பொத்தான் வாழ்க்கை!
என் தாத்தா
பிறக்கும்போது
அனேகமாய் அவருக்கு
பொத்தான்கள்
பழகியிருக்காது.
அதிகபட்சமாய்
அரை நூற்றாண்டில்
விளக்குக்கும்
காற்றுக்கும்தான்
அதிகப்பொத்தான்கள்
அழுத்தியிருப்பார்!
என் அப்பாவுக்கு
கொஞ்சம் அதிக
பொத்தான் வாசம்!
அலுவலகம் சென்று
அழைப்புமணி
அழுத்தவும்
கணக்குகள் போட
கால்குலேட்டர்
அழுத்தவும்
பொத்தான்கள்
அவருக்கு
புதிதாகக் கிடைத்தன!
என் வாழ்வின்
ஆரம்பம்
அப்பாவின்
உபயோகம் போக
ரிமோட் என்றொரு
இன்னொரு
பொத்தான் மூட்டை
வந்து வாழ்வில்
பொத்தான்களை
அதிகமாக்கிப்
போனது.
போகப்போக
பொத்தான்களின்
ஆக்கிரமிப்பில்
திணறித்தான்
போனேன்.
அதிகாலை எழுந்தவுடன்
அலாரம் அணைக்கவும்
இட்லிக்கு சட்னியை
இதமாக அரைக்கவும்
அலுவலக மாடிக்கு
அவசரமாய்ச் செல்லவும்,
உள்ளே அழைப்பதை
இங்கிதமாய்ச் சொல்லவும்,
நாடுதாண்டி வாழும்
நண்பனிடம்
நடந்து கொண்டே
பேசவும்
வேலைகள்
அனைத்தையும்
விரைவாக முடிக்கவும்,
முன்னிருக்கும்
திரையில் என்னை
முழுமையாய்த்
தொலைக்கவும்
கூடி நிற்கும்
கூட்டத்துக்கு
கொள்கை விளக்கம்
சொல்லவும்
குடிக்கும் பானத்தை
தேர்ந்தெடுத்து
அருந்தவும்
மதிய சாப்பாட்டை
சூடுபடுத்தி
மனம் மகிழ உண்ணவும்
மாலை நேர
சந்தோஷத்தை
மாற்றி மாற்றி
ரசிக்கவும்
விரும்பிய
இசையெடுத்து
விருந்தாகப்
படைக்கவும்
ரசித்த
திரைப்ப்டத்தை
நிற்க வைத்து
பார்க்கவும்
அழுக்கேறிய துணிகளை
அழகாகத் துவைக்கவும்
தட்ப வெப்ப காலத்தை
வெளியிலேயே விட்டுவிட்டு
வீட்டுக்குள் வெப்பத்தை
தேர்ந்தெடுத்து
வாழவும்
இறந்து போன
உடலனுப்பி
சாம்பல் பொட்டலம்
வாங்கவும் என...
எங்கெங்கும்
பொத்தான்கள்!
பொத்தான்களுக்கான
சாத்தியங்கள்
போகப்போக
விரியும் போல..
புதிய பொத்தான்கள்
பழகப்பழக
யுக சகமாய்
ஆக வாய்ப்பு
அதிகமாய்
வந்து சேரும்.!
என் மகனும்
பிறந்தவுடன்
சொல்லிக்கொடுக்கும்
தேவையின்றி
பொத்தான் அழுத்த
பழகிவிட்டான்.!
இதோ
இந்தக்கவிதை கூட
எழுதியது
பொத்தான் தான்.!
இன்றும்
என் கனவில்
எப்படியாவது
வந்துவிடும்
ஏதாவது
ஒரு பொத்தான்.!
டிஸ்கி:
இன்று அதிகாலை...ஒரு கனவு!
16 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன என் தாத்தா, என் செல்போனையும், மடிக்கணிணியும் பார்த்துவிட்டு, என்னடா...வெறும் பட்டன் பட்டனா இருக்கு..! இதோடதான் வாழ்ந்துக்கிட்டிருக்கீங்களா? என்றார்.
அதிலிருந்து மீளும் முன்...இந்தப்பதிவு!
நான் மாண்டிசோரி பள்ளியில் பணியாற்றியபோது ஒரு மாணவன், 10க்கு மேல் எழுதவே மாட்டான்.
ReplyDeleteஏன் கண்ணா, உனக்கு அதற்கு மேல் கற்றுக்கொள்ள வேண்டாமான்னு கேட்டதுக்கு சொன்னபதில் இது.
" கால்குலேட்டர், போன் எல்லாவற்றிலும் 9 நம்பர் வரைக்கும் தானே இருக்கு. 0 - 9 நம்பர் தெரிஞ்சா போதும் மிஸ்", என்றான்.
வாழ்க்கைக்கு இத்தனைப் பொத்தான் போதும் என்று அந்த பிஞ்சுமனதிலும் பதிந்து விட்டதை உங்களின் பொத்தான் வாழ்க்கை ஞாபக படுத்தியது.
நீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான் :))
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
ReplyDelete//வாழ்க்கைக்கு இத்தனைப் பொத்தான் போதும் என்று அந்த பிஞ்சுமனதிலும் பதிந்து விட்டதை உங்களின் பொத்தான் வாழ்க்கை ஞாபக படுத்தியது.//
வாங்க...முதல்ல நீங்கதான்..!
ஆமாங்க..எல்லாருமே பொத்தானுக்கு அடிமையாய் ஆகிட்டோம்..அது திடீர்ன்னு உறைக்கவும், அவசரமா எழுதினது இது!
குசும்பன் said...
ReplyDelete//நீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான் :))//
வாங்கப்பு!
அது சரி.. கவிதை பிடிக்காதுன்னு சொல்லி 24 மணிநேரத்துல கவிதை சொல்ற எனிமியை பாத்திருக்கீங்களா?
எப்புடி? :))))
pothangalin varnanai arumai.
ReplyDeleteAthanaipatriyum nam thatha kalathil irundhu ikkalam varai ethanai matrangal nihalndhullandhu enbathai ungal varaihalil rasikka aasaiyai irukku.
please da kanna.
நல்லாருக்கே
ReplyDelete<==
குசும்பன் said...
நீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான்
==>
பேருக்குத்தகுந்த மாதிரி நல்ல "குசும்பரீ"ங்க.
பொத்தான்
ReplyDeleteintu nam vazhkkai muraiyil பொத்தான்illaamal ontum illai entagivittathu...
athuvum press panniyavudan nam ethirpaarthathu udanae varavanedum enta paraparappu vaera..
nalla sonneenga.. elloraiyum ada aaama entu yosikka vaithu viteenga.
பொத்தான்yaetho work nadakirathu entru illamal பொத்தான்nall vilamparam thedi koduthuviteenga .ini பொத்தான் nai paarthaal ungal kavithai gnapakamthaan varum..
enakku payamaga irukirathu..intu en kanavil பொத்தான் kal vanthu payamurutthumo entu..b
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDelete//நல்லாருக்கே//
நன்றி சிவா சார்!
Anonymous said...
ReplyDeleteபொத்தான்
//intu nam vazhkkai muraiyil பொத்தான்illaamal ontum illai entagivittathu...
athuvum press panniyavudan nam ethirpaarthathu udanae varavanedum enta paraparappu vaera..//
ஆமாங்க..அந்த அவசரத்தை இங்கு நேரடியாகப்பதியவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில்...சொல்லிடுவோம்.
நன்றி வி.பா. சார்.!
ஸ்ஸப்பாஆஆஆ இத்தனை பொத்தானா!!
ReplyDeleteபொத்தானின்றி அணுவும் அசையாது இனிமேல!!
மங்களூர் சிவா said...
ReplyDelete//ஸ்ஸப்பாஆஆஆ இத்தனை பொத்தானா!!//
வாங்கப்பூ :)))))))
//பொத்தானின்றி அணுவும் அசையாது இனிமேல!! //
ஆமாங்க!
வாங்க பாக்ஸ்........நீங்க என்ன சொல்லவரீங்கன்னே புரியலை..!
ReplyDeleteஅதனால் உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க முடியவில்லை!
விளையாட்டுக்களம் இதுவல்ல என்று நினைக்கிறேன் . நன்றி!
பொத்தான் உலகம் குறித்து நல்ல கவிதை. அழுத்தும் பொத்தானில் அலைக்கழிகிறது உலகம்.
ReplyDeletearumaiyaana kavithai
ReplyDelete