன்றும் சொல்லாமல், கருமமே கண்ணாக "வாங்க லயன் டேட்ஸ் சாப்பிடலாம் சிறிது இடைவேளைக்கு பிறகு" என்று சொன்ன கோபிநாத்தா?

    காதல் என்றால் என்ன என்றே சொல்லாமல் சைட் அடிப்பது பற்றியும் , ஊர் சுற்றுவது பற்றியும் நிகழ்ச்சி நடத்தினார்..என்னெ சொல்ல .. மானாட மசிராட நிகழ்ச்சிகளுடன் ஒப்புடும்போது தேவல...

    **
    அதே சமயம், NASA (ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். அவர் அப்படிச் சொன்னதாக நினைவ்ய் )வில் ஒரு உரையின் போது வேட்டி கட்டிக்கொண்டு பேசினேன் என்று ஒரு நிகழ்ச்சியில் அவர் சொன்னதை பாராட்டாமல் இருக்க முடியாது

    *****

    உயர்ந்த கலாச்சாரம் நம்முது என்பது பற்றி...

    ம்..ம்... பழக்கவழக்கங்கள் என்பது வாழ்வியல் முறைகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. தான் வைத்துள்ள அளவுகோலைக் கொண்டு உலகில் உள்ள எல்லோரையும் அளக்க முயற்சிப்பது கேவலம், அறியாமை.

    மற்ற நாடுகளில் இருக்கும் ஆகச் சிறந்த பழக்கங்களைப் பட்டியலிட்டால் , நாப்கினை இன்னும் பையில் போட்டு வாங்கிச் செல்லவைக்கும் நமது கலாச்சாரத்தின் டவுசர் அதிகமாக கிழிபடும். :-))

    ஒரு சின்ன உதாரணம்:

    முதல் டேட்டிங் செல்லும் அமெரிக்க பெண் , தான் யாருடன் செல்ல விரும்புகிறாளோ அந்த நண்பனை (boy friend) முதலில் தனது வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப்படுத்த வேண்டும்.

    அந்தப் பென்ணின் அப்பா, அம்மா, அண்ணன்...அனைவரும் அறிய அவள் அந்த நண்பனுடன் டேட்டிங் செல்வாள். மலர் கொத்துடன் வீட்டிற்கு வந்து, அப்பாவின் அனுமதியுடன் அழைத்துச் செல்வான். அரோக்கியமான டேட்டிங் அது . விதி விலக்குகள் இருந்தாலும் , வீட்டிற்கு தெரியாமல் போகும் பழக்கம் இல்லை.

    அயோக்கியமான டேட்டிங் அல்ல அங்கே.

    ReplyDelete
  21. கல்வெட்டு said...


    //பார்ப்பன வழியில் "அய்யங்காராக பிறந்ததிற்கு பெருமைப்படுகிறேன்" என்று கல்லாகட்டிய பெண்ணை ஒன்றும் சொல்லாமல், கருமமே கண்ணாக "வாங்க லயன் டேட்ஸ் சாப்பிடலாம் சிறிது இடைவேளைக்கு பிறகு" என்று சொன்ன கோபிநாத்தா?//


    வாங்க கல்வெட்டு சார்!

    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

    அவர் ஒரு டிவியில் இருப்பதாலும்..ஓப்ரா வின்ப்ரே போன்று பிரபல சுதந்திரம் இல்லாததாலும் இந்திய..தமிழ் மீடியாவில் இதற்கும் மேல் வாயைத்திறக்க முடியாததாலும் இருக்கலாம்! :) முடிந்தவரை சமாதானமாகப்போக முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.


    //மற்ற நாடுகளில் இருக்கும் ஆகச் சிறந்த பழக்கங்களைப் பட்டியலிட்டால் , நாப்கினை இன்னும் பையில் போட்டு வாங்கிச் செல்லவைக்கும் நமது கலாச்சாரத்தின் டவுசர் அதிகமாக கிழிபடும். :-))//

    கண்டிப்பாக..அந்த மாதிரி பிற்போக்குத்தனங்களை மூட்டைகட்டும் காலநிலையில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை!

    //முதல் டேட்டிங் செல்லும் அமெரிக்க பெண் , தான் யாருடன் செல்ல விரும்புகிறாளோ அந்த நண்பனை (boy friend) முதலில் தனது வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப்படுத்த வேண்டும்.//

    அது....நல்ல பழக்கம்தான்.
    ஆனா அதைத்தான் இங்க பெரியவுங்களை மாறச்சொல்றார்.
    meet my parent பார்த்தேன்...கலாச்சாரம் புரிந்தது.

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...

    //:)))))))//

    என்னா சிரிப்பு!?

    ReplyDelete
  23. சுரேகா,

    நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவி பாக்குறதுக்கு கோபினாத்தும் ஒரு காரணம். நன்றாகப் பேசுகிறார். நீயா நானா பல விஷயங்களைப் பற்றி, குற்றம் சாட்டுதல் இல்லாமல் விவாதிக்கிறது. நல்ல விஷயம்!

    //எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல், அப்படியா..அவருக்கு பிடித்த பெண்ணை அவரல்லவா திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டாராம். //

    என்னையும் இப்பிடித்தான் கேட்டுட்டு ஒரு ஜந்துவப் பாக்கிற மாதிரி பாத்தாங்க. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!

    ReplyDelete
  24. தஞ்சாவூரான் said...


    //நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவி பாக்குறதுக்கு கோபினாத்தும் ஒரு காரணம். நன்றாகப் பேசுகிறார். நீயா நானா பல விஷயங்களைப் பற்றி, குற்றம் சாட்டுதல் இல்லாமல் விவாதிக்கிறது. நல்ல விஷயம்!//

    வாங்க சார்! நல்லா இருக்கீங்களா?

    ஆம்.அவர் பேச்சில், ஒரு சரளம் இருப்பதை மறுக்கமுடியாது.


    //என்னையும் இப்பிடித்தான் கேட்டுட்டு ஒரு ஜந்துவப் பாக்கிற மாதிரி பாத்தாங்க. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!//

    மிகச்சரி...எனக்கும் ஒரு பிலிப்பினோ கேட்டு அதிசயிச்சிருக்கான்.!

    ReplyDelete
  25. // தஞ்சாவூரான் said...
    அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!
    //

    நீங்களுமா? :(

    நெசமாவே நீங்க இங்கே வாழும் இந்தியரல்லாத பிற மக்களுடன் பழகியிருந்து தான் பேசுறீங்களா?

    ReplyDelete
  26. // தஞ்சாவூரான் said...
    சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! //

    அப்படியா? உங்களை மாதிரி படித்தவங்களும், பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்தவர்களும் இது மாதிரி பேசுவது வேடிக்கையாகவும், வருத்தம் தருவதாகவும் இருக்குதுங்க. உங்களுக்கு இப்படி பேசுவது பெருமையாக தெரியலாம். ஆனால் நாம் எப்படி குறுகிய வட்டத்தை விட்டு வெளி வராது, வளர்ச்சியடையாது, மேம்போக்கான எண்ணங்களோடு இருக்கோமின்னு சொல்லுது இந்த வாசகம். :-(

    ReplyDelete
  27. காட்டாறு,

    //நீங்களுமா? :(

    நெசமாவே நீங்க இங்கே வாழும் இந்தியரல்லாத பிற மக்களுடன் பழகியிருந்து தான் பேசுறீங்களா?//

    ஆமாங்க. நிறைய பேரோடு பழகி, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபிறகுதான் பேசுகிறேன். நான் சொல்றது 100% 'குடும்பங்களைப்' பற்றி இல்லை. பெரும்பாலானவங்க அப்படித்தான் இருக்காங்க. பொண்ணு டேட்டிங் போற சமயத்துல, அப்பனும் டேட்டிங் போறான். அம்மா இன்னொரு பக்கம். வயது வந்த பெண்ணுக்கோ, பையனுக்கோ அறிவுரை சொல்லி, நல் வழியில் போகச் சொல்ல ஆள் இல்லை. என்ன இருந்தாலும், அனுபவம் மாதிரி ஒரு ஆசான் உலகில் இல்லை. சுதந்திரம் சுதந்திரம்னு அத சொல்றாங்க. ஆனா, அதீத சுதந்திரம் அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவு.

    என் வீட்டுக்கு எதிர் வீடு ஒரு பைலட் - முன்னாள் மாடல் அழகி குடும்பம். அவர்கள் வீட்டில் வயது வந்த பெண் இருக்கிறாள். வீட்டிலேயேதான் பள்ளி (home school). கேட்டால், பள்ளி சென்றால் பிள்ளைகள் கெட்டுவிடும்னு சொல்றாங்க.

    பக்கத்து வீடு: 35 வருட இல்வாழ்க்கை நடத்தி விட்டு, கணவன் இன்னொரு பெண்ணோடு! மனைவிக்கும், ஓரிரு மாதங்களில் ஒரு ஆண். வயது வந்த பெண் அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் குடி கும்மாளம்(வீட்டிலேயே). ஒரே சத்தம் கேட்கும். அந்த அம்மா ஒரு நாள் வந்து ஓவென்று அழுகை, தங்கமணியிடம். இவ்வளவு நாள் எப்படி குடும்பம் நடத்திவிட்டு, இப்பிடி போய்ட்டான் என்று. கொஞ்ச நாள் மாத்திரையில் வாசம்.

    வேலையிடத்தில், என் டீம் மெம்பெர் பையனுக்கு குழந்தை பிறந்தது. பையன், நான்தான் அப்பன் என்று என்ன நிச்சயம்? DNA test செய்யனும்னு கேட்கிறான். குழந்தையைக் கூடப் பார்க்க வரவில்லை. அதே அம்மாவின் பெண்னுக்கும் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு வந்திருந்தார்கள். கனவன் பிரிந்து விட்டான். குழந்தை பிறப்புக்குக் கூட வரவில்லை.

    என்னுடைய திருமண படங்களைப் பார்த்து விட்டு, இந்தியாவுக்குப் போயே தீரவேண்டுமென்று ஒரே அடம்! பெற்றோர் பார்த்து செய்த திருமணம் - அவர்களுக்கு ஆச்சரியம். இவ்வளவு நாள் கூட வாழ்வது - அவர்களுக்கு ஆச்சரியம். இது வரை ஒரே கல்யாணம்தான் - அவர்களுக்கு ஆச்சரியம்.

    மேலே சொன்ன எல்லாருமே அமெரிக்கர்கள்தான் (வெள்ளை + கறுப்பு).

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய உண்டு. வாராவாரம் பிள்ளைகளை கிளாசுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே குடும்ப முறையாகாது. வானொலி கேப்பீங்களா? வாரத்துக்கு ஒரு முறையாவது ஒன்றாக குடும்பத்துடன் சாப்பிடச் சொல்லிப் பிரச்சாரம் நடக்கிறது.

    இதெல்லாம் பாக்கும்போது, நம்மூரு எவ்வளவோ தேவலைதான்! அதுக்காக, நம்மூரில் எல்லாம் ஞாயம்னு சொல்லவரலை.

    வெளிநாட்டுக்காரன் நம்மை மாதிரி குடும்ப முறைக்கு வர ஏங்குகிறான். நாம் அவர்கள் போல் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு அவன் அழிந்த பாதைக்குப் போய்கொண்டிருக்கிறோம். என்ன செய்வது?

    சுரேகா, நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும் :)

    ReplyDelete
  28. மறுபடி காட்டாறு:

    //அப்படியா? உங்களை மாதிரி படித்தவங்களும், பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்தவர்களும் இது மாதிரி பேசுவது வேடிக்கையாகவும், வருத்தம் தருவதாகவும் இருக்குதுங்க. உங்களுக்கு இப்படி பேசுவது பெருமையாக தெரியலாம். ஆனால் நாம் எப்படி குறுகிய வட்டத்தை விட்டு வெளி வராது, வளர்ச்சியடையாது, மேம்போக்கான எண்ணங்களோடு இருக்கோமின்னு சொல்லுது இந்த வாசகம். :-(//

    இப்படி பேசுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது? அவர்கள் ஆச்சரியப்பட்டதச் சொன்னேன். இப்பிடி ஒரு துணையோடு இருப்பது குறுகிய வட்டம்னா, எனக்குப் பிடிச்சிருக்குங்க!

    'வளர்ச்சியடையாது'ன்னு எதச் சொல்றீங்க? ஒரெ கல்யாணம் கட்டிகிட்டு ஒரே பொண்டாட்டியோட வாழுறதா? இல்ல, டேட்டிங்/சுதந்திரம் என்கிற பேரில் நடக்குற கூத்துகளத் தப்புன்னு சொல்றதா?

    இப்பிடியெல்லாம் சொன்னா, குறுகிய வட்டம், பெருகிய சதுரம், பழமைவாதி, MCP, இன்னும் பல பேர் சொல்லுவீங்க :)
    என்னைப் பொறுத்தவரை, என் பெண்ணுக்கு முழு சுதந்திரம் உண்டு. சுதந்திரம் என்றால் என்ன எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று சரியாகப் புரியும் வரை :)

    ReplyDelete
  29. காட்டாறு, தஞ்சாவூரான்..

    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ஒரு ஆரோக்கியமான விவாதம் சென்று கொண்டிருப்பதை வரவேற்கிறேன்.

    இதில் பின்னூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை!
    :)

    ReplyDelete
  30. சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் போக முடியவில்லை. கோபி நல்லா பேசி இருக்கார். எங்களோட இதை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சுரேகா.

    ஆனால் கோபி நீயா நானாவில சில சமயம் செமத்தியாக சொதப்புகிறார். உடற்பயிற்சியின் அவசியத்தை பற்றிய விவாதத்தில் கட்டுமஸ்தான உடல் கொண்டவர்களை உடற்பயிற்சி செய்பவர்களின் பிரதிநிதியாக முன்னிருத்தியது ஒரு உதாரணம். ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்ச்சி செய்பவர்களை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அதில்.

    ReplyDelete
  31. // தஞ்சாவூரான் said...
    சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! //

    ஆனா எப்படி பார்த்தாலும் தஞ்சாவூரான் சொல்லறது ரொம்ப ஓவர் டூபாக்கூர்தான். சிங்கப்பூர் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் திருமணம் செய்யாதவர் எண்ணிக்கை மைனாரிட்டி ஆகிவிட்டபோதும் அமெரிக்காவில் கணிசமான குடும்பஸ்தர்கள் உண்டு(மணமான பெண்கள் 49%,http://www.nytimes.com/2007/01/16/us/16census.html) இதனால் திருமணமாகிவிட்டது என்றால் ஷாக்கிங் நியூஸ் அல்லாம் இல்லை அவர்களுக்கு!

    மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும் சிலர் சீனர் மற்றும் அமெரிக்கரைப் பார்த்துக் கேட்கும் கேணத்தனமான கேள்வி ''உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜா இல்லை லவ் மேரேஜா?"

    ReplyDelete
  32. கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும் அருமை,
    பகிர்விற்கு மிக்க நன்றி சுரேகா!

    ReplyDelete
  33. SanJai said...

    //சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் போக முடியவில்லை. கோபி நல்லா பேசி இருக்கார். எங்களோட இதை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சுரேகா.//

    வாங்க!
    இந்த நிகழ்ச்சி திருச்சி சங்கம் ஹோட்டலில் நடந்தது. நிறைய பேர் குடும்பமாக வந்திருந்தனர்.

    ReplyDelete
  34. Divya said...

    //கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும் அருமை,
    பகிர்விற்கு மிக்க நன்றி சுரேகா!//

    நன்றி திவ்யா!

    அடிக்கடி வாங்க!

    ReplyDelete
  35. நந்தவனத்து ஆண்டி said...

    //இதனால் திருமணமாகிவிட்டது என்றால் ஷாக்கிங் நியூஸ் அல்லாம் இல்லை அவர்களுக்கு!//

    வாங்க நந்தவனத்து ஆண்டி சார்!

    வருகைக்கு நன்றி!

    ஒரு முறை மட்டுமே திருமணமாகிவிட்டது என்பதைத்தான் ஆச்சர்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

    ReplyDelete
  36. //ஒரு முறை மட்டுமே திருமணமாகிவிட்டது என்பதைத்தான் ஆச்சர்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.//

    அப்படி எனில் மன்னிக்கவும்.அவர் சொல்வது சரிதான். அருகில் இருந்த சர்சுக்கு ஒரு தடவை போயிருந்த போது, ஒரு பாதிரியாரை 15-20 நிமிடம் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். அவரது ஒரே சாதனை " ஒரே மனைவியுடன் 30 வருஷம் குடித்தனம்" நடத்தியதுதான்!... மொக்கை தாங்கவில்லை!

    ReplyDelete
  37. நந்தவனத்து ஆண்டி,

    நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு ஒண்ணும் புரியலே :)

    நான் சொன்னது, 'அமெரிக்காவில் இந்த வயதில் நான் ஒரு கல்யாணம்தான் இது வரை பண்ணியிருக்கிறேன்' ன்னு சொன்னா அது ஆச்சரியப்படத்தக்க விஷயம். கல்யாணம் பண்ணிக்கொள்வதே ஆச்சரியப் படத்தக்க விஷயம்னு அவங்க சொல்றதா, நான் சொல்லவே இல்லை. என் பதில நல்லா கொஞ்சம் படிங்க!

    பொதுவா, அமெரிக்கர்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

    ReplyDelete
  38. கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))

    ReplyDelete
  39. வாங்க சென்ஷி..

    //கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))//

    ஆமா..ஆனா கோபிநாத்துன்னு பேர் வைக்காதவுங்க அதி புத்திசாலியா இருப்பாங்களாம்..

    எப்புடி?? :)

    ReplyDelete
  40. //சுரேகா.. said...
    வாங்க சென்ஷி..

    //கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))//

    ஆமா..ஆனா கோபிநாத்துன்னு பேர் வைக்காதவுங்க அதி புத்திசாலியா இருப்பாங்களாம்..

    எப்புடி?? :)//

    ஹி...ஹி... நல்ல வேளை.. என் பேரு கோபிநாத் இல்ல.

    (இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது :)) )

    ReplyDelete
  41. சென்ஷி said...

    //இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது
    எந்த கோபிநாத்..? //

    வாங்க செனஷி..!

    இந்த பதிவு நாயகன் கோபிநாத்தை உங்களுக்கு தெரியுமா?

    ஆஹா..!
    அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாரே!

    ReplyDelete
  42. // சுரேகா.. said...
    சென்ஷி said...

    //இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது
    எந்த கோபிநாத்..? //

    வாங்க செனஷி..!

    இந்த பதிவு நாயகன் கோபிநாத்தை உங்களுக்கு தெரியுமா?

    ஆஹா..!
    அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாரே!//

    இந்த பதிவு நாயகன் கோபிநாத் அ எனக்கு தெரியாது.

    ஆனா பின்னூட்ட நாயகன் கோபிநாத்த தெரியும்... :))

    உங்களுக்கும் தெரியணும்னா இங்க போய் பாருங்க..
    http://gopinath-walker.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !