அப்துல்லா என்ன செய்தார்?
எவ்வளவோ
கையில் இருந்தும்
செய்ய மனமில்லாதவர்கள் மத்தியில்
ஒரு சதுரங்க வீராங்கனைக்கு
சகஜமாக உதவிகள் செய்து
எங்கள் அத்துனை பேரின் மனத்திலும்
அழியா இடம்பிடிக்கும்
அப்துல்லாவே!
நீங்கள் என்றென்றும்
அன்புடன்
நட்புடன்
அளவில்லா செல்வத்துடன்
நீண்ட ஆயுளுடன்
நிறைவான மகிழ்ச்சியுடன்
ஆரோக்கிய உடல்நிலையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!
அத்தனை வாழ்க ! வும்
உங்களுக்காகவும்
இன்னும் உங்கள்
உதவிக்காகக்காத்திருக்கும்
இயலாதவர்களுக்காகவும்!
இறையருள் என்றும்
உங்களிடம் நிலைக்கட்டும்!
இயற்கையும் உங்களுக்கு
எல்லாமும் அளிக்கட்டும்!
நண்பர் புதுகை அப்துல்லா....
தலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை
எழுதியிருந்தார்.
அதில் வெண்பூவின் பின்னூட்டத்தில்
இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிரதிபலிப்புதான் இந்தப்பதிவு!
வாழ்த்துக்கள் அப்துல்லா.
ReplyDeleteஇறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.
வாழ்த்துக்கள் அப்துல்லா.இறைவன் உங்களுக்கு எல்லா அருள் வளங்களையும் அருளட்டும்.
ReplyDelete//
ReplyDeleteநீங்கள் என்றென்றும்
அன்புடன்
நட்புடன்
அளவில்லா செல்வத்துடன்
நீண்ட ஆயுளுடன்
நிறைவான மகிழ்ச்சியுடன்
ஆரோக்கிய உடல்நிலையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!
//
மன நிறைவாக சந்தோசமாக இந்த வரிகளை ரிப்பீட்டோ ரிப்பீட்டுகிறேன்...
வாழ்த்துக்கள் அப்துல்லா.இறைவன் உங்களுக்கு எல்லா அருள் வளங்களையும் அருளட்டும்.
ReplyDeleteநான் நேற்றே அவரை மனமார வாழ்த்தியாகி விட்டது எனது பதிவிற்கு அவர் இட்டிருந்த பின்னூட்டத்திற்கான பதிலில்.
ReplyDeleteகமல் சார் சொல்றமாதிரி
ReplyDeleteஇதுக்கெல்லாம் பெரிய ஆளுங்க வரமாட்டாங்க!
நாமதான் நமக்குள்ள இப்படி வாழ்த்திக்கணும்..
அதை சிறப்பாகச்செய்த
சிவா..
தமிழ்பிரியன்
வெண்பூ
கடையம் ஆனந்த்
ராமலக்ஷ்மி க்கு நன்றிகள் பல!
அண்ணாச்சி அப்துல்லாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..இப்படி ஒருவர் நண்பராய் இருப்பது நமக்குப் பெருமை..
ReplyDeleteஅன்பின் சுரேகா!
ReplyDeleteஉலகில் இதுவரை யாரும் செய்யாத காரியத்தை நான் செய்யவில்லை.பலரும் பலருக்கு செய்கின்ற ஓன்றைதான் நானும் செய்தேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கும் முன் என்னை மிகவும் சிறிதாக உணர்கிறேன்.
நன்றி
இதுபற்றி நான் எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றொரு பதிவிட்டிருந்தேனே... படித்தீர்களா சுரேகா?
ReplyDeleteநன்றி!
மென்மேலும் உதவிகள் பல புரியும் அளவுக்கு பொருளாதாரத்தில் நீங்கள் உயர வாழ்த்துக்கள். மனமிருக்கும் உங்கள் போன்றவரிடம் பணமிருக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் அப்துல்லா
ReplyDeleteஇனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துகள்
தங்களின், இயலாதவர்களுக்கு உதவும் நல்லுள்ளம் நான் அறிந்ததே !
மிகப் பெரியவனான இறைவன் தங்களுக்கு எல்லா நலனையும் - அனைவருக்கும் உதவும் வகையில் செல்வத்தினையும் அருள பிரார்த்திக்கிறேன்.