தெய்வத் தொழிலாளி - பாகம் 2
நான் அவரை ஒரு நெற்றிச்சுருக்கலுடன் பார்த்தேன். (முதல் பாகம் இங்கே)
'என் பேரு சண்முகம் சார் ! எதுத்தாப்புல தெரியுற இடத்தைப்பாத்தீங்களா?'
'எதைச்சொல்றீங்க?'
'எதிர்க்கடைக்குப்பக்கத்துல ஒரு இடைவெளி தெரியுதே?'
'ஆமா!'
'அதுதான் சார் 10 நாள் முன்னாடி வரைக்கும் என் கடை!'
நான் எழுந்து நின்று பார்த்தபோது அந்த இடம் முழுமையாகத்தெரிந்தது. சாலையின் அந்தப்பக்கம் தீயினால் எரிந்த ஒரு இடம். பலப்பல குழாய்களும் அடையாளம் காணமுடியாத பொருட்களும் கருகிப்போய் குவிக்கப்பட்டிருந்தன.
'அதுதான் வடிவேலன் உணவகம்! வாசல்ல டீ ஸ்டால்! உள்ள டிபன் கடை! அன்னிக்கு காலங்காத்தால மண்ணெண்ணை ஸ்டவ்வை பத்தவச்சுட்டு பால சுடட்டுமேன்னு வெளில வந்தேன். என்ன ஆனதுன்னே தெரியலை! ஒரு நிமிஷத்தில் ஸ்டவ் வெடிச்சு, வாசல் கூரையில் நெருப்பு பிடிச்சுக்கிச்சு! என்னால உள்ள போய் ஒரு சாமானைக்கூட எடுக்க முடியலை! உள்ளதான் கிரைண்டர் , மிக்ஸி, டேபிள் , சேர்ன்னு எல்லாம் சேத்து கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு பொருள் ! கொஞ்ச நேரத்தில் எல்லாமே நாசமாப்போச்சு சார்! 20 வருஷமா வச்சிருந்த கடை சார்.! அதை வச்சுத்தான் என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்சார்!'
'வருத்தப்படாதீங்க முதலாளி! இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடலை! இதுவும் உங்க கடைதான்!' என்று ஆறுதலாகச்சொன்னார். - கல்லாப்பெட்டியில் இருந்தவர்
அதெல்லாம் ஒண்ணுமில்ல குமரா ! என்னமோ சாரிடம் சொல்லணும் போல் இருந்துச்சு! சொல்றேன் அவ்வளவுதான்! கடை எரிஞ்சப்பதான் சார், நல்லவன் எவன் கெட்டவன் எவன் நண்பன் எவன், நண்பன் மாதிரி நடிச்சவன் எவன்னு தெரிஞ்சுக்கிட்டேன். கடை எரிஞ்சுருச்சுன்னு முதல்ல என் மகனை விட்டு தகவல் சொல்லச்சொன்னது நான் உயிர் நண்பன்னு நெனச்சுக்கிட்டிருந்த ஒரு கேடுகெட்டவன்கிட்டதான்.! ஆனா அவன் இன்னிக்கு வரைக்கும் வந்து, என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கேக்கலை! எல்லாம் நான் ஏதாவது பண உதவி கேட்டுருவேனோன்னு பயந்துட்டானுங்க!
வருத்தப்படாதீங்க! இதெல்லாம் ஒரு சோதனைதான்! நீங்க தோத்துப்போயிட்டதா அர்த்தம் கிடையாது. இதைவிட பெரிய ஆளா வருவீங்க பாருங்க!
என்று நான் சொல்ல,
'இதான் சார்! இந்த மாதிரி ஆறுதல் வார்த்தைகளைத்தான் சார் நான் எதிர்பாத்து ஏங்கினேன். ஆனா ஒருத்தனும் பக்கத்துல வரலை! இதோ இருக்காப்புலயே குமரன்.! இவர் நம்மகிட்ட ஏழு வருஷம் வேலை பாத்தாரு! அப்புறம் கடந்த 2 வருஷமா சொந்தக்கடை வச்சுட்டாரு. எனக்கு இவர் மேல கொள்ளை வருத்தம். என்னடா கடைய விட்டுட்டு போய்ட்டானே! மேலும் என் கடைக்கு எதிரிலேயே கடையை வச்சிருக்கானேன்னு! அவர் எங்க எப்ப பாத்தாலும் முதலாளின்னு பணிவா இருப்பாரு. ஆனா என் சேக்காளியெல்லாம், அவனை கிட்டவே சேக்காதன்னு சொன்னதோட விளைவு நான் இவரை பல தடவை அவமானப்படுத்தி இருக்கேன். ஆனா இன்னிக்கு இவர்தான் எனக்கு தெய்வம்!'
'சும்மா இருங்க மொதலாளி! அதெல்லாம் ஒண்ணுமில்லை!'
'இருப்பா! நான் சார்க்கிட்டயாவது சொல்லிக்கிறேன். கடை எரிஞ்சதும் நான் அப்படியே முடங்கிப்போயிட்டேன் சார். பாக்க வர்ற கொஞ்ச நஞ்ச ஆளுகளும் எல்லாம் உன் கவனக்குறைவாலதான் நடந்துச்சுன்னு என்னைத்தான் குறை சொன்னாங்களே ஒழிய , வேற எந்த பிரயோஜனமும் இல்ல!அப்பதான் குமரன் வீட்டுக்கு வந்தாப்புல .! முதலாளி உங்களைப்பாத்துதான் எப்புடி தைரியமா தொழில் பண்றதுன்னு நான் கத்துக்கிட்டேன். நீங்க இப்படி முடங்கிப்போய் கெடக்காதீங்க! இப்பவே எந்திரிங்க, நம்ம கடைக்கு வாங்க ! அதுல கல்லாவுல உக்காருங்க.! லாபத்துல ஆளுக்கு பாதி! நீங்க மறுபடியும் கடையை தொடங்குற வரைக்கும் அங்க கௌரவமா இருங்கன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்துட்டாப்புல!'
இதோ நாலு நாள் ஆச்சு! இந்தக்கடையை என் கடை மாதிரி பாத்துக்குறேன். நாந்தான் சப்ளைலேருந்து எல்லாமே! ஆனா விடமாட்டேங்குறாப்புல! நான் என் கடைக்குத்தான் முதலாளி..! இந்தக்கடைக்கு அவருதான் முதலாளி! என்ன சொல்றீங்க!?
எனக்கு பிரமிப்பில் வாய் பேச வரவில்லை! ஒரு வார்த்தைதான் வந்தது...'சூப்பர்!'
குமரன் ஆரம்பித்தார்..
'சார்! தாழ்ந்தவன் வாழலாம்...ஆனா வாழ்ந்தவன் தாழ்ந்துரக்கூடாது. மொதலாளி ரொம்ப நல்ல டைப்! என் கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கிட்டு தொழில் சொல்லிக்குடுத்தார். நம்மளும் ஹோட்டல் நடத்திரணும்னுதான் ஆரம்பிச்சேன். பல விசயங்களை அவர்க்கிட்டேருந்துதான் கத்துக்கிட்டேன். அவருக்கு இப்புடி ஒரு கஷ்டம் வரும்னு நான் எதிர்பாக்கவே இல்லை! அவ்ரைப்பாத்து பரிதாபப்படுறதை விட்டுட்டு ஏதாவது செய்யணும்னு மனசு சொன்னுச்சு! செஞ்சேன். அவ்வளவுதான் சார்! இதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு பெருமைப்படுறாரு..நான் அவரை கல்லாவிலதான் உக்காரச்சொன்னேன். ஆனா மாட்டேங்கிறார்.'
'அதில்ல குமரா! அப்புறம் எனக்கு ஒழைக்கவே பிடிக்காம போயிடும். இப்படி இருந்துதானே மேல வந்தேன். அதுவும் உனக்கு கால் செருப்பாக்கூட இருக்கலாம். சர்வராத்தானே இருக்கேன். இப்படி இருக்கிறதில் எனக்கு சந்தோஷம்தான்.!'
என்ன மனிதர்கள் இவர்கள்! அடுத்தவன் அழிவை ரசிக்கும் கூட்டத்தில், தன்னை வளர்த்த முதலாளி அழியக்கூடாது என்று நினைக்கும் வேலைக்காரன். ! வேலைக்காரனாகத்தான் இருப்பேன் என்று வைராக்யத்துடன் வலம் வரும் முதலாளி.! காசு பணத்தைவிட நன்றிதான் பெரியது என்று நினைக்கும் அற்புத மனிதர்கள் கையால்தான் நான் சாப்பிட்டேன் என்று எண்ணும்போது, கண்களில் சுரந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை!
எந்தவிதமான உதவிக்கும் நானும் இருக்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு...
கவலையே வேண்டாம் ! ஈரமும் உயிர்ப்பும் உள்ள மனிதர்களுக்கிடையில்தான் நான் வாழ்கிறேன் என்ற மகிழ்ச்சியோடு.... கண்ணில் அடித்த வண்டுக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.
டிஸ்கி: தொடரும் போட்டதற்கு காரணம்...முதலாளிக்கு கடையை மீட்பதில் உதவி செய்யமுடியுமா என்று ஆராய்ந்து, அடிப்படை பொருட்களுக்கான தொகை + கூரை போடும் செலவாக ரூபாய் 69000 க்கு வங்கியில் கடன் ஏற்பாடு செய்து விட்டு...எனக்குத்தெரிந்த தவணைமுறையில் பொருட்கள் விற்பனை செய்பவரிடம் 5 லிட்டர் கிரைண்டருக்கு ஏற்பாடு செய்துவிட்டு எழுதுவோமே என்றுதான். ! (ஏற்பாடு ஆகிவிட்டது . செக் அனேகமாக நாளை கிடைத்துவிடும்.. கிரைண்டர் வந்துவிட்டது)
இதற்கும் காரணம் இருக்கிறது.
ரமேஷ் வைத்யாவின் ஒரு கவிதை
ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலொரு தீயெறிய
கைக்குழந்தை சுமையோடு
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
(நான் கட்டுரையாகவே எழுதினாலும் அயோக்கியனாக இருக்க விரும்பாததால்....)

சுந்தர் அருமையான பதிவு.
ReplyDeleteஉங்கள் உதவும் மனதுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
// மங்களூர் சிவா said...
ReplyDeleteசுந்தர் அருமையான பதிவு.
உங்கள் உதவும் மனதுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//
நன்றி சிவா!
ஏதோ முடிஞ்சதை செய்வோம்.
நிக்ழ்வு மனதை தொட்டுவிட்டது.அந்த டிஸ்கியும் ரொம்ப அருமை.
ReplyDeleteநிக்ழ்வு மனதை தொட்டுவிட்டது.அந்த டிஸ்கியும் ரொம்ப அருமை.
ReplyDeleteஅடிப்படை பொருட்களுக்கான தொகை + கூரை போடும் செலவாக ரூபாய் 69000 க்கு வங்கியில் கடன் ஏற்பாடு செய்து விட்டு...//
ReplyDeleteஇது... இதுதான் தம்பின்றது :).
முன்னாடியே யூகிச்சதுதான் என்றாலும்... நெகிழ வைத்த பதிவு...
ReplyDelete//உங்கள் உதவும் மனதுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்// ரிப்பீட்டே...
நெகிழ வைக்கிறது ரெண்டு பேருக்குமிடையே உள்ள நட்பு:)
ReplyDeleteதுன்பம் வரும்போதுதானே நட்பு புரிகிறது:)
ReplyDeleteஉங்கள் உதவும் மனதிற்க்கும் வாழ்த்துக்கள் சுந்தர்:)
ReplyDelete//சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDeleteநிக்ழ்வு மனதை தொட்டுவிட்டது.அந்த டிஸ்கியும் ரொம்ப அருமை.//
வாங்க சாமான்யன்!
நலமா?
இது ஒரு பகிர்தல்தானே ! நன்றிங்க!
Thekkikattan|தெகா said...
ReplyDelete//இது... இதுதான் தம்பின்றது :).//
வாங்கண்ணா! வேற என்ன பண்றது?
ஏதோ நம்பளால முடிஞ்சது!
உதவும் மனநிலை இயல்பானதுதானே!
நம்மைவிட பொருளாதாரத்தில் கீழே இருப்பவர்களிடம் இருக்கும் உதவும் தன்மை நம்மிடத்தில்(!) எல்லாம் கொஞ்சம் குறைவுதான்!
இருக்கும் நற்பெயரையும் செல்வாக்கையும் வைத்து ஏதோ ஒரு உதவி செய்த திருப்தி!
அவ்வளவுதான். பெரிதாக ஒன்றுமில்லை!
ச்சின்னப் பையன் said...
ReplyDeleteமுன்னாடியே யூகிச்சதுதான் என்றாலும்... நெகிழ வைத்த பதிவு...
வாங்க ச்சின்னப்பையன்!
நன்றிங்க!
//ரசிகன் said...
ReplyDeleteநெகிழ வைக்கிறது ரெண்டு பேருக்குமிடையே உள்ள நட்பு:)
துன்பம் வரும்போதுதானே நட்பு புரிகிறது:)
உங்கள் உதவும் மனதிற்க்கும் வாழ்த்துக்கள் சுந்தர்:)//
வாங்க ரசிகன்..!
கண்டிப்பா..துன்பம் வரும்போதுதான் உண்மையான நண்பர்கள் அடையாளம் தெரிவார்கள்.
நன்றிங்க! (உதவும் மனம் என்பது அடிப்படை குணம்தானே?)
இந்தப் பதிவும் உங்களது உதவியும் மனதை நெகிழ வைத்தது. நன்றி.
ReplyDeleteமனிதர்கள் இருக்கிறார்கள்!!
sureka!
ReplyDeletethere is an idea for over all that u can make them aware of the fire insurance, and theft insurance. This will help them a lot. Most people does not know about this thing.mostly the village side are not knowing about the necessity of insurance. it will support them during this kind of accidents.
ரொம்ப நல்ல பதிவு. உங்கள் உதவிக்கு என் பாராட்டுகள்.
ReplyDeleteஅருமையண்ணே!கஷ்டப்படுறவன பார்த்து உச்சு கொட்றவன விட உதவுறவன் பெரிய ஆளு!நீங்க உண்மையிலேயே பெரிய ஆளுண்ணே!
ReplyDeleteஉணவகம் அரம்பித்துவிட்டார? அவரின் உணவாக முகவரி கிடைக்குமா?
ReplyDeleteஎன்னவென்று தெரியவில்லை அங்கு சென்று சாபிடவேண்டும் போல உள்ளது :)