Pages

Wednesday, December 17, 2008

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் !


உண்மையில், மனதில் உறுத்திக்கொண்டிருந்தவற்றை கொட்டிவிடும் அவசரத்தை குறைத்து, நிதானமாக எழுத யத்தனித்து இன்று வெளிப்படுகிறது. இதுவுமே அவசரமோ என்றுதான் மனம் நினைக்கிறது. (இந்திய அரசைவிட மெத்தனம் இல்லை!) ஆனாலும் தெகா கொடுத்த கொக்கி இத்துப்போய்விடக்கூடாது என்பதால்.....இதோ..!

இந்தியாவில் ஏன் இந்தத்தீவிரவாதம்..?

இதை நான் உலக அரசியல், தேச அரசியல், அரசு, தனிமனிதன் என்ற வகையில் அலச விரும்புகிறேன்.
(இடையில் துளசி டீச்சர் கேட்டிருந்த இயல்பான கேள்விகளையும் உள்ளம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.)


உலகளாவிய அளவில், எங்குமே ஒரு உள்ளார்ந்த வெறுப்பு புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு தேசமும் அதனதன் வழியில் வெளிப்படுத்தவே செய்கின்றன. ஆப்கனில் ஒசாமா இருக்கிறார். அவரைப்பிடிக்கவேண்டுமென்று தான் வளர்த்த தாலிபனிடம் கேட்டுப்பிடிக்காமல், தன் நாட்டில் அவன் ஆட்கள் நுழைந்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவும், வீறுகொண்டு எழுந்து இன்றுவரை வேட்டையாடும் அமெரிக்காவின் செயலில் எந்த வகை மிதவாதம் இருந்தது? 

உலகத்தை அழிக்கும் ரசாயன ஆயுதத்தை- "ஒளிச்சுவச்சிருக்கான்..நான் பாத்தேன்" என்று கூறும் மூன்றாம் வகுப்பு மாணவனைப்போல், உலகிடம் சொல்லிவிட்டு அதற்கு மேலை நாடுகளின் படைபலத்துடன் ஒரு தேசத்தையே சூறையாடியதில் எந்த மாதிரியான மிதவாதம் இருந்தது?

விவசாயிக்கு அவன் விளைபொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதபோது, எரிபொருள் என்ற ஒற்றை ஆதாரத்தை வைத்துக்கொண்டு உலகப்பொருளாதாரத்தையே ஆட்டிப்பார்க்க நினைக்கும் வளைகுடா மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் எல்லா செயல்பாடுகளும் ஒருவிதமான தீவிரவாதமே!

இதற்கு பதிலாக உணவு உற்பத்தி செய்யும் நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு கிலோ அரிசி என்று பண்டமாற்று முறைபோல் கையாண்டால் என்ன ஆகும் நிலைமை?

என்னிடம் மனிதவளம் இருக்கிறது. என்னால் எல்லாப்பொருட்களையும் ,- அடுத்தவர் ஆரோக்யத்தை கிடப்பில் போட்டுவிட்டு -தரங்கெட்டு தயாரிக்கமுடியும், அதையும் மலிவுவிலையில் உலகெல்லாம் விற்கமுடியும் என்று நினைக்கும் சீனாவின் நினைப்பில் எத்தனை பங்கு மிதவாதம் இருக்கிறது?

என் எல்லையில் எந்தத்தீவிரவாதியும் இல்லை...அவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று உலுலுவாங்காட்டிக்கு சொல்லிக்கொண்டே ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் இன்றுவரை தீவிரவாதத்தை தீவிரமாக வளர்த்து, அதற்கு அடிக்கடி பலியாகும் பாகிஸ்தானின் செயலில் எவ்வளவு மிதவாதம் உள்ளது?

ஒரு இனத்தின் ஒரு சிறுபங்கு மக்கள் அமைப்பாக மாறி, தனி நாடு கேட்டு போராடும் வேளையில், அவர்களுடன் பேசாமல், அந்த இனத்தையே அழித்துவிட்டுத்தான் ஓய்வேன் என்று கருவிக்கொண்டு அலையும் ராஜபக்ஷே தேசத்தின் செயலில் எவ்வளவு சாந்தம் உள்ளது..?

ஆக்கிரமிப்பதே எமது உலகக்கடமை என்று வரிந்துகட்டிக்கொண்டு செயல்படும் நாடுகள் அனைத்துமே தீவிரவாதிகள்தான்...!

ஆக...ஒரு இயக்கம் என்றில்லை!...ஒவ்வொரு தேசமுமே தீவிரவாத நிஜமுகத்தை - அரசாங்கம் என்ற முகமூடியால் மறைத்து
இப்படித்தான்  இயங்குகின்றன...!இனி தேசத்துக்குள் வருவோம்...

(தொடரும்...!)

6 comments:

 1. எழுத ஆரம்பிச்சாச்சா? இப்படியாக தொடங்கியிருக்காய், முகமூடிக்குப் பின்னால் தனிப்பட்ட முறையில் நாடுகளின் சுய-ஆர்வம் சார்ந்த திவீரவாத திணிப்பு என்று... எப்படியாக முடிக்கிறாய் என்று படிக்க ஆவலுடன்...

  ReplyDelete
 2. இதை நான் உலக அரசியல், தேச அரசியல், அரசு, தனிமனிதன் என்ற வகையில் அலச விரும்புகிறேன்.//

  ஆஹா, அருமையான அலசல் தலைவரே.

  அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 3. வாவ்! கவிதைக்கு அப்புறம் கேள்விக்கணைகளா?

  //விவசாயிக்கு அவன் விளைபொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதபோது//

  ம்ம்..:(

  //தரங்கெட்டு தயாரிக்கமுடியும், அதையும் மலிவுவிலையில் உலகெல்லாம் விற்கமுடியும் என்று நினைக்கும் சீனாவின் நினைப்பில் எத்தனை பங்கு மிதவாதம் இருக்கிறது//

  அட, ஆமாம்!

  எல்லாக் கேள்விகளும் சூப்பர்..அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்!

  ReplyDelete
 4. தொடருங்கள் சுரேகா !!!

  கலக்கல் !!!!!!!!

  ReplyDelete
 5. புஷ் ஒரு பத்திரிக்கையாளரிடம் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த காரணத்தை கேட்கையில் சொல்கிறார்‍‍ ஈராக் பற்றி எமது உளவுத்துறை தவறான செய்தி(regrading availbility of wmd=weapons of mass destruction)கொடுத்து விட்டதென! இத்தனை கொலைகளுக்குப் பின்னர் எத்தனை சவாகசமாக பொறுப்பற்ற பதில்.

  ReplyDelete
 6. தொடருங்கள் சுரேகா !!!

  கலக்கல் !!!!!!!!

  ReplyDelete