இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!

புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை!

புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது ! 

 இம்மாவட்ட எல்லைக்குள் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்..புதுக்கோட்டை மாவட்டம் என்று தன் முகவரியில் போட்டுக்கொள்வதில்லை. 

 

புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம். 

 புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருக்கும் மாத்தூர் தொழிற்பேட்டையின் அனைத்து தொழிற்சாலைகளும் பின் தங்கிய மாவட்டத்திற்கான அனைத்து சலுகைகளையும் பெற்று இடம் பெற்றுக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எந்த பயனையும் அளிக்காமல் செயல்பட்டு வருகின்றன.

 இப்படியே படிப்படியாய் நம் சகிப்புத்தன்மையை ஆழம் பார்த்தவர்கள் இப்போது தொகுதியிலும் கைவைத்திருக்கிறார்கள். ஒரு தேசமாக, தனியாக ஆட்சிபுரிந்த ஒரு நகரம் சார்ந்த மாவட்டத்தை துண்டு துண்டாக்கி மற்ற தொகுதிகளோடு இணைத்திருக்கிறார்கள். இதையும் புதுகை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்! இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை! ஏனெனில் அடுத்ததாக நாடாளுமன்றத்தொகுதிகளை அப்படியே மாவட்டமாக அறிவித்தால்...புதுக்கோட்டை தன் கடைசி அடையாளமான மாவட்டம் என்ற பெயரையும் இழந்து நிற்கும்.....

பின்னர் மன்னர் ஆண்ட ஊர் மாவட்டத்தையும் இழந்த கதையாகிவிடும். 

 பத்து லட்சம் மக்கள்தொகை இருந்தால்தான் நாடாளுமன்றத்தொகுதி என்கிறார்கள். மக்கள்தொகை அந்த அளவு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாரம்பரியம் மிக்க மாவட்டத்துக்கு விதிவிலக்கே கிடையாதா? அப்படியே இல்லையென்றாலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டி பிரச்சாரம் செய்யும் அரசே, புதுக்கோட்டை மட்டும் கட்டுப்பாடில்லாமல் மக்கள்தொகையை அதிகப்ப்டுத்திக்கொண்டால் பாராளுமன்றத்தொகுதி கிடைக்கும் என்கிறதா? உலகத்தில் பாரம்பரியத்துக்கு எப்போதும் ஒரு மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டுக்குள்ள எந்த ஒரு அடையாளமும் இல்லாத வாட்டிகன் என்ற நகரம் தனி நாடாக அறிவிக்கப்பட்டிருப்பது இதை ஒட்டித்தான். பின் இவ்வளவு நாள் எதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தொகுதியாக இருந்தது.?
நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் தொகுதியை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்!
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி மக்கள் இனியும் பொறுக்கப்போவதில்லை. இதை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மீண்டும் வெவ்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தப்ப்ட்டு வருகிறது. எது நடந்தாலும் ஒரு பாரம்பரியம் மிக்க பகுதி தன் அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்பதை இங்கிருக்கும் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை!

Comments

 1. புதுக்கோட்டை சமஸ் தானமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத் திற்கென்று தனி சிறப்பும் உண்டு. புதுக்கோட்டை வருவாய் மாவட்டம், மாவட்ட அளவில் ஒன்றாகவும், நாடாளுமன்றத்தொகுதி அளவில் வெவ்வேறாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதால், இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  ReplyDelete
 2. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை

  ReplyDelete
 3. அடக்கொடுமையே இம்புட்டு நாளா
  பாரதிதாசன் பல்கழைக்கழகம் திருச்சியைச் சேர்ந்ததுன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

  ReplyDelete
 4. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை

  மிகம் பெரிய பிரச்சினைன்னு சேர்த்து வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 5. Delimitation....is a weapon that may well be a double edged sword.Indeed , if we were to have the entire Country go through this excercise Uttar Pradesh may, I repeat, MAY , not have the power to select the Prime Minister as it has today. Tamil Nadu , having successfully implemented the Family Planning program of the 60s and 70s may even lose its present pre eminent position of 35 out of 544....assuming 544 is fixed.Hence ALL political parties (national/regional ;big/small) are afraid to enter this excercise.....they are happy to do minor tinkering and Painting..Maybe thats why ...

  ReplyDelete
 6. வாங்க புதுகைச்சாரல்...!

  //இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.//

  அதுதான்..அதுதான்...நாங்க போராடிக்க்கிட்டிருக்கோம்.

  முடிஞ்சா ஜனாதிபதிக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்களேன்.

  ReplyDelete
 7. //புதுகைத் தென்றல் said...

  அடக்கொடுமையே இம்புட்டு நாளா
  பாரதிதாசன் பல்கழைக்கழகம் திருச்சியைச் சேர்ந்ததுன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.//

  வாங்க வாங்க!

  இது தெரியாதா?

  ReplyDelete
 8. //Mohan's Musings said...
  ...they are happy to do minor tinkering and Painting..Maybe thats why ...//

  வாங்க சார்..! நல்லா இருக்கீங்களா..?

  ஆமா அப்படிச்செஞ்சுதான், காய விட்டிருக்காங்க! நம்மளைக்கேக்கவே இல்லை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..