திருவிழான்னு வந்தா....!

இன்று ஊருக்குப்பக்கத்தில் ஒரு கிராமத்திருவிழா.!
எப்பவும்போல, கேமிராவுடன் போனதால் சிக்கிய
காட்சிகள் இவை!

 


கிளி எடுத்துத்தரும்
சீட்டைப்பாத்து
கிழவி குரலில்
டேப் ரெக்கார்டர்
பலன் சொல்ல,
வண்டியை போத்தியிருக்கும்
வாசகங்கள்
சிரிப்பை வரவழைக்க
பக்கத்துக்கடைக்காரர்
பீட்டர் இங்க்லாண்ட்
வாடிக்கையாளரை எதிர்பார்த்து..!
(அவரிடம் ஒரு சட்டை வாங்கினேன்)




 

திடீர்க்கடைகளில்
திடீர் பக்தியும், திடீர் படிப்பும்..
சிறந்த நெட்வொர்க்கும்!
(இளையராஜா பாடல்கள் வாங்கினேன்)

 




இந்த கோபுரங்களுக்குப்பின்னே
எத்தனை
கடன்கள்,
கவலைகள்,
எதிர்பார்ப்புகள்!
கோபுரங்கள்
அழிந்தால்தான்
வீட்டில்
மகிழ்ச்சி வரும்.
(சீனிக்காராச்சேவு வாங்கினேன்)


சத்தியமாய் எனக்காக இல்லை!

 வாழ்க்கை மீதுள்ள  இவர்களது
நம்பிக்கைக்காக!


Comments

  1. எங்க ஊர்ல இந்த மாதிரி திருவிழாவை ஜாத்திரைன்னு சொல்லுவாங்க

    ReplyDelete
  2. கடை கண்ணி எல்லாம் அந்த டைம்ல தான் வரும் 1 மாசம் இருக்கும்.

    ReplyDelete
  3. முழுஆண்டு தேர்வு ஆரம்பிக்கும் சமயம் வந்து லீவு முடியும் வரை இருக்கும்.

    ReplyDelete
  4. எங்க பள்ளிகூடத்துக்கு மிக அருகிலேயே காளியம்மன் கோவில் நிலம் அதில்தான் கடை எல்லாம் போடுவார்கள்.

    ஒரு ரவுண்டு அடிச்சிட்டுதான் போய் பரிச்சையே எழுதுவோம்.

    ReplyDelete
  5. இப்ப எல்லாம் சிட்டி ஃலைப். எந்த தெருல போனாலும் சந்தையவிட கூட்டம், நெரிசல்

    ReplyDelete
  6. சக்கரை மிட்டாய் அந்த திருவிழாவின் ஸ்பெசல். அதை வேறு எங்கும் பார்த்ததில்லை. :(

    ReplyDelete
  7. ஹய்யோ நம்மூர் திருவிழாவாடா?? கருப்பையா கோவிலா??

    ReplyDelete
  8. மங்களூர் சிவா said...

    //மீ தி பர்ஸ்ட்டு//

    வாங்கப்பூ!

    ReplyDelete
  9. நல்லா எஞ்சாய் பண்ணுடா மகனே... :)) எனக்காக சேர்த்து ஒரு அரை கிலோ பூந்தி வாங்கினாயா இல்லையா?


    பொறவு லொகேஷன், நேரமெல்லாம் போடுறதில்லையா?

    அசத்தலா இருக்கு ஒரு கிராமத்தின் மணமும் உன்னுடைய வரிகளிலும்...நம்பிக்கை தானே வாழ்க்கை...

    ReplyDelete
  10. Thekkikattan|தெகா said...

    //ஹய்யோ நம்மூர் திருவிழாவாடா?? கருப்பையா கோவிலா??//

    இல்லண்ணா..அது...நார்த்தாமலை..!
    நம்ம ஊர்ல மே மாசம்தான் வரும்!

    ReplyDelete
  11. மங்களூர் சிவா said...

    //இப்ப எல்லாம் சிட்டி ஃலைப். எந்த தெருல போனாலும் சந்தையவிட கூட்டம், நெரிசல்//

    ஆமா...தினம்தினம்- கொண்டாடாத திருவிழா.!

    ReplyDelete
  12. சுரேகா: எல்லாம் உங்களுக்காகத்தான்.
    கொண்டாட்டங்களுக்குப்பின்னால எவ்வளவு வலி இருக்குன்னு பாருங்க

    தெகா: உண்மையிலே மகிழ்ச்சியா இருக்கு அந்தப் போட்டோஸ் பார்க்கும் பொழுது...

    உண்மைதான்... ஆனா, அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர்ப்பார்க்கிற வாழ்க்கையா ஆகிப்போச்சி
    இல்லையா?

    அப்படியே ஒரு வருஷம் தவறிப் போனாலும் ஏதோ ஒரு டிஷ்-ஷார்டர் வந்த நிலையில் மன பிறழ்வுற்றுப் போய் விடுவோம்தானே... எனவே அந்த கஷ்டத்திலும் ஒரு சந்தோஷம் :).

    ReplyDelete
  13. ///வாழ்க்கை மீதுள்ள இவர்களது
    நம்பிக்கைக்காக!///

    ரொம்ப பீல் பண்ண வச்சுட்டீங்களே?

    ReplyDelete
  14. கோபுரங்களின் பதிவும் அதற்கான வரிகளும் நல்லா இருக்கு. ம்ஹீம் உலகம் அப்படித்தான்.

    மங்களூர் சிவா!!! இன்னா இது. இத்தனை பின்னூட்டங்கள். கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...பக்கத்தில் இரண்டாமிடத்தில் 146 பின்னூட்டங்களோட நிக்குறீங்கள். அதில முதலாமிடத்த பிடிக்குறதுக்கான் முயற்சிதான இது.. உண்மையை சொல்லுங்க எல்லாத்தையும் ஒரே பின்னூட்டத்துல் போடாம இப்பிடி பிரிச்சி பிரிச்சி போடுறதுக்கான் காரணம் அதுதான். இங்க மட்டுமல்ல நா பல இடத்துல் பாத்திருக்கிறன்.
    ஏறத்தாழ 25 இடுகைகளுக்கு பின்னூட்டமிட்டே 146 பின்னூட்டங்களைச் சம்பாதிச்சிட்டீங்க. ம்ம்ம்..Get 1st place soon. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நிஜமா நல்லவன் said...



    //ரொம்ப பீல் பண்ண வச்சுட்டீங்களே?//

    வாங்க!
    நானும் ரொம்ப பீல் பண்ணித்தான் எழுதினேன் தலைவா!

    ReplyDelete
  16. நானும்கூட கருப்பையாவுக்குத்தான் வேலு ஸ்வீட் ஸ்டால் கோபுரம் கட்டியிருக்காங்களோன்னு நெனச்சேன்!

    ReplyDelete
  17. நல்லா இருக்கு :)

    இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே?

    ReplyDelete
  18. முட்டாய்க்கடைதான் அப்படியே மனசை அள்ளிக்கிட்டுப் போகுது.
    நானே ஒரு இனிப்புப் பிசாசு.

    'என் மேலே சக்கரையைத் தூவிட்டா என்னையே பிச்சுத் தின்னுருவா'

    இது எங்க அம்மாவின் அருள்வாக்கு.


    படங்கள் எல்லாம் அருமை.

    யாவாரம் ஆனாத்தானே அவுங்க வூட்டுலே அடுப்பெரியும்.

    அதான் வாங்கியே தீர்த்துறணும்:-)))

    ReplyDelete
  19. இந்த கோபுரங்களுக்குப்பின்னே
    எத்தனை
    கடன்கள்,
    கவலைகள்,
    எதிர்பார்ப்புகள்!
    கோபுரங்கள்
    அழிந்தால்தான்
    வீட்டில்
    மகிழ்ச்சி வரும்.
    highlights
    nijam.. intha maathiri chinna chinna viyaparikalai paarkkum pothu manathai pizhiyum - ivarkalukku nalla viyaparam nadakattum entu iyarkkaiyai vendikolven.. ethanai peridam naam vaanga mudiyum..silapaeridam mattumae - nanbarae avarkalidam vaangi avarkalukku nambikkaiyai ootiya ungalukku manamaarntha vazhthukal - vb

    ReplyDelete
  20. சுந்தரவடிவேல் said...

    //நானும்கூட கருப்பையாவுக்குத்தான் வேலு ஸ்வீட் ஸ்டால் கோபுரம் கட்டியிருக்காங்களோன்னு நெனச்சேன்!//

    வாங்க !
    அதையும் கண்டிப்பா பதிவு செஞ்சுருவோம் அண்ணா!!

    ReplyDelete
  21. தஞ்சாவூரான் said...

    //நல்லா இருக்கு :)

    இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே?//

    நன்றிங்க்ண்ணா!

    4 படத்துக்கு மேல போட்டா மக்களுக்கு போர் அடிச்சு மேல்புற வலது மூலைல இருக்குற பெருக்கல் குறியை அமுக்கிருவாங்களோன்னு ஒரு கிலிதான்! :)

    ReplyDelete
  22. சுரேகா.. said...
    /////நிஜமா நல்லவன் said...



    //ரொம்ப பீல் பண்ண வச்சுட்டீங்களே?//

    வாங்க!
    நானும் ரொம்ப பீல் பண்ணித்தான் எழுதினேன் தலைவா!/////


    என்னது தலைவா???????

    ReplyDelete
  23. ///கௌபாய்மது said...
    மங்களூர் சிவா!!! இன்னா இது. இத்தனை பின்னூட்டங்கள். கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...பக்கத்தில் இரண்டாமிடத்தில் 146 பின்னூட்டங்களோட நிக்குறீங்கள். அதில முதலாமிடத்த பிடிக்குறதுக்கான் முயற்சிதான இது.. உண்மையை சொல்லுங்க எல்லாத்தையும் ஒரே பின்னூட்டத்துல் போடாம இப்பிடி பிரிச்சி பிரிச்சி போடுறதுக்கான் காரணம் அதுதான். இங்க மட்டுமல்ல நா பல இடத்துல் பாத்திருக்கிறன்.
    ஏறத்தாழ 25 இடுகைகளுக்கு பின்னூட்டமிட்டே 146 பின்னூட்டங்களைச் சம்பாதிச்சிட்டீங்க. ம்ம்ம்..Get 1st place soon. வாழ்த்துக்கள்////


    மங்கலூறு உன்னோட அருமை பெருமைய புட்டு புட்டு வச்சிட்டாங்கப்ப. அப்படியே இங்க வந்து பார்த்துட்டு போங்க மங்கலூறார் புகழை.
    http://kummionly.blogspot.com/2008/04/blog-post_2388.html

    ReplyDelete
  24. //சத்தியமாய் எனக்காக இல்லை!

    வாழ்க்கை மீதுள்ள இவர்களது
    நம்பிக்கைக்காக//

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. ////ரூபஸ் said...

    //சத்தியமாய் எனக்காக இல்லை!

    வாழ்க்கை மீதுள்ள இவர்களது
    நம்பிக்கைக்காக//

    வாழ்த்துக்கள்..////


    ரூபஸ், சுரேகா அநியாயத்துக்கு நல்லவரு. அப்பப்ப வந்து வாழ்த்திட்டு போங்க. நானும் ஒரு 'வாழ்த்துக்கள்' போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  26. ///மங்களூர் சிவா said...
    எங்க ஊர்ல இந்த மாதிரி திருவிழாவை ஜாத்திரைன்னு சொல்லுவாங்க///


    சிவா நீ நடந்தாலே ஒரு ஜாத்திரை தான்!!!!

    ReplyDelete
  27. வாவ்...அருமையா இருக்கு...முட்டாய் கடை தான் ஹைலைட்...ம்ம்ம் எங்க இருந்தாலும் இதுல கிடைக்குற மகிழ்ச்சி எதிலேயும் வராது

    ReplyDelete
  28. மங்கை said...

    //வாவ்...அருமையா இருக்கு...முட்டாய் கடை தான் ஹைலைட்...ம்ம்ம் எங்க இருந்தாலும் இதுல கிடைக்குற மகிழ்ச்சி எதிலேயும் வராது//

    வாங்க..!

    ஆமாங்க மனிதக்கூட்டத்தை பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்.

    ReplyDelete
  29. ரூபஸ் said...


    //வாழ்த்துக்கள்..//

    வாங்க...நன்றிங்க!

    ReplyDelete
  30. hi thanks for your support.. but still the link is not working.. image only is there.. so please check it.. if you cant give link to the image then please give the text link like that..

    short film wesbite
    www.thamizhstudio.com

    thanks once again.
    thamizhstudio.com

    ReplyDelete
  31. வாவ் சுரேகா! அந்த மிட்டாய் க்டையும் வண்ணங்களையும் முன்னரே வந்து ரசித்திருக்கிறேன்..பின்னூட்டங்களிட்டதில்லை!

    நன்று!! படங்களும் அதற்கேற்ற வரிகளும்!!

    //கோபுரங்கள்
    அழிந்தால்தான்
    வீட்டில்
    மகிழ்ச்சி வரும்.//

    :-) மகிழ்ச்சி என்றென்றும் தங்கட்டும்..வாழ்விலும், உள்ளங்களிலும்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!